சாதனா சர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ரசிகர் தளங்களை சேர்க்க வேண்டாம்
No edit summary
வரிசை 25:
 
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், [[இளையராஜா]], பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார். ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, [[ஹரிஹரன்]], ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ள சாதனா சர்கம் அவர்கள் பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , [[நா.முத்துக்குமார்]], உதயகுமார், கலைக்குமார், [[பா.விஜய்]], வி.இளங்கோ, மு.மேத்தா போன்ற பலரின் பாடல் வரிகளுக்கு உயிரும், உணர்வும் சேர்த்திருக்கிறார்.
 
இந்தியாவின் முதன்மை இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் நன்கு மதிப்பு பெற்றவர் இவர் முக்கியமாக ஏ. ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடகி என்று சொன்னால் மிகையாகாது. ரஹ்மான் ஒரு செவ்வியில் இந்தியாவில் உள்ள பாடகர் பாடகிகளில் சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட பாடல்களைப்பாடி ஆச்சரியமூட்டும் நுட்பமான திறமை கொண்டவர் என்று பாராட்டினார்.
சாதனா சர்கம் பல சாதைகளை நிலைநாட்டியுள்ளார் அதில் வட நாட்டுப்பாடகர்களில் அதிகமான தமிழ் பாடல்களை பாடியவர் மட்டும்மல்ல அதிலும் சிறப்பாக ஒரேயொரு ஹிந்தி பாடகர்/பாடகி ஒருவர் ஒரு தென்னிந்தியப் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். தமிழை தவிர தெலுங்கு., கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ள சர்க்கம் தற்போது மலையாளத்திலும் தனது முதல் பாடலைத் தரவுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாதனா_சர்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது