மசினோ கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "பிரான்சு"; Quick-adding category "பிரான்ஸ்" (using HotCat)
சி உதி
வரிசை 2:
'''மஷினோ கோடு''' ([[பிரெஞ்சு]]:''Ligne Maginot'', [[ஆங்கிலம்]]:''Maginot line'') என்பது [[பிரான்சு]] நாட்டின் கிழக்கெல்லையில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] முன்னர் கட்டப்பட்ட ஒரு அரண் கோட்டைக் குறிக்கும். அப்போதைய பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே மஷினோவின் பெயரே இக்கோட்டுக்கு ஏற்பட்டது.
 
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இயங்கா நிலைப்போரே இனி வருங்காலத்தில் நடக்கும் என்று பிரெஞ்சு [[போரியல் மூல உபாயம்|மேல்நிலை உத்தியாளர்கள்]] கருதியதால், [[ஜெர்மனி]]யுடனான எல்லையில் ஒரு பலம் வாய்ந்த அரண் கோட்டைக் கட்ட முடிவு செய்தனர். [[1930]]ல் கட்டுமானப்பணி தொடங்கி [[1939]]ல் முடிவடைந்தது. மூன்று [[பில்லியன்]] [[பிராங்க்]]குகள் இதற்கு செலவாகின. கிழக்கே [[சுவிட்சர்லாந்து]] எல்லையிலிருந்து மேற்கே ஜெர்மனி எல்லை முடிந்து [[பெல்ஜியம்]] எல்லை ஆரம்பமாகும் வரை வரை இந்த அரண் கோடு அமைந்திருந்தது. அந்த நிலைக்குப் பிறகு [[ஆங்கிலக் கால்வாய்]] வரையிருந்த அரண் நிலைகள் மஷினோ கோட்டின் பகுதியாக கருதப்பட்டாலும் அவை ஜெர்மானிய எல்லையை ஒட்டி அமைந்திருந்த அரண் நிலைகளைப் போல பலமானவையாக இருக்க வில்லை. மஷினோ கொட்டுக்கு போட்டியாக [[ஹிட்லர்]] ஜெர்மனியின் எல்லையில் [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டைக்]] கட்டினார்.
 
கான்கிரீட் கோட்டைகள், டாங்கு தடைகள், எந்திரத் துப்பாக்கி தளங்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மஷினோ அரண் நிலையை ஜெர்மானிய படைகளால் நேரடியாகத் தாக்கி ஊடுருவ முடியாது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரில் மேற்கு போர்முனையில் போர் [[பிரான்சு சண்டை|துவங்கி]] [[பெல்ஜியம் சண்டை|நில நாட்களிலேயே]] ஜெர்மானிய படைகள் எளிதில் மஷினோ கோட்டைத் தாக்கி ஊடுருவி விட்டன.
"https://ta.wikipedia.org/wiki/மசினோ_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது