விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 481:
 
::[[பூமி]] - நல்ல கட்டுரை - புரியும்படியாக இருக்கிறது (டூல்கிட் கொடுக்கும் ஜுனூன் தமிழை பெரும்பாலும் மாற்றி எழுதியுள்ளார்)--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 05:49, 30 செப்டெம்பர் 2010 (UTC)
 
== சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் காண்பது பற்றிய எனது கருத்து ==
 
கட்டுரைகளில் தரம் விரும்பத்தக்க அளவில் இல்லாததற்கு 1) மொழிபெயர்ப்பாளர்களின் திறனின்மை, 2) இலக்கை முடிக்க வேண்டிய பணிச்சுமை அழுத்தம், 3) விக்கிப்பீடியாவின் நடை மற்றும் தர நிலையைப் பற்றிய விழிப்புணர்வு இன்மை ஆகிய இவையே காரணம் எனக் கருதுகிறேன்.
 
மேலும் 8 மாத காலத்தில் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரைகளை 3 அல்லது 4 மாத காலத்தில் (மீண்டும் அதே இலக்குப் பணிச்சுமையுடன்) திருத்த முயற்சித்ததால் அதுவும் திருப்திகரமான விளைவுகளைக் கொடுக்காமல் போயிருக்கலாம்.
 
எனது கருத்து என்னவெனில், இத்தனை சிக்கல்களுக்கு இடையில் செய்த பழைய கட்டுரைகளைக் கொண்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் காண்பதை விட, புதிய கட்டுரைகளைச் செய்ய வைத்து அவற்றின் தரத்தை வைத்து புதிய சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணலாம் என்பது.
 
தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற அக்கறையில் ஆரம்பத்தில் சரியாகச் செய்துவிட்டு மீண்டும் போகப் போக தரம் குறையலாம் என்பது இதில் உள்ள சிக்கலாகக் கருதப்படலாம், இருப்பினும் இனி மொழிபெயர்ப்பு செய்யப்படும் கட்டுரைகளை மொழிபெயர்ப்பாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் செய்வார்கள், அவர்களும் கண்டிப்பான மறுஆய்வு முறைகளை நடைமுறைப்படுத்துவார்கள், அதுமட்டுமின்றி கண்டிப்பான தரக் கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டு அவை விக்கி சமூகத்தாராலும் கண்காணிக்கப்படும், ஆகவே தரம் பற்றிய சிக்கல்கள் இவ்வழியில் ஏற்படாது என நம்பலாம்.
 
மேலும் தரப்பிரச்சனைகளுக்கு இலக்குப் பணிச்சுமை ஒரு முக்கியமான காரணம் என்பதால், இனி குறைவான அளவிலேயே கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படும் சூழல் நிலவுவதால், மொழிபெயர்ப்புக்கும் மறுஆய்வு மற்றும் திருத்தத்திற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்பதால் இதனாலும் தரம் மேலும் மேம்படும்.
 
சுருக்கமாக இப்போது மொழிபெயர்ப்பாளர்களின் தரம் என்ன என்பதை இப்போது அவர்கள் செய்யும் கட்டுரைகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்பதே எனது கருத்து. தொடர்ந்து அதே சிறந்த தரத்தை நிலைத்திருக்கச் செய்வது அவர்கள் பொறுப்பு, மேலும் கட்டுரைகள் குறைவாகவே உருவாக்கப்படும் என்பதால் அக்கறையுள்ள விக்கி சமூகத்தாரும் அவ்வப்போது தோராய அடிப்படையில் கட்டுரைகளை மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கலாம். இதனால் தொடர்ந்து தரமிக்க கட்டுரைகள் தமிழ் விக்கிக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புள்ளது.
 
அதற்கு மொழிபெயர்ப்பாளர்களே முதல் பொறுப்பானவர்கள். அவர்கள் தங்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் பல மறுஆய்வு சுற்றுகளுக்குப் பின்னரே விக்கியில் கட்டுரைகள் பதிவேற்றப்பட வேண்டும். விக்கி சமூகத்தார் அதற்குப் பின்னான தர மதிப்பீடுகளையும் தோராய முறையில் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
 
மூத்த விக்கியர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எதிர்பார்க்கிறேன்.
 
நன்றி! அன்புடன்
--[[பயனர்:Shanthalan|சாந்த குமார்]] 09:30, 30 செப்டெம்பர் 2010 (UTC)
 
== தேவைப்படும் தலைப்புகள் ==
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு".