"எ. சா. ராஜசேகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (பகுப்பு 12வது மக்களவை உறுப்பினர்)
==குற்றச்சாட்டுகள்==
செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்தாலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும் இவருடைய பெயர் அடிபட்ட வண்ணம் இருந்ததும் குறிப்பிடத் தக்கது. சந்தூர் மின் நிறுவனம், ஜகாத்தி பதிப்பகம், பாரதி சிமிண்ட் கார்ப்பரேசன் போன்ற நிறுவனங்கள் மூலம் இவருடைய குடும்பம் வரம்புமீறி சொத்துக்கள் சேர்த்ததாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார். வர்த்தக உலகத்தை உலுக்கிய சத்யம் கணினி நிறுவன ஊழலிலும் இவருக்குத் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு நிலவியது. ரகுராம் சிமிண்ட் நிறுவனத்துக்காக (அதில் இராஜசேகர ரெட்டியின் மகன் ஓர் இயக்குநர்) 487 ஏக்கர் நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் இவர் மீது அரசியல் குற்றச்சாட்டு இருந்தது. 2007ஆம் ஆண்டு கம்மம் காவலர் துப்பாக்கி சூட்டில் எட்டுபேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று இவர் பதவி விலக வேண்டும் என்கிற குற்றச்சாட்டு வலுப்பெற்றிருந்தது.
 
==குடும்ப வாழ்க்கை==
இவருடைய மனைவி பெயர் விஜய லட்சுமி. இவருடைய மகன் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி ஓர் அரசியல்வாதி. இவருடைய மகள் சர்மிளா.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/600253" இருந்து மீள்விக்கப்பட்டது