பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பொய்க் கர்ப்பம், பொய்க் கருப்பம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான எழுத்துக்கூ...
தலைப்பு மாற்றத்துக்கேற்ப
வரிசை 1:
'''பொய்க் கருப்பம்''' அல்லது '''பொய்க் கர்ப்பம்''' (''false pregnancy'') என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கில் (மனிதரிலோ அல்லது வேறு [[முலையூட்டி]]களிலோ) கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும். பொதுவாக இது [[நாய்]], [[எலி]] போன்ற [[விலங்கு]]களிலேயே அதிகமாக இருக்கிறது. மனிதர்களில் இந்த பொய்க்கர்ப்ப நிலையானது மிகக் குறைந்த அளவிலும், பொதுவாக உளவியல் அளவிலான தாக்கமே இதற்குக் காரணமாகவும் அமைகின்றது.<ref>[http://www.falsepregnancy.net/ False Pregnancy In Women] Retrieved on 2010-01-19</ref>
 
இந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கர்ப்பம்கருப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கும். பொதுவாக உடலின் [[நாளமில்லாச் சுரப்பி|அகஞ்சுரக்கும் தொகுதி]]யில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் [[வளரூக்கி]]களின் (ஹோர்மோன்கள்) அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கர்ப்பம்கருப்பம் தொடர்பான உடல் சார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
 
இது பெரும்பாலும் [[மாதவிலக்கு|மாதவிலக்கை]] நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.
வரிசை 9:
 
==காரணங்கள்==
இந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால் எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது.<ref> AJ Giannini, HR Black. Psychiatric,Psychogenic and Somatopsychic Disorders Handbook. Garden City, NY. Medical Examination Publishing,1978. Pp.227-228. ISBN 0-87488-596-5.</ref> இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கர்ப்பம் அடைவதைகருவுறுவதை அளவுகடந்த ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ அல்லது கர்ப்பம்கருப்பம் தொடர்பான அளவுகடந்த பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் தெரியத் தொடங்கி விடுகிறது.
 
==நோயறிதல்==
வரிசை 18:
 
== பிற விலங்குகளில் ==
மனிதர்களில் பொய்க்கர்ப்பம்பொய்க்கருப்பம் என அழைக்கப்படும் இது பிற விலங்குகளில் ''போலிச்சினை'' என அழைக்கப்படுகிறது. [[நாய்]], [[பூனை]], [[எலி]] போன்ற பாலூட்டிகள் முடையடித்த (estrus) பின் மலட்டு (infertile) ஆணுடன் உடலுறவு கொள்ளுமாயின் கருவுறுதல் நடைபெறாது. ஆனாலும் புரோஜெஸ்டிரான் (''progesterone'') சுரப்பு தொடர்வதால் போலிப்பிரசவ நிலை ஏற்படும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது