கந்த முருகேசனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
வடமராட்சியில் அமைந்துள்ள தென் புலோலியில் கந்தப்பர் தெய்வானைப் பிள்ளை தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் யாவராலும் அழைக்கப்பட்ட மூதறிஞர் கந்தமுருகேசனார். இப்பெரியாரின் வரலாறும் பணிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
 
 
அறிஞர் கந்தமுருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெ.மி.த. கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார். இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார். பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும் தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.
 
 
கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்குப் பயன் சொன்னவர். பின்பு அதைத் தொடர முடியவில்லை. இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் பயன் சொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். சிறந்த சிந்தனையாளராக மாறி பொதுவுடைமை தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.
 
 
'தமிழ்த் தாத்தா' என்று யாவராலும் அழைக்கப்பட்ட கந்த முருகேசனாரின் உறைவிடம் இயற்கை அழகு படைத்த சூழலிலே அமையப்பெற்று 'தமிழகம்' என்ற நாமத்தை பெற்று அவ்வூர் மக்களுக்கு கல்விச் செல்வத்தை பாரியென வாரி வழங்கினார். கிரேக்க ஞானி சோக்கிரட்டீசின் விசாலமான நெற்றியும் உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி தாகூரின் கண்களும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்ஷாவின் வெள்ளித் தாடியும் கொண்டவராக புலோலி மக்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார்.
 
 
கந்தமுருகேசனாரின் உறைவிடம் 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. அதனை மகாகவி தாகூர் கண்ட 'சாந்திநிகேதன்' என்று அழைத்தால் மிகையாகாது. இயற்கைச் சூழலில், மல்லிகைப் பந்தலின் கீழ் வெண் மணற் பரப்பில், இப் பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும். இங்குதமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், பூமி சாஸ்திரம், கணிதம் யாவும் இவரால் கற்பிக்கப்பட்டன. இக்கல்விக் கூடத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, அன்பு, அமைதி யாவும் பேணப்பட்டன.
 
 
கந்தமுருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக, முன்னாள் புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் இன்று பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்புக் கிளை தலைவராகவும்) சமாதான நீதிவானாகவும் இருக்கும் சே. ஏகாம்பரநாதனின் பெரு முயற்சியினால் வெளியிடப்பட்டது.
 
 
'தமிழ்த் தாத்தா' கந்த முருகேசனாருக்கு அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார். ஈழத்தின் மிகப் பெரிய பகுத்தறிவுச் சிந்தனாவாதியாக, தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் கொண்ட மானிடனாக வாழ்ந்த மாபெரும் கலைப் பொக்கிசமான கந்த முருகேசனார் 14.06.1965 ஆம் ஆண்டு தமது 63 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/596083" இருந்து மீள்விக்கப்பட்டது