எதிர்மறை ஒளிவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம் |
விக்கியாக்கம் |
||
வரிசை 1:
நவீன மின்காந்தவியலின் பெரும்பகுதி '''எதிர்மறை ஒளிவிலகலை''' உள்ளடக்கியது. [[ரசியா|உருஷிய]] நாட்டு அறிவியலார் விக்டர் வெசலோகோ அவர்களின் கருத்தியல் எடுகோள்களின் படி (கி.பி.1968) [1], எதிர்மறை ஒளிவிலகலை பின்வருமாறு வரையறுக்கலாம். திசையமைவு மற்றும் ஒருபடித்தானப் பண்புகளைக் கொண்ட ஒரு பருப்பொருள் ஊடகத்தின் ஒளி உட்புகுதிறனும், ஊடுருவுதிறனும் எதிர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்குமாயின், அவ்வூடகத்தில் ஒளி விலகலானது, மரபுசார் பருப்பொருள்களைப் போல் அல்லாமல் எதிர்மறையாக இருக்கும். மேலும் இவ்வூடகங்களின் ஒளிவிலகல் எண், எதிர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, மேற்கூறியக் கருத்தியல் கொள்கையின்படி, ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எதிர்மறையாக இருக்குமாயின், ஒளிவிலகலானது படம் 1இல் காட்டியுள்ளதைப் போன்று இருக்கும்.
[[File:Refraction1.jpg|centre|thumb|300px|படம்-1:நேர்மறை மற்றும் எதிர்மறை ஒளிவிலகல்]]
வரிசை 6:
==எதிர்மறை ஒளிவிலகல் எண் தெரிவும், ஆய்வகச் சோதனையும்==
[[File:Refraction2.jpg|right|thumb|200px|]]
பருப்பொருள் ஊடகங்களில், ஒளிவிலகல் எண்ணுக்கான வரையறை ஸ்நெல் [2] விதியின் படி பெறப்படுகிறது. எனினும் மாக்ஸ்வெல்லின் [3] விதிப்படி, ஒளிவிலகல் எண்ணை, ஊடகங்களின் உள்ளார்ந்த பண்புகளோடு பின்வருமாறு தொடர்பு படுத்த இயலும். இங்கு n என்பது ஒளி விலகல் எண்ணையும், εr என்பது ஒளி உட்புகுதிறனையும், μr என்பது ஒளி ஊடுருவுதிறனையும் குறிக்கும். εr மற்றும் μr நேர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்கும் பொழுது, nம் நேர்மறை மதிப்பைப் பெற்றிருக்கும். εr,μrஆகியவற்றில் ஏதேனும் ஒன்று எதிர்மறை மதிப்பைப் பெறும் பொழுது (எடுத்துக்காட்டாக, மீயுயர் அயனியாக்கப்பட்ட வளிமங்களிலும் [பிளாஸ்மாக்கள்], கண்ணுறு ஒளியில் உலோகங்களிலும் [எ.கா. தாமிரம்] εr எதிர்மறை மதிப்பைப் பெற்றிருக்கும்.), nக்குரியத் தீர்வு சிக்கலெண் முலம் பெறப்படும். εr மற்றும் μr ஆகிய இரண்டும் எதிர்மறை மதிப்பைப் பெறும் பொழுது, nக்குரியத் தீர்வுகளில் எதிர்மறை மதிப்பும் ஒரு தீர்வாக இருக்கின்றது (ஏனெனில் எந்தவொரு எண்ணின் வர்க்க மூலத்திற்கானத் தீர்வும் நேர்மறை மற்றும் எதிர்மறை மதிப்புகளைப் பெற்றிருக்கும்). இதன் மூலம் n மதிப்பிற்கானக் குறீயீட்டுத் தேர்வு(+ அல்லது -), ஊடகங்களில் ஒளிவிலகலின் திசையைப் பொருத்துத் தெரிவு செய்யப்படும் என்பது தெளிவாகிறது.
இயற்கையில் கிடைக்கின்ற எந்தவொரு பருப்பொருள் ஊடகத்தின் εr, μr பண்புகளும் எதிர்மறை மதிப்புகளை ஒருங்கே பெற்றிருக்கவில்லை. எனினும், கி.பி. 2001மாவது ஆண்டில், ஷெல்பை மற்றும் ஸ்மித்[4] தலைமையிலான அறிவியற் குழு, செப்புக் கம்பிகள் மற்றும் சுருள்களால் ஆன செயற்கைச் சேர்மத்தில் (படத்தைக் காண மேற்கோள் ஐந்தைச் [5] சொடுக்கவும்), எதிர்மறை ஒளிவிலகலை, நுண்ணலைகளைக் (மைக்ரோ அலைகள்) கொண்டு ஆய்வுச் சோதனையின் மூலம் நிரூபித்தனர்.
|