நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிறுத்தக்குறிகள்
சி சேர்க்கை
வரிசை 463:
 
:2) பிறை அடைப்புக்குள் இன்னொரு அடைப்பு தேவைப்படும்போது சதுர அடைப்பு இடுவது முறை.
:''தொற்று நோய்கள் (காதுத் தொற்று நோய்கள் [ பக். 31], மணல்வாரி [பக். 50]) வயிற்றுப்போக்குக்குக் காரணமாக அமையலாம்.''
 
==15) இணைப்புக்கோடு (--)/ இணைப்புச் சிறுகோடு (-)==
இணைப்புக்கோடு (dash) இணைப்புச் சிறுகோடு (hyphen) ஆகிய இரண்டு நிறுத்தக்குறிகளையும் வேறுபடுத்திக் காண்பது முறை. இணைப்புக்கோடு ''நெடும்'' இணைப்புக்கோடு (em dash), ''குறும்'' இணைப்புக்கோடு (en dash) என இருவகைப் படும்.
 
தட்டச்சு செய்யும்போது ஒரே குறியை (-) இணைப்புச் சிறுகோடாகவும் குறும் இணைப்புக்கோடாகவும் பயன்படுத்துவதும் உண்டு. நெடும் இணைப்புக்கோடு இரண்டு சிறுகோடுகளால் குறிக்கப்படும் (--).
 
இணைப்புக்கோடுகள் பயன்படுத்துவது குறித்து சில வழிமுறைகள் எடுத்துக்காட்டுகளோடு கீழே தரப்படுகின்றன:
 
:1) தனித்தனியாகக் கூறப்பட்டவற்றின் முடிவில் அவை ஒரு தொகுப்பு எனக் காட்டும் சொல்லின் முன் இணைப்புக்கோடு பயன்படுத்தப்படுகிறது.
:எடுத்துக்காட்டுகள்:
:''வரிசைப் பற்கள், மோவாயின் வலது புறத்தில் கறுப்பு மச்சம், கருகருவென முடி -- இத்தனையும் ஒன்றுசேரப் பாட்டி அழகாகக் காட்சியளித்தாள்.''
:''கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து -- இவைதான் இந்த வார விளையாட்டு நிகழ்ச்சிகள்.''
 
:2) வாக்கியங்களை இணைக்கும் ''என்று'', ''என்பது'' போன்ற சொற்களைத் தவிர்க்கும்போது இணைப்புக்கோடு பயன்படுகிறது.
:எடுத்துக்காட்டுகள்:
:''"சென்னைக்குப் போவது இன்றா, நாளையா? -- கந்தனின் மனதில் எழுந்த கேள்வி'' (-- = என்பது).
:''"வாடா, போவோம்" -- அந்த அம்மாள் முத்துவைத் தூக்கிப் பேருந்தில் உட்காரவைத்தாள்'' (-- = என்று கூறி).
 
:3) ஒரு வாக்கியத்தின் இடையே செருகப்படும் மற்றொரு தொடரின் முன்னும் பின்னும் இணைப்புக்கோடு பயன்படுகிறது.
:எடுத்துக்காட்டு:
:''அப்போது, சுப்பிரமணியம் -- சரளாவின் அப்பா -- தமக்குள்ளே ஏளனமாக முணுமுணுத்துக்கொண்டார்.''
 
:4) தனி வாக்கியங்களுக்கு இடையில் உள்ள இலக்கண உறவைக் காட்டும் சொல்லுக்குப் பதிலாக இணைப்புக்கோடு பயன்படுகிறது.
:எடுத்துக்காட்டு:
:''அவர் புகைபிடிக்கிறாரா -- என்னால் நம்ப முடியவில்லையே!'' (-- = அதை).
 
:5) இயல்பான வாக்கிய அமைப்பை மாற்றி அமைக்கும்போது பெரும்பாலும் பயனிலைத் தொடரை முதலில் தரும்போது அந்தத் தொடரின் பின் இணைப்புக்கோடு இடலாம் (இந்த இடங்களில் இணைப்புக்கோட்டுக்குப் பதிலாகக் கால்புள்ளியைப் பயன்படுத்துவதே மிகுதி).
:எடுத்துக்காட்டு:
:''இருவரும் ஒருவரையொருவர் ஏறெடுத்துப் பார்க்காமலே அமைதியாக நடந்தனர் -- பேருந்து நிலையம் நோக்கி.''
 
:6) ''இடையில்'' என்னும் பொருளில் இரு சொற்களை இணைத்துக் காட்ட இணைப்புக்கோடு இடுவது முறை.
:எடுத்துக்காட்டு:
:''இந்தியா -- பாக்கிசுதான் புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம்.'' (இந்தியாவுக்கும் பாகிசுதானுக்கும் இடையில்)
 
:7) ''முதல்...வரை''' என்னும் பொருள் தரும் முறையில் இரு இலக்கங்களுக்கு இடையில் இணைப்புக்கோடு இடுவது முறை.
:எடுத்துக்காட்டு:
:''சங்ககாலம்: கி.மு. 300 -- கி.பி. 200''
 
 
 
 
[[பகுப்பு:தமிழ் நடை]]
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது