"விடத்தல்தீவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82,562 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| பின்குறிப்புகள் =
}}
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் பிரதான கிராமங்களுள் ஒன்றான விடத்தல் தீவு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாக விளங்குகின்றது.
'''விடத்தல் தீவு''' [[இலங்கை]]யின் [[வடக்கு மாகாணம், இலங்கை|வடக்கு மாகணத்தின்]] [[மன்னார் மாவட்டம்|மன்னார் தேர்தல் மாவட்டத்தில்]] <ref>[http://www.fallingrain.com/world/CE/31/Vidattaltivu.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]</ref>இலங்கையின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். [[2008]] ஆம் ஆண்டுவரை [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] முக்கியத் தளமொன்று இங்கே அமைந்திருந்தது. <ref name="Sri Lanka: Vidattaltivu Liberated; terrorists suffer fatal blow">{{cite news|url=http://www.lankamission.org/content/view/532/2/|title=Sri Lanka: Vidattaltivu Liberated; terrorists suffer fatal blow|date=07-16-2008|publisher=www.lankamission.org|accessdate=2008-07-17}}</ref> [[இந்திய அமைதி காக்கும் படை]]யினர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் முதன் முதலாக புலிகள் வசமிருந்து [[ஜூலை 16]] 2008 அன்று இத்தளம் படையினர் வசமானது.<ref name="Sri Lanka military captures key northern town - govt">{{cite news|url=http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-34539020080716|title=Sri Lanka military captures key northern town - govt|date=Jul 16, 2008|publisher=[[Reuters]]|accessdate=2008-07-16}}</ref><ref name="Sri Lankan troops capture rebel base in north">{{cite news|url=http://news.xinhuanet.com/english/2008-07/16/content_8554781.htm|title=Sri Lankan troops capture rebel base in north|date=2008-07-16|publisher=[[Xinhua]]|accessdate=2008-07-16}}</ref>
 
 
மாவட்ட ரீதியாக நோக்கும் போது மன்னார் இலங்கையின் வட மாகாணத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது வடக்காக கிளிநொச்சி மாவட்டத்தையும், கிழக்காக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும் தெற்காக புத்தளம் மாவட்டத்தையும் மேற்காக இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. மன்னார் மாவட்டத்தையும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூன்று உள்ளன. அவையாவன, புத்தளம் - மன்னார் வீதி, மதவாச்சி - தலை மன்னார் வீதி மற்றும் மன்னார் - சங்குப்பிட்டி வீதி என்பனவாகும்.
 
இவற்றுள் மன்னார் - சங்குப்பிட்டி வீதி இலங்கையின் வட பிரதேசங்களை மன்னாருடன் இணைக்கும் பாதை என்பதால் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களினூடாகச் செல்லும் பொருளாதார, சமூக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக விளங்குகின்றது. இந்நெடுஞ்சாலையின் வழியாக மன்னாரிலிருந்து 15 ஆவது மைல் கல் தூரத்தில் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் பள்ளமடு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பள்ள மடுவிலிருந்து ஆரம்பித்து மேற்காக சுமார் 4 கிலோ மீற்றர் வரை விஸ்தீரனமாகக் கொண்டு விடத்தல் தீவுக் கிராமம் அமைந்துள்ளது.
 
 
பூகோள ரீதியாக விடத்தல் தீவின் தனியான அமைவிடமானது வட அகலாங்கு 80◦ 48₺ தொடக்கம் 90◦ 12₺ வரைக்கும் கிழக்கு நெடுங்கோடு 79◦ 58₺ இற்கும் 80◦ 12₺ இற்குமிடையில் அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக நோக்கும் போது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட விடத்தல் தீவின் சுற்றயல் பிரதேசங்கள் சதுப்பு நிலமாகக் காணப்படுவதால் வற்றுப்பெருக்கு காலங்களில் சதுப்பு நிலம் நீரினால் நிரம்புவதனால் இக்கிராமம் கடலால் சூழப்பட்ட தீவு போன்று காட்சியளிக்கும். பெருங்களிப்பற்று என்ற இயற்கைப் பெயரைக் கொண்ட இக்கிராமம் பெயரளவிலே தீவு எனக் கொள்ளப்பட்டாலும் இது ஒரு தீப கற்பமாகவே காணப்படுகின்றது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட இக்கிராமம் காவேரியாறு கடலோடு கலக்கும் கழிமுகத்திலே காவேரிப் பூம்பட்டினம்க்
 
விடத்தல்தீவுக் கிராமம்
 
அமைந்தது போல மின்னினிறைஞ்சான் ஆறும் முதலைக் கிடங்கு ஆறும் கடலோடு சங்கமிக்கும் கழிமுகங்களுக்கிடையே அமைந்த அழகிய கிராமமே விடத்தல் தீவு. இக்கிராமத்தின் அழகிற்கு இயற்கை தந்த கொடையே இக்கழிமுகமாகும்.
 
 
 
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமையப் பெற்றுள்ள இக்கிராமம் பல சிற்றூர்களால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இது கிழக்கே பெரியமடு எனும் கிராமத்தையும் தெற்கே விளாங்குளி, பாப்பா மோட்டை, மினுக்கன், ஆண்டான் குளம், வட்டக்கண்டல், சொர்ண புரி, திருக்கேதீஸ்வரம் ஆகியவற்றையும் வடக்காக சவரி குளம், கோயில் குளம், புதுக்குளம், கள்ளியடி, கட்டாடி வயல், இலுப்பைக் கடவை ஆகியனவற்றையும் கொண்டிருப்பதுடன் மேற்காக இந்து சமுத்திர பரவைக் கடலையும் கொண்டுள்ளது.
 
 
மன்னார் - சங்குப்பிட்டி வீதி வழியாகவே யாழ்குடா நாட்டுக்கான போக்குவரத்து காணப்படுவதால் பல்வேறு மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புகளை இப்பாதை கொண்டுள்ளது. இப்பாதை வழியில் அமைந்த பள்ளமடு சந்தி வடக்காக சங்குப்பிட்டி வீதியையும் கிழக்காக பெரிய மடுவிற்கு செல்லும் வீதியையும் தெற்காக மன்னாருக்கான வீதியையும் மேற்காக விடத்தல் தீவு கிராமத்தையும் கொண்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்தியாகும். எனவே இவ்வாறான நாற்சந்திக்கு அருகில் இக்கிராமம் அமையப் பெற்றுள்ளதனால் இப்பிராந்தியத்திலுள்ள பல்வேறு சமூகங்களுடனும் நெருக்கமான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைக் கொண்ட ஒரு தாய்க் கிராமமாக விளங்குகின்றது. விடத்தல் தீவின் முந்தானை முகப்பில் அமைந்துள்ள பள்ளமடுக் குளமும் வண்ணான் துறையும் தோட்டக் காட்டுப் பிட்டியும் அவற்றுக்கிடையேயான கிணறுகளும் இவ்வ+ரின் அழகை மேலும் வலுவூட்டுகின்றன. இக்கிராம மக்களின் உயிரோட்டமாக திகழ்ந்தது பள்ளமடுக் குளமாகும். இக்குளத்தை அலங்கரிக்கும் இயற்கை அழகாக வான் முட்ட வளர்ந்து நிற்கும் மரங்களான மருதம், மதுரை, இத்தி, ஆத்தி போன்றனவும் அதன் குளிர்ச்சியிலே எப்பொழுதும் நீராட வரும் சனக்கூட்டமும் விளங்குகின்றன. இந்நிகழ்வானது மூன்று சமயத்தவரும் ஒரே குளத்தில் குளித்து தமது ஒற்றுமையை வெளி உலகிற்கு காட்டிய ஒரு வரலாற்றுச் சின்னமாக காணப்படுகின்றது.
 
குளக்கரையில் அமைந்துள்ள நான்கு ஐந்து கிணறுகளில் பெறப்படும் மதுரமான நீர் இக்கிராமத்தின் குடி நீராகும். இந்த நீரைப் பெறுவதற்காக பெண்கள் தலையிலும் இடுப்பிலும் குடங்களைச் சுமந்தவர்களாக கால்நடையாகவும் சென்றனர். துவிச்சக்கர வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் ஆண்கள் வந்து சென்றனர்.
 
 
முல்லை, மருதம், நெய்தல் எனும் மூநிலங்களையும் கொண்ட இக்கிராமத்தின் பௌதீக அம்சங்களை நோக்குவோம். உவர் சதுப்பு நிலத்தையுடையதாக இப்பிரதேசம் காணப்பட்ட போதும் பிரதேச மக்களினால் சூழலை மேம்படுத்தவும் வரண்ட காலநிலை உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டன. பூவரசு, வேம்பு, நிழல்வாகை, இப்பில் லிப்பில் போன்றனவும் பல்வேறுப்பட்ட பூ மரங்களும் ஊர் எங்கிலும் அவதானிக்கக் கூடிய விவசாயக் காடாக்கமாகக் காணப்பட்டது.
 
 
மேற்குப் புறமாக முட்புதர்களும் கண்டல் தாவரங்களும் செழித்துக் காணப்படுகின்றன. ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது கண்டல் தாவரங்களின் செழுமை இங்கு இயற்கைக் காடு போன்று காட்சியளிக்கின்றது. கண்ணா, றைசோபோரா, சொன்ன ரேசியா, கிண்ணை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களைக் கொண்டதாக இக்கண்டல் சாகியம் அமைந்துள்ளது. அத்தோடு கடற்புற்படுக்கை விடத்தல் தீவின் மேற்குக் கரையோரமாகக் காணப்படுகின்றது. இது மன்னார் தீவின் கரையோரம் தொடக்கம் இராமேஸ்வரம், இராமநாதபுரம் வரையும் பரந்து காணப்படுகின்றது. மேற்குக் கரையோரமாகக் காணப்படும் கடற்பரப்பினுள் பல்வேறு வகையான கடலடித்தள மேடைகளும் பவளப் பாறைகளும் காணப்படுவதனால் யாழ் பல்கலைக் கழகத்தின் மீனவப் பீடம் இங்கேயே அமைய வேண்டுமென அறிவு சார்ந்த புத்திஜீவிகளினால் எடுத்துக் கூறப்படுகின்றது.
 
 
வரண்ட வலயத்திற்கு உட்பட்ட பிரதேசமாக இது உள்ளதனால் மழை வீழ்ச்சி வருடத்திற்கு சுமார் 1250 மி. மீற்றர் ஆகவும் சராசரி வெப்பநிலை 27.8 ◦c ஆகவும் அதிகூடிய சாரீரப் பதனைக் கொண்ட காலநிலைத் தன்மை உடையதாகவும் ஒப்பான சம தரை நிலத்தோற்றத்தை உடையதாகவும் இப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்திற்கு வடகீழ் பருவப் பெயர்ச்சி காற்றினால் அதிக மழை கிடைக்கிறது. இக்காலங்களில் பருவ கால நதி நீரோட்டம் காணப்படுவதனால் உவர் நீராக காணப்படும் சிற்றோடைகள் நன்னீராக மாறும் நிலமைகளையும் அவதானிக்க முடியும். இக்காலங்களில் இங்குள்ள மக்கள் நதிகளில் நீராடி மகிழ்வதுண்டு.
 
சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசம் அடையற் பாறைகளைக் கொண்ட சுண்ணக் கற்பிரதேசமாகக் காணப்படுகின்றது என்பது மண்ணியல் ஆய்விலிருந்து தெளிவாகின்றது. இவை மயோசின் என்ற காலத்தில் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டவையாகும். இச்சுண்ணக்கற் பாறைகள் மேல் மண்ணால் மூடப்பட்டுள்ளன.
 
 
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வடகீழ்ப் பருவக் காற்றின் கடுமையான போக்கினை இங்கு வீசும் காற்று மூலம் அறியலாம். இதனை சோளக காற்று என அழைப்பர். இக்காற்றுக் காலங்களில் மன்னார் தீவு தொடக்கம் சங்குப்பிட்டி வரை பெரும் வெளியாக காணப்படுவதனால் காற்றின் செல்வாக்கு கடுமையாக காணப்படும். இக்காற்றினால் மண்ணரிப்பு நிகழ்வதுடன் காற்றரிப்பு நிலவுருவங்களையும் இப்பிரதேசப் பரப்பில் விசாலமானதாக அவதானிக்க முடியும்.
 
 
இவற்றை விட சூறாவளி, உகைப்பு மழையும் எமது பிரதேசத்தில் பருவக்காற்று மழைக்கு இடையே கிடைக்கக் கூடியதாக உள்ளது. விடத்தல் தீவிற்கு கிழக்காகவும் வடகிழக்காகவும் பரவலாக நெற் செய்கை பண்ணப்படுகின்றது. வெளி மருதமடு, பெரிய குளம், திமிலா குளம், புலியா குளம், பள்ளமடுக் குளம் போன்ற குளங்களின் செல்வாக்குடன் நெற்செய்கை பண்ணப்படுகின்றது. நெல் விதைப்புக் காலங்களில் ஊரின் தலைவாயில் பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும்.
 
 
வெளிநாடுகளில் முதன் முதலாக அறியப்பட்ட இலங்கையின் பகுதி மாதோட்டம் எனும் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் அமைந்த மாந்தைத் துறைமுகம் பல்லாண்டுகளாக முதன்மை பெற்று வந்தமை இதனை மேலும் எடுத்துக் காட்டுகின்றது. அன்றியும் இப்பிரதேசம் புராதன காலம் தொட்டு அராபியரின் முக்கிய வர்த்தக மையமாகவும் காணப்படுகின்றது. இதற்கு சான்றாக அராபியரினால் ஒட்டகத்திற்காக உணவாக கொண்டு வந்து இங்கு நாட்டப்பட்டுள்ள பெருக்க மரம் (Baobab tree) இன்றும் இங்குள்ள பல இடங்களில் காணப்படுகின்றன.
 
 
மன்னாரின் வட பிரதேசமான விடத்தல் தீவு சங்கு குளிப்பதற்கு மிகவும் பிரபல்யமாக காணப்பட்டதனால் அரேபியாவிலிருந்தும் கீழக் கரையிலிருந்தும் வந்த முஹம்மதிய்யா சுழியோடிகள் இத்தொழிலில் கூடுதலாக ஈடுபட்டதனால் இப்பிரதேசத்தில் இவர்கள் நிரந்தரமாக குடியேறினர். (Twynan1902)
 
 
இதற்கு எடுத்துக் காட்டாக இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பரம்பரையாக சங்கு குளித்தல், ஆழ்கடலில் அட்டை குளித்தலில் இன்றும் ஈடுபட்டு வருகின்றமையை குறிப்பிட்டுக் கூறலாம்.
 
 
விடத்தல் தீவின் அமைவிடச் சிறப்பானது ஆழமாக நோக்கப்பட வேண்டியதாகும். இதனடிப்படையில் அதன் அமைப்பானது இன ஐக்கியத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. அதாவது அயலயலாக அமைந்திருக்கின்ற கோயில் திருத்தலங்களும் பள்ளிவாயில்களும் இதன் வழிபாட்டு அடிப்படையில் அமையவந்த கலாச்சாரங்களும் அக் கலாசாரங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மும்மத மக்களையும் ஒரே பிரதேச எல்லைக்குள் ஒரே கிராமத்தவர் எனும் பற்றுடன் இணைந்திருக்கின்றது.
 
 
இக்கிராமத்தின் மேற்குப் பகுதி கிறிஸ்தவ குடியிருப்பாகவும் அதனைச் சார்ந்து இந்துக்களின் குடியிருப்பும் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் அமையப் பெற்றுள்ளமையானது இம்மதங்களைப் பின்பற்றும் மக்கள் தத்தமது மத, கலாசார பண்பாடுகளை சிறப்பாக பேணிக்கொள்ளும் வகையில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.
 
 
இங்கு வாழ வந்த தமிழ், முஸ்லிம் மக்களையும் விடத்தல் தீவு சார்ந்த அயற்கிராம மக்களையும் இணைக்கும் வகையிலே இக்கிராமத்தில் அமையப் பெற்றிருந்த வைத்தியசாலை, தபால் நிலையம், கமநல சேவை நிலையம், வியாபார நிலையங்கள் என்பனவும் விடத்தல் தீவின் அமைவிடச் சிறப்பிற்கு வலுச் சேர்க்கின்ற அடையாளச் சின்னங்களாக விடத்தல் தீவு வரலாறு இனங்காட்டி நிற்கின்றது. இதனை படம் 1ல் காணலாம்.
 
 
ஒரு பிரதேசத்தின் சமூக, பண்பாட்டு வளர்ச்சியில் மைல் கல்லாக விளங்குவது பாடசாலையாகும். அந்த வகையில் விடத்தல் தீவின் கல்வி வளர்ச்சியிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் பங்காற்றிய பாடசாலைகளாக மன்/அலிகார் மகா வித்தியாலயமும் மற்றும் மன்/றோமன் கத்தோலிக்க பாடசாலையும் விளங்குகின்றன. இப்பாடசாலைகள் சமூகத்தில் நல்ல தலைவர்களை உருவாக்கியதுடன் பல்துறை சார் அரச உத்தியோகத்தர்களின் உருவாக்கத்திலும் அளப்பரிய பங்காற்றியுள்ளன. விடத்தல் தீவு அலிகார் மகா வித்தியாலயம் அன்று முஸ்லிம்கள் அம் மண்ணை விட்டு வெளியேறும் வரை மன்னார் மாவட்டத்திலே தலை சிறந்த பாடசாலையாகவும் கொத்தணிப் பாடசாலையாகவும் விளங்கியது. விடத்தல் தீவு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் இப்பாடசாலையானது முதுகெலும்பாக விளங்கியது என்பது குறிப்பிட்டு பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
 
விடத்தல் தீவுக்கிராமமானது இதனைச் சார்ந்ததாக அயலில் அமையப்பெற்றிருந்த முஸ்லிம் கிராமங்களை இணைக்கும் கேந்திர முக்கியத்துவமான வகையில் அமையப் பெற்றிருந்தமையினாலும் அதிக முஸ்லிம்களை கொண்டிருந்தமையாலும் இப்பிரதேசத்தின் முஸ்லிம்களின் கலாசார கேந்திர நிலையமாக விளங்கியது. விடத்தல் தீவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இங்குள்ள பள்ளி பரிபாலன சபையின் அங்கத்தவர்களாக இருந்ததுடன் அனைத்து முஸ்லிம்களும் இப்பள்ளி பரிபாலன சபையின் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே இருந்தனர். இவ்வாறே கத்தோலிக்க, இந்து சமய மக்களும் தத்தமது ஆலய நிர்வாகத்தின் கீழ் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து வந்ததுடன் இவர்களிடையே ஏற்படும் சிறு பிணக்குகளும் மதஸ்தாபன பெரியோர்களினாலேயே தீர்த்து வைக்கப்பட்டமையினால் அனைத்து சமயத்தவரும் நீடித்த புரிந்துணர்வுடன் வாழ முடிந்தது.
 
 
மேற்படி எமது ஆய்வு விடத்தல் தீவின் சமூக மற்றும் பௌதீக பண்பாட்டு அம்சங்களையும் வளங்களையும் மிகச்சிறப்பாக கொண்டிருந்தமையும் பேணி வந்தமையும் விடத்தல் தீவின் அமைவிடச் சிறப்பை சித்திரித்துக் காட்டுகின்றது. இவ்வாறானதொரு சிறப்பான நிலைமை 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் இம்மண்ணை விட்டும் வெளியேற்றப்படும் வரை நிலவியது. என்றாலும் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் வெளியேற்றம் விடத்தல் தீவின் சமூக, பொருளாதார, சமய, பண்பாட்டு கட்டமைப்புக்கள் அனைத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. விடத்தல் தீவுக் கிராமம் இன்று அழிவடைந்த நிலையில் காணப்படுகின்ற போதிலும் இம் மண்ண்pன் தொன்மையும், சிறப்பும் எந்தவொரு சக்தியினாலும் அழித்துவிட முடியாத ஒன்றாகும். வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் பிரதேசங்களில் விடத்தல் தீவும் குறிப்பிட்டு காட்டக் கூடிய ஒன்றே என்பது விடத்தல் தீவின் வரலாறு தந்த உண்மையாகும்.
 
விடத்தல் தீவு கிராமம் ஒரு பழம்பெரும் கிராமமாகும். இக்கிராமம் பல அயற்கிராமங்களை உருவாக்கியுள்ளது. இது உருவாக்கிய கிராமங்கள் அத்தனையும் விடத்தல் தீவு கிராமத்துடன் சகோதர பாசத்துடன் பல தொடர்புகளை வைத்திருந்தன என்பதை மறுக்க முடியாது. விடத்தல் தீவிலிருந்து முதன் முதல் உருவாகிய கிராமம் விளாங்குளி அதற்கு அடுத்தாற் போல நெடுவரம்பு, வட்டக்கண்டல் என்பதாகும். இவைகளில் இருந்துதான் ஏனைய கிராமங்கள் உருவாகின. விடத்தல் தீவு கிராமத்தின் வளர்ச்சியை அவதானிக்கும் போது சகோதரக் கிராமங்களையும் அறிவது அவசியமாகும். இதனை படம் 2ல் காணலாம்.
 
 
 
 
விளாங்குளி
 
 
விளாங்குளி மன்னார் - பூநகரி வீதிக்கு வடக்கே ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. இங்குள்ள மக்கள் கதாபி மரைக்கார், முத்து மரைக்கார் ஆகியவர்களின் பரம்பரையினர் ஆவர். உசன், முஹம்மது அப்துல் காதர் (வெள்ளையர்), தாவீது, கபீபு முகம்மது ஆகியவர்கள் விடத்தில் தீவு மக்களின் வழி வந்தவர்களே. அவர்களின் பிள்ளைகள் இன்னும் வாழ்ந்து வருவதுடன், விடத்தல் தீவில் மிக நெருங்கிய உறவினையும் கொண்டுள்ளனர்.
 
 
 
இக்கிராமத்தில் நீர்ப்பாசனக்குளம் ஒன்றுண்டு. இதற்கு மேற்கிலுள்ள பகுதி பெரிய விளாங்குளி என்றும் கிழக்கே உள்ள பகுதி சின்ன விளாங்குளி என்றும் அழைக்கப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் மன்னார் - ப+நகரிப் பகுதிப் பாதை இக்கிராமத்தின் மத்தியினூடாகவே சென்றது. இதனை வைத்துப் பார்க்கும் போது அக்காலத்தில் இக்கிராமம் எவ்வளவு சிறப்புடன் திகழ்ந்தது என்பது விளங்குகின்றது. இங்குள்ள மக்களின் பிரதான தொழி;ல் விவசாயமாகும். அத்துடன் தென்னஞ் செய்கையும் மேற் கொள்ளப்பட்டது. கிராமத்தின் வடமேற்குத்திசையில் புல்லுத்தோட்டம் எனும் தென்னந்தோப்பு காணப்பட்டது. அதில் உற்பத்தியாகும் தேங்காய்கள் சிறியவையாக இருந்தாலும் பால் நிறைந்தவை.
 
 
 
இங்கு ஒரு அரசினர் கலவன் பாடசாலை இருந்தது. இதன் அதிபராக 1990ஆம் ஆண்டு எஸ். எப். எல். ஏ. காதர் இருந்தார். இப்பாடசாலையில் கற்ற மாணவர்கள் உயர் கல்வியை விடத்தல் தீவு அலிகார் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தனர். இங்கு பழம் பெரும் பள்ளிவாசல் ஒன்று இருந்தது. இதற்கண்மையில் இறைநேசச் செல்வர் ஒருவரின் அடக்கஸ்தலமுண்டு. இக்கிராம மக்களால் றபியுல் ஆகிர் மாதத்தில் முகிதீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பேரில் ஐந்து அல்லது ஏழு இரவுகள் பாட்டு வைபவம் நடத்தப்படும். அவ்வைபவத்திற்கு அயற் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பர். 1964ம் ஆண்டு வீசிய புயலினால் கடல் நீர் கிராமத்துள் புகுந்தது. இதன் காரணமாக குளம், வயல்கள் உவர் நீரால் நிரம்பியதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் அநேகர் வேறு இடங்களை நாடிச் சென்றனர். இப்படியாகச் சென்றவர்களின் குடியேற்றம் மினுக்கன், சொர்ணபுரி போன்ற கிராமங்களாகும்.
 
 
மினுக்கன்
 
 
இக்கிராமம் மன்னார் - பூநகரிப்பாதையிலிருந்து ஒரு கிலோ மீற்றார் தொலைவில் அமைந்திருந்தது. 1964ம் ஆண்டு வீசிய புயலின் காரணமாக விளாங்குளியில் வாழ்ந்த மக்கள் மினுக்கனில் குடியமர்த்தப்பட்டனர். இது ஒரு குடியேற்றமாகும். அடம்பனிலிருந்த உதவி அரசாங்க அதிபர் திரு. வாமதேவன் என்பவரால் இக்குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 ஓ 21 அடி நீள அகலமான வீடுகளுடன், அரை ஏக்கர் மேட்டு நிலக்காணியும் கொடுக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் நெற்செய்கையுடன், கால் நடை வளர்ப்பிற்கும் முதலிடம் கொடுத்தனர். இங்கு அமைந்திருந்த அரசினர் பாடசாலையில் 1990 காலப்பகுதியில் விடத்தல் தீவைச் சேர்ந்த ஜனாப் எம். எம். ஏ. கரீம் என்பவர் அதிபராக இருந்தார். இங்கு ஜும்ஆப் பள்ளியொன்று இருந்தது. மினுக்கன் மக்கள் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றக்கூடியவர்கள். இவர்களில் அநேகர் தற்போது புத்தளம் முஹிதீன் நகரில் வாழ்கின்றனர்.
 
 
சொர்ணபுரி
 
 
இக்கிராமம் அடம்பனிலிருந்து தெற்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது பறைய குளம் எனவும் அழைக்கப்பட்டது. இது ஒரு குளத்தின் பெயராகும். 1982ம் ஆண்டில் இது சொர்ணபுரி என்று பெயர் மாற்றப்பட்டது. 1928ம் ஆண்டளவில் விளாங்குளியைச் சேர்ந்த சகோதரர்களான முகம்மது மீரா சாஹிபு, சின்ன மரைக்கார் ஆகியோர் குடியேறினர். 1953ம் ஆண்டில் உயிலங்குளத்திலிருந்து நாகூர் பிச்சை இஸ்மாயில் சேகுதாவ+த் ஆகியவர்களும் இங்கு குடியேறினர். 1964ல் ஆண்டுப் புயலின் காரணமாக விளாங்குழியிலிருந்து ஒரு சிலரும் குடியேறினர். சொர்ணபுரி முஸ்லிம் மக்களுக்கு 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளான்மைக் காணியும் மேட்டு நிலமும் உரிமையாக இருந்தது. இங்கு அழகான ஜும்மா பள்ளிவாசல் உண்டு. மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அரசினர் முஸ்லிம் பாடசாலையும் இருந்தது. 1990ம் ஆண்டு இடம் பெயரும் போது தாராபுரத்தைச் சேர்ந்த ஜனாப் கே. கே. எஸ். ஆப்தீன் என்பவர் ஆசிரியராக இருந்தார்.
 
 
 
கட்டைக்காடு
 
 
இக்கிராமம் முள்ளிக்கண்டல் அல்லது செட்டியார் மகள் கட்டைக்காடு என்றும் அழைக்கப்படுகின்றது. இது மன்னார் ப+நகரிப் பாதையிலிருந்து பிரியும் கண்டல் - அடம்பன் பாதையில் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. 1928ல் கலிபாசாகிபு என்றவர் விடத்தில் தீவிலிருந்து முதன் முதலாகக் குடியேறினர். இவரின் மக்களான சேகு ஆப்தீன், முகம்மது நாசர் பிச்சை உம்மா ஆகியவர்களின் பரம்பரையிலிருந்து தோன்றியவர்களே கட்டைக்காட்டு முஸ்லிம்கள் ஆவர். 1957ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கட்டைக்காடு பாதிக்கப்பட்டது தாம் வாழ்ந்த குடியிருப்பிற்கு மேற்கே கண்டல் - அடம்பன் பாதையின் முதலாவது கிலோ மீற்றார் தூரத்திலுள்ள பழைய பள்ளிவாசல் திருத்தப்பட்டு ஜும்ஆப் பள்ளிவாசலாக்கப்பட்டது. இவர்கள் தற்பொது நெல்லியாகமம், உலுக்காப் பள்ளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.
 
 
இசங்கன் குளம்
 
 
இது 15 குடும்பங்களைக் கொண்ட சிறிய கிராமமாகும். முதலில் 1902ம் ஆண்டளவில் சின்ன மரைக்கார் குளத்தார் என்பவர் இசங்கன் குளத்தில் குடியேறினார். இவரது மனைவி நெயினா உம்மா ஆவார். இவர்கள் நெடு வரம்பிலிருந்து குடியேறினார்கள். இவர்களும் விடத்தல் தீவு மக்களின் வழித்தோன்றல்களே. சின்ன மரைக்கார் குளத்தார் என்பவர் பல ஏக்கர் நெற்காணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
பள்ளிவாசல் பிட்டி
 
 
இக்கிராம மக்கள் மருதோண்டிவான், வேளாகுளம், நெடுவரம்பு ஆகிய கிராமங்களிலிருந்து குடியேறினர். விடத்தல் தீவிலிருந்து நெடுவரம்பில் குடியேறிய பெரும் நிலச்சுவாந்தரான அசனா மரைக்காரின் வழித்தோன்றல்களே இவர்கள். இக்கிராமம் 1984ல் உருவாகியது. இங்குள்ள மக்கள் விவசாயிகள், இங்கு ஆட்காட்டி வெளிநாயாற்றுப் பாதையின் மேற்குத் திசையில் அழகிய பள்ளிவாசல் ஒன்று இருந்தது. இதில் 1990ம் ஆண்டு வரை விடத்தல் தீவைச் சேர்ந்த எம். ஏ. அப்துல் மஜீத் (நூல் ஆசிரியர்) அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார்.
 
 
ஆண்டாங்குளம்
 
 
இதில் 15 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்தனர். இவர்களனைவரும் பள்ளிவாசல் பிட்டியிலுள்ளவர்களின் உறவினர்களாவர். இவர்கள் சமய, கலாசார நடவடிக்கைகளுக்கு பள்ளிவாசல் பிட்டியிலுள்ள பள்ளிவாசலையே பயன்படுத்தினர்.
 
 
வட்டக்கண்டல்
 
 
இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமாகும். இங்கு ஏறக்குறைய 200 குடும்பங்கள் வரை வாழ்ந்தனர். இந்துக்களும் கணிசமான அளவு வாழ்ந்தனர். 1902ம் ஆண்டு கட்டுக்கரைக்குளம் திருத்த வேலை செய்யும் முன் புலவுப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தற்போதைய வட்டக்கண்டலில் குடியேறினர். 1912ம், 1914ம் ஆண்டுகளில் அரசினால் ஏலத்தில் விடப்பட்ட காணிகளை மதார் சாஹிபு செல்ல மரைக்கார் என்ற தனவந்தர் வட்டக்கண்டல், மணிப்புல் குளம், பறங்கி சாளம்பை, கடையாமோட்டை, பாலையடிப் புதுக்குளம் ஆகிய இடங்களை விலைக்கு வாங்கினார். அதே காலத்தில் தொண்டியிலிருந்து வந்து விடத்தல் தீவில் குடியேறிய மு. றா. முகம்மது அலி என்பவர் கணிசமானளவு காணியை விலைக்கு வாங்கினார். இன்றும் இது இவரின் வழித்தோன்றல்களுக்கு சொந்தமாக இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் விடத்தல் தீவைச் சேர்ந்த கரீம் பிச்சை ஹாஜியார் அவர்களும் இக்கிராமத்தில் பல ஏக்கர் நெற்காணிக்குச் சொந்தக்காரராக இருந்தார். மேலும் செய்யது முகம்மது லெப்பை அவர்களும், அவரது குடும்பத்தினரும் விடத்தல் தீவி;ன பரம்பரையினரே. இங்கு ஒரு பழமை வாய்ந்த பெரிய பள்ளிவாசல் உண்டு. இவர்கள் இஸ்லாமிய அனு~;டானங்களை தவறாது கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். மேலும் இங்கு ஒரு பாடசாலையும் இருந்தது. இதில் அதிகமான இந்து மாணவர்களும் குறைந்தளவு முஸ்லிம் மாணவர்களும் கற்றனர். இவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக விடத்தல் தீவு அலிகார் மகா வித்தியாலயத்திற்கோ அல்லது அடம்பன் மகா வித்தியாலயத்திற்கோ சென்றனர்.
 
அடம்பன்
 
 
இக்கிராமத்தில் முதலில் மட்டகளப்பைச் சேர்ந்த முஸ்தபா ஹாஜியார் என்பவரே குடியேறினார். இதன் பிறகு மன்னார் குடியிருப்பைச் சேர்ந்த காதர் சாகிபு என்பவரும், விடத்தல் தீவைச் சேர்ந்த கரீம் பிச்சை என்பவரும் குடியேறினர். 1945ம் ஆண்டளவில் கட்டப்பட்ட ஒரு சிறிய பள்ளிவாசல் இருந்தது. இங்குள்ள கடைகளில் 90மூ வீதமானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்தன. 1990ம் ஆண்டு கிராமத்தை விட்டு வெளியேறும் போது 20 குடும்பங்கள் இருந்தன. இவர்கள் தற்போது கெக்கிராவப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
 
 
பெரியமடு
 
 
1950ம் ஆண்டு மாசி மாதம் விடத்தல் தீவுக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் கௌரவ டீ. எஸ். சேனநாயக்க அவர்களிடம் விடத்தல் தீவு மக்கள் பெரியமடுவில் தங்களுக்கு ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைத்துத்தருமாறு கேட்டனர். அதன் பிரகாரம் கௌரவ டட்லி சேனநாயக்க அவர்களினால் பெரியமடு குடியேற்றத்திட்டம் அமைக்கப்பட்டது. இத்திட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஒரு குடியிருப்பாளருக்கு மூன்று ஏக்கர் நெற்காணியும், இரண்டு ஏக்கர் மேட்டு நிலக்காணியும் வழங்கப்பட்டன. மேட்டுக் காணியில் இரண்டு அறை, இரு சிறய விறாந்தைகள் கொண்ட ஒரு வீடும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. மேட்டுக்காணியில் மா, பலா, பப்பாசி, தோடை, எலுமிச்சை ஆகிய பழவகைகள் உற்பத்தி செய்யப்படட்ன. இப்பழவகைகள் மிகவும் ருசியானவை.
 
 
1957 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிய மடுக்குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்தது. இதனால் நெற்காணியில் 65 ஏக்கர் வரை மண்ணினால் மூடப்பட்டு விட்டது. இதனால் சிரமத்தை எதிர்கொண்ட குடியேற்ற வாசிகளில் 15 வீதமானவர்கள் தங்களின் தாய்க்கிராமமான விடத்தல் தீவுக்கு குடிபெயர்ந்தனர்.
 
 
வெள்ளப்பெருக்கினால் உடைந்த அணைக்கட்டை புணர்நிர்மாணம் செய்ய அப்போதைய பிரதமர் கௌரவ எஸ். டப்லு. ஆர். டீ. பண்டாரநாயக்கா அவர்களையும், நீர்ப்பாசன அமைச்சர் சி. பி. டி. சில்வா அவர்களையும் பெரியமடுவிலிருந்து சென்ற தூதுக்குழு சந்தித்து கதைத்ததன் பலனாக அணைக்கட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் பிறகு பெரியமடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தது. இங்கு மூன்று பள்ளிவாசல்களும், இரண்டு கூட்டுறவுச் சங்கக் கடைகளும், ஒரு பாடசாலையும் இருந்தன. இங்குள்ள பாடசாலை ஒரு மகாவித்தியாலயமாகும். இடம்பெயரும் போது இப்பாடசாலைக்கு விடத்தல் தீவைச் சேர்ந்த ஜனாப் எம். ஏ. ஸலாம் என்பவர் அதிபராக இருந்தார்.
 
 
இக்கிராமத்தில் சீறாப்புராண விரிவுரைகள், கந்தூரி வைபவங்கள், கொடியெடுத்தல் போன்ற கலாசார அம்சங்களும் சிறப்புற நடத்தப்பட்டன. அத்துடன் தமிழ் முஸ்லிம் உறவும் சிறப்பாக காணப்பட்டது.
 
 
 
காக்கையன் குளம்
 
 
இக்கிராமம் மன்னார் மாவட்டத்தின் மடு உதவி அராசங்கப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதியில் இதன் குடியேற்றங்கள் விடத்தல் தீவு கிராமத்தோடு பின்னிப் பிணைந்திருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. தற்பொழுது காக்கையன் குளத்தில் வாழும் மக்களின் சந்ததியினர் பொக்கர் வன்னி என்னுமிடத்தில் வாழ்ந்தனர்.
 
 
இதே காலத்தில் காக்கையன் என்றழைக்கப்படும் ஒருவர் விடத்தல் தீவிலிருந்து தற்போதைய காக்கையன் குளத்தில் குடியேறினார் என்பது பாரம்பரியமான கதையாகும். பொக்கர் வன்னியில் குடியிருந்தவர்களும் விடத்தல் தீவிலிருந்து குடியேறியவர்களே அவர்களில் மீராசாகிபு, முகம்மது சுல்த்தான் கப்படையார் கப்பலாச்சிப் பிச்சை, மீராக்குட்டியர், ஆண்டியர் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று அறிய வருகிறது. இவர்கள் அனைவரும் விடத்தல் தீவை பிறப்பிடமாகக் கொண்டவர்களே!... அவர்களின் சந்ததியினரும் மிக நெருங்கிய உறவினர்களும் விடத்தில் தீவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
 
 
வெள்ளப்பெருக்கு, வரட்சி, நோய் காரணமாக பொக்கர் வன்னி குளத்திற்கு குடி பெயர்ந்தனர். காக்கையன் குளத்தில் காக்கையன் குளம் என்னும் நீர்த்தேக்கம் ஒன்றுள்ளது. அதிலிருந்துதான் நெல் வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சப்பட்டது. காக்கையன் குள மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். கால்நடையும் அதிக அளவில் வளர்த்தார்கள். இங்கு பள்ளிவாசல் ஒன்றிருந்தது.
 
 
இப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு மக்கள் ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்தார்கள். இங்கு மகா வித்தியாலயம் ஒன்று இருந்தது. இங்கு உயர்தர வகுப்பு வரையிpல் வகுப்புக்கள் நடந்தன. இதில் கற்றவர்கள் இன்று ஆசிரியர்களாகவும், மௌலவிகளாகவும்; உன்னத நிலையில் வாழ்கின்றனர். இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ந்த ஜனாப் முகம்மது இப்றாஹீம் சாகிபு அப்துல் லத்திபு அவர்கள் மத்திய வங்கியில் உயர் பதவி வகித்து, தற்பொழுது ஓய்வு பெற்று (வயது 55) சமூகத் தொண்டு செய்கிறார் என்பது குறிப்பிடக் கூடியது. 1990ம் அண்டு காக்கையன் குளம் மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர் ஜனாப் சியான் அவர்கள் என்பதும் குறிப்பிடக்கூடியதாகும்.
 
 
விடத்தல்தீவின் நிருவாகம்
 
 
விடத்தல் தீவு கிராமம் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமமாகும். இங்கு சிறந்த நிருவாகம் நடைபெற்றது என்பதை மக்களின் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இக்கிராமத்தில் ஒரேயொரு பொலிஸ் விதானையே சகல விடயங்களையும் கவனித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. பொலிஸ் விதானையாக இருந்தவர்களுள் மக்களால் அதிகமாக பேசப்படுபவர் சுப்பர் பொன்னையா ஆவார். இவர் இன, மத பேதமின்றி சிறந்த முறையில் தனது கடமையை செய்தவர். மக்களின் குறைகளை கேட்டறிந்து உதவும் மனப்பாங்கையும் இவர் கொண்டிருந்தார். சமகாலத்தில் முகாந்திரம் மு. சாகுல் ஹமீது என்பவர் மாந்தைப் பகுதியின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தார். இவரது நிருவாகமும் இன, மத பேதமின்றி இருந்தது. அக்காலத்தில் ஆங்கிலம் கற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். நற்குணமுள்ள இவர் 1940ம் ஆண்டில் இறப்பெய்தினார்.
 
 
சுப்பர் பொன்னையா ஓய்வு பெற்ற பின் கமீது லெப்பை கரீம் லெப்பை என்பவர் தற்காலிக பொலிஸ் விதானையாக இருந்தார். கரீம் லெப்பைக்கு பிறகு எஸ். ஏ. கபூர் என்பவர் நியமனம் பெற்று ஓய்வு பெறும் வரை சிறப்பாகச் செய்தார். 1989.06.10இல் நடைமுறைக்கு வந்த ஜனசவிய திட்டத்தின் நிருவாகச் சீர்த்திருத்தத்திற்கமைய விடத்தல் தீவு ஐந்து பிரிவுகளாகக்கப்பட்டது. அவையாவன :
 
 
1) விடத்தல் தீவு மேற்கு (மன் / 10)
 
2) விடத்தல் தீவு வடக்கு (மன் / 11)
 
3) விடத்தல் தீவு மத்தி (மன் / 12)
 
4) விடத்தல் தீவு கிழக்கு (மன் / 13)
 
5) பள்ளமடு (மன் / 14)
 
என்பவையாகும். இத்திட்டத்திற்கமைய நிருவாகம் சிறப்புற நடைபெற்றது எனலாம்.
 
 
 
விடத்தல்தீவின் அரசியல்
 
 
தேசிய மட்டத்தில் விடத்தல் தீவு முஸ்லிம்களின் அரசியல் நிலையை நோக்கினால் முஸ்லிம்களுக்கென கட்சி தோன்றுவதற்கு முன் பெரும் பான்மையான மக்கள் தேசிய கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அபிமானிகளாக இருந்தனர். 1964, 1970களின் நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடத்தல் தீவைச் சேர்ந்த ஜனாப் என். எஸ். ஏ. காதர் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டார். 1986ம் ஆண்டுத் தேர்தலில் ஜனாப் எம். ஐ. ஏ. றாசிக் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டார். பெரும்பான்மையான முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்தனர். அத்துடன் 1978ம் ஆண்டு அல்ஹாஜ் எம். எல். எம். சரிபு தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசித்திலேயே தோல்வியடைந்தார். இவ்வாறு முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
 
 
இடம்பெயர்ந்த பின்பு 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடத்தல் தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் எம். எஸ். ஏ. றஹீம் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனவே இக்கிராம முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் அறிவும் விழிப்புணர்வும் ஏற்பட்டு தங்களது கிராமத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்யக் கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 
 
விடத்தல் தீவை உள்ளடக்கிய கிராம சபையை பெருங்களிப்பற்று கிராம சபை என்று அழைத்தனர். இச்சபையில் பதினொரு அங்கத்தவர்கள் இடம்பெற்றனர். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக நிருவாகம் செய்த கிராம சபைகளில் பெருங்களிப்பற்று கிராம சபையும் ஒன்று. இச்சபைக்கு முஸ்லிம்கள் அளித்த பங்களிப்பு உன்னதமானதாகும். இதன் வளர்ச்சிக்கும், சிறப்பிற்கும் பங்களித்தவர்களில் இச்சபையின் தலைவர்களாகச் செயற்பட்ட மத்தேஸ், கா. மீரா முகையதீன், கா. மு. இஸ்மாயில், நா. தா. மோதரம் பிள்ளை, சி. முகம்மது முகியதீன், இராசேந்திரம் போன்றோரைக் குறிப்பிடலாம். இச்சபையின் உறுப்பினருள் ஐவர் முஸ்லிம்களாவர். இதன் தலைவர்களாக இருந்த கா. மீரா முகைதீன், கா. இஸ்மாயில் ஆகியோரின் சேவைகள் குறிப்பிடக்கூடியதாகும். மீரா முகைதீன் அவர்களின் தலைமையில் தாய், சிசு பரிசோதனை நிலையமும், பொதுச் சந்தைக் கட்டிடமும் அமைக்கப்பட்டது. அதே போல் கா. இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கிராம சபையின் காரியாலயம் திஸ்ஸ வீரசிங்க வீதி மற்றும் பல கிணறுகள் என்பவை அமைக்கப்பட்டன. மேலும் இவர் வெளிமருத மடுக்குளத்தின் புனரமைப்பிற்கு முன்னோடியாக இருந்தார்.
 
 
பொதுவாக முஸ்லிம்கள் கிராம சபையின் தலைவராக இருக்கும் போதே குளங்கள் ஆழமாக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலைகள் நடந்தன. திரு. மத்தேஸ் அவர்கள் தலைவராக பணிபுரிகையில் தெருக்கள் கிறவல் இடப்பட்டு செப்பனிடப்பட்டன. அத்துடன் தோணித்துறையில் மீன் சந்தைக் கட்டிடம் அமைத்து அதில் மீனவர்கள் தங்களின் மீன்களை விற்பதற்கு உதவி புரிந்தார்.
 
 
பொதுவாக இக்கிராம சபைக்கு உட்பட்ட ஆத்திமோட்டை, புதுக்குளம், கோவில் குளம், சவுரிக்குளம், பள்ளமடு, விடத்தல் தீவு ஆகிய கிராமங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம்.
 
 
 
 
விடத்தில் தீவின் இன்றைய நிலை
 
 
 
விடத்தல் தீவின் இன்றைய நிலையை நோக்குவதற்கு முன்பாக அதன் முன்னைய நிலையையும் சற்று மீட்டிப்பார்க்க விரும்புகிறேன். மன்னார் மாவட்டத்திலே மாந்தை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களில் விடத்தல் தீவும் ஒன்றாகும். ஏனைய கிராமங்களுள் இது தொன்மையானதும், சிறப்பானதுமாகக் காணப்பட்டது. இக்கிராமம் பார்வைக்கு தீவு போன்று காணப்பட்டாலும் இது பிரதான நிலத்திணிவின் ஒரு பகுதியாகும். முதலைக் கிடங்கு ஆறு, மின்னினிறைஞ்சான் ஆறு (கோவேரிக்கட்டு ஆறு) ஆகிய சிறிய பருவகால ஆறுகளின் கழிமுகத்தில் விடத்தல் தீவு அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக ஆழமற்ற கடற் பரப்பும், ஏனைய நிலப்பரப்பு தாழ் உவர் நிலப்பகுதியாகவும் அமைந்துள்ளன. இக்காரணிகளினால்தான் விடத்தல் தீவு ஒரு தீவு போன்று தோற்றமளிக்கின்றது. இவ்வாறான பௌதீக காரணிகள் மூலம் கடலிலிருந்து மீன், இறால் போன்ற கடல் உணவுகளையும், தரைப்பகுதியில் இருந்து வேளான்மை மூலம் நெல் விதைக்கப்பட்டதோடு மாடு, ஆடு, கோழி, தாரா போன்ற விலங்கு, பறவைகளும் வளர்க்கப்பட்டதோடு செல்வச் செழிப்பு நிறைந்ததாகவும், தமது சுயதேவைகளை இக்கிராமத்திற்குள்ளாகவே பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருந்தன.
 
 
மேலும் கல்விக்குத் தடையேதும் உண்டோ? ஊருக்கே உரிய அலிகார் மகாவித்தியாலயம் என்ற நிலையில் பல்கலைக்கழகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தை தனதருகில் கொண்டும், மன்னார் பட்டினத்தை கல்வித் துறைக்கு தனதாக்கிக் கொண்டும் கல்விச்சூழலைத் தன்வசம் வைத்திருந்த இக்கிராமம் கல்வியின் மூலமே எழுச்சியும் கண்டது. இக்கிராமத்தில் கல்லாதோனைக் காண்பதும் அரிது. நகர் புறத்திற்கே உரித்தானது, என நினைக்கும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கிராமமானது பல வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும், கணக்காளர்களையும், நிருவாக உத்தியோகத்தர்களையும், இதர அரச துறைகளிலும், உயர் பதவிகளையும் கொண்ட ஒரு கல்விச் சமூகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். பெரும்பான்மையான மக்கள் அரச தொழிலைச் செய்தாலும் விவசாயத்திலும் ஆர்வம் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உரிமையாயிருந்தன.
 
 
அது மட்டுமல்லாது இவர்களின் குடியிருப்பானது மிகவும் நேர்த்தியானதாகவும் கல்லால் கட்டப்பட்ட வீடுகளையும் கொண்டு காணப்பட்டது. ஓலைக் குடில்களை கண்டு கொள்வது கடினம். வீதிகள் தார் இடப்பட்டதாகக் காணப்பட்டன. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற இஸ்லாமிய கலை அம்சங்களுடன் கூடிய இரண்டு பள்ளிவாசல்களும் காணப்பட்டன. அத்தோடு சிறுவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு மதுரஸா ஒன்று இருந்தது. இதுவே பாலர் பாடசாலையாகவும் செயற்பட்டது. இவ்வாறு சிறப்பாகவும் செழிப்பாகவும் இக்கிராமம் விளங்கிற்று. தனக்கெனத் தனிச்சிறப்புக்களைக் கொண்டு தலை நிமிர்ந்து வாழ்ந்த இக்கிராமத்தின் முஸ்லிம் சமூகம், 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப்பகுதியில் 27 - 30ம் திகதி வரை 72 மணித்தியாலயத்தினுள் வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக ஆயுத முனையில் எல். ரி. ரி. ஈ இனரால் வெளியேற்றப்பட்ட போது விடத்தல் தீவு மக்களாகிய இவர்களும் வெளியேற்றப்பட்டனர். இவ்வெளியேற்றத்தோடு வெளியேறிய இவ்வூர் மக்கள் சுமார் பதின்மூன்று வருடங்கள் வரை தமது சொந்தக் கிராமத்தின் மண்ணைத் தொட்டுப்பார்க்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர்.
 
 
2002ம் ஆண்டில் சமாதான ஒப்பந்தத்தின் பின் இக்கிராமத்தைச் சென்று பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. 2002ம் ஆண்டு சென்று பார்க்கையில் இக்கிராமமே உருமாறியிருந்தது.
 
 
இக்கிராமத்திற்கு செல்லும் பாதையே தெரியாதளவு பெரும் புதர்களும், மரங்களும் வளர்ந்திருந்தன. இதனைப் பார்த்த போது பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தினரின் இருப்பிடத்தைப் போன்று காணப்பட்டது. ஏனெனில் மரங்களையும், புதர்களையும் அகற்றிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இக்கிராம வீதிகள் இருந்தன. இக்கிராம மக்களின் கருவூலங்கள் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடப்பதைக் கண்டு வேதனைப்பட வேண்டிய நிலையே காணப்பட்டது.
 
 
இக்கிராம வீடுகள் வானத்தைப் பார்த்து அழுது கொண்டிருப்பதை போல முகடுகள் இன்றி வெறும் சுவர்களை மாத்திரம் கொண்டிருந்தன. சில வீடுகளில் அந்த சுவர்கள் கூட இருக்கவில்லை. ஜன்னல், கதவுகளின் நிலைகளைக் கூட உடைத்து எடுத்திருந்தார்கள். இன்னும் சில வீடுகள் இருந்த இடமே தெரியாது காணப்பட்டன. இவ்வாறு அனைத்துப் பொருட்களும் சூறையாடப்பட்டு இருந்தன.
 
 
ஐவேளைத் தொழுகைக்காகவும், மார்க்க விடயங்களை நிறைவேற்றவும் மட்டுமே விளங்குவது பள்ளிவாசலாகும். இங்கு வீணாண பேச்சுக்களோ விடயங்களோ இடம்பெறாது. இவ்வாறு புனிதம் நிறைந்த பள்ளிவாசல் கூட சிதைக்கப்பட்டும், சில கயவர்களால் அதன் சுவர்களில் வீணான வார்த்தைகள் எழுதப்பட்டும் காணப்பட்டது. முஸ்லிம்களின் மார்க்கச்சின்னத்துக்கே இந்தக்கதி என்றால் மற்றைய கட்டிடங்களின் நிலையை கூறவும் வேண்டுமா?
 
 
மேலும் இக்கிராம மக்களின் கல்வியை வளர்த்த அலிகார் மகா வித்தியாலய கட்டிடங்களின் முகடுகள், தளபாடங்கள் எல்லாம் களவாடப்பட்ட நிலையில் காட்சியளித்தன. அத்தனை கல்விமான்களை உருவாக்கிய பாடசாலை இன்று உட்புக முடியாதளவு காடுகள் நிறைந்து காணப்படுகின்றமை வேதனைக்குரியது. அத்துடன் முஸ்லிம் குடியிருப்புகள் மாத்திரம் விடத்தல் காடுகளால் நிறைந்து காணப்பட்டன. அம்மரங்களின் தண்டினை அவதானிக்கும் போது அதன் வயது பத்து வருடங்களுக்கு அதிகமானதாகவே இருக்கும். இந்து, கிறிஸ்தவ குடியிருப்புகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களின் குடியிருப்புகளில் ஒரு விடத்தல் மரம் கூட காணப்படவில்லை. பாடசாலையிலே நிறைந்த விடத்தல் காடு அதன் சுற்றுப்புறத்திலுள்ள இந்து - கிறிஸ்தவ குடியிருப்பிலே காணப்படாதது யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.
 
 
சுருக்கமாகக் கூறின் இக்கிராமமானது காடுகள் வளர்ந்து கிராமத்தின் இயல்புகளை இழந்து காட்சியளித்தது. இப்படியே விட்டால் இன்னும் சில தசாப்தங்களில் இக்கிராமத்தில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் அழிக்கப்பட்டே காட்சி தரும். இந்நிலையே பல வடமாகாண முஸ்லிம் கிராமங்களினதும் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
 
== மேலும் பார்க்க ==
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/604683" இருந்து மீள்விக்கப்பட்டது