இந்துஸ்தானி இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==அமிர்குஸ்ரு==
வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.
 
 
==அறிமுகம்==
அமிர்குஸ்ருவின் இயற்பெயர், அபூ-அல்-ஹசன்-யானுமித்-தின்-குஸ்ரு என்பதே ஆகும். இவரின் தந்தையார் துருக்கி நாட்டவர். இவர்கள் பின்னர் துருக்கியினின்று வெளியேறி இந்தியாவின் பட்டியாலி என்ற இடத்தில் குடியேறினார்கள்.
 
 
இவர் தன் 7 வயதில் தன் தந்தையாரை இழந்தார். சிறு வயதிலேயே உருது, பாரசீக மொழிகளில் பாடல் இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்தார். குறுகிய காலத்திற்குள் பெருமளவு பாடல்கள் இயற்றினார். இவர் ஹிந்தி மொழிகளில் இயற்றிய பாடல்கள் இன்றும் பாடப்படுகிறன.
 
 
==பட்டமும், அறிமுகப்படுத்திய இராகங்களும்==
இவர் டெல்லி சமஸ்தான சுல்தானின் ஆஸ்தான வித்துவானாக விளங்கினார். ஜலால் உத்தின் கில்ஜி என்பவர் டெல்லி சுல்தானாக இருந்த போது இவருக்கு "அமிர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் அரேபிய, இந்திய, பாரசீக இசை வகைகளை ஒப்பு நோக்கினார். அவர் காலத்தில் பிரபலமாக இருந்த பல கஷ்டமான பாடல்களை மாணவர்கள் பாட என இலகுவாக்கி வழிவகை அமைத்தார். பல புதிய இராகங்களை உருவாகினார். உ+ம்: யமன்கல்யாண், பூர்வி, பீலு, பஹார் என்பன.
 
 
==அறிமுகப்படுத்திய உருப்படிகள், தாளங்கள்==
புதிய உருப்படி வகைகளான குல்பானா, தரானா, குவாலி-கயல் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரே ஸிதார், தபேலா, டோலக் ஆகிய இசைக்கருவிகளை உருவாக்கினார். மேலும் ஜால்-திரிதால், பாஷ்டோ போன்ற புதிய தாளங்களையும் அறிமுகப்படுத்தினார்.
 
 
==சிறப்புத்தன்மையும், இறப்பும்==
இவர் சிறந்த பாடகராக விளங்கினார். ஒரு முறை கோபால் நாயக் அரசவையில் பாடும் பொது மறைந்திருந்து கேட்டு விட்டு அனைவரும் பிரமிக்கும் படி மறுபடி அதை பாடிக்காட்டினார். இவர் கி.பி 1325ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
 
==தான்சேன்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துஸ்தானி_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது