நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நிறுத்தக்குறிகள்
நிறுத்தக்குறிகள்
வரிசை 274:
==7) கேள்விக்குறி (?)==
 
ஒரு பொருள் குறித்து மேலும் அறியவோ ஐயம், வியப்பு போன்ற உணர்வுகளைத் தயக்கத்தோடு வெளிப்படுத்தவோ '''கேள்விக்குறி''' பயன்படுகிறது.
 
கேள்விக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
வரிசை 287:
:எடுத்துக்காட்டு: ''உங்களால் இவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடிந்தது?!''
 
:'''கேள்விக்குறி தேவை இல்லாத இடங்கள்:'''
 
:1) அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் கேள்விக்குறி இடுவதில்லை. இறுதி வினாவில் மட்டும் இட்டால் போதும்.
வரிசை 295:
:எடுத்துக்காட்டு: ''இதைச் செய்யலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமே இல்லை.''
 
==8) உணர்ச்சிக்குறி (!)==
 
வியப்பு, மகிழ்ச்சி, அச்சம் போன்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தவும் விளித்துப் பேசவும் ''''உணர்ச்சிக்குறி''' பயன்படுகிறது.
 
உணர்ச்சிக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1)வியப்பு, மகிழ்ச்சி, அதிர்ச்சி, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''எவ்வளவு பெரிய மலை!'' (வியப்பு)
:''நாம் எதிர்பார்த்தபடியே திருமணமும் நன்றாக நடந்து முடிந்தது!'' (மகிழ்ச்சி)
:''சித்தன் விமான விபத்தில் இறந்துவிட்டான்!'' (அதிர்ச்சி)
:''பல்லாயிரக் கணக்கான மக்களை ஆழிப்பேரலை விழுங்கிவிட்டது!'' (இரக்கம்)
:''பொருளாதாரத் தேக்கம் காரணமாக முருகனின் வேலை போய்விடுமோ!''' (அச்சம்)
:''ஊழல் பேர்வழிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வேறா!'' (வெறுப்பு)
 
:2) உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''ஓகோ! இன்றைய திருமணத்திற்கு நேற்றே வந்துவிட்டீர்களா?''
:''ஆ!''
:''அட!''
:''சே!''
:''சீ!''
:''ஐயோ!''
:''அப்படியா!''
:''ஆகா!''
:''என்னே!''
:''அந்தோ!''
:''ஐயகோ!''
 
:3) உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டு: ''ஐயோ ஐயோ!''
 
:4) கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''தீ! தீ!''
:''பாம்பு! பாம்பு!''
 
:5) விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''பெரியோர்களே! தாய்மார்களே!''
:''அன்பர்களே!''
:''என் இனிய எந்திரா!''
 
:6) வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''மணமக்கள் வாழ்க!''
:''புரட்சி ஓங்குக!''
:''எங்கேயாவது போய்த்தொலை!''
 
:7) வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:''வருக வருக!''
 
:8) முழக்கமிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது தொடர்கள் அடுத்தடுத்து வரும்போது ஒவ்வொன்றின் இறுதியிலும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
:எடுத்துக்காட்டுகள்:
:''கோழைகள்! துரோகிகள்!''
:''உண்மை! முற்றிலும் உண்மை!''
 
==9) இரட்டை மேற்கோள்குறி (" ")==
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது