நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நிறுத்தக்குறிகள் - மீளமை
சி மீளமை
வரிசை 22:
# [[உடுக்குறி (*)]]
 
மேலே தரப்பட்ட ஒவ்வொரு நிறுத்தக்குறி பற்றியும் தனிக் கட்டுரைகள் விக்கியில் உள்ளன.
==1) கால்புள்ளி (,)==
 
== இரட்டை மேற்கோள்குறி (" ")==
எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு கால இடைவெளியைக் குறிக்க '''கால்புள்ளி''' பயன்படுகிறது. கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நீங்கள் வெளியிட்டிருந்த நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தேன், இரசித்தேன், சிரித்தேன்.''
 
:2) ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இனிமையான, பொருள் பொதிந்த, நெஞ்சை அள்ளும் பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது.''
 
:3) ஒரே வினையைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அந்தப் பாடல் இனிமையாக, உள்ளத்திற்கு நிறைவளிப்பதாக, கடந்த காலத்தை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.''
 
:4) தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் எண்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தந்தை, மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி.''
 
:5) ஒரே சொல் அல்லது (மரபுத் தொடர் அல்லாத) தொடர் இரு முறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவள் வருவாள், வருவாள் என நான் எதிர்பார்த்திருந்தேன்.''
 
:6) ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர். ஆனால், அவரால் மேடைகளில் சிறப்பாகப் பேச முடியாது.''
 
 
'''சொற்றொடர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த வரக்கூடிய இடைச்சொற்கள் சில:'''
 
'':அடுத்ததாக, அடுத்து, அதற்கேற்ப, அதன்படி, அதனால், அது போலவே, அது போன்றே, ஆகவே, ஆகையால், ஆயினும், ஆனாலும், இத்துடன், இரண்டாவதாக, இருந்தாலும், இவ்வாறாக, எடுத்துக்காட்டாக, என்றாலும், எனவே, எனினும், ஒருவழியாக, தவிரவும், பிறகு, பின்பு, பின்னால், முடிவாக, முடிவில், முதலாவதாக, முன் கூறியவாறு, மேலும்.''
 
 
:7) வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை.''
 
:8) ''அதாவது,'' ''குறிப்பாக,'' என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், சிறந்த உழைப்பாளிகள்.''
 
:9) அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு: ''அறையில் மண்டிக்கிடந்தது, இருள்.''
 
:10) ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ''இல்லையா'', ''அல்லவா'' போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஆசிரியர் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார், இல்லையா?''
 
:11) ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத்தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''உங்களுக்கு என்ன வேண்டும், இனிப்பா, காரமா?''
 
:12) ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவரைத் தடுக்காதே, போகவிடு.''
 
:13) எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தங்கையின் திருமணம், வருகிற 10ஆம் தேதி நடைபெறுகிறது.''
 
:14) விடையளிக்கும்போது விடையின் ஒரு பகுதியாக வரும் வினாவை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இது என்ன?''
:''இதுவா, இது ஒரு புதுமாதிரிப் பேனா.''
 
:15) உணர்ச்சியைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐயோ, வலி தாங்க முடியவில்லையே!''
:16) வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ''ஆமாம்,'' ''இல்லை,'' ''ஓ,'' ''ஓகோ,'' போன்ற சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஆமாம், அவர் நேற்றே வந்துவிட்டார்.''
 
:17) இரு வினாக்களுக்கு இடையில் வரும் ''இல்லை'' என்ற சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இது படகா, இல்லை, மிதக்கும் வீடா?''
 
:18) விளிக்கும் சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தம்பி, இங்கே வா.''
 
:19) கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐயா,''
:''தாங்கள் வழங்கிய நன்கொடையைப் பெற்றுக்கொண்டோம்.''
 
:''இப்படிக்கு,''
:''ம. கிள்ளிவளவன்.''
 
:20) முகவரியைக் கிடக்கை வரிசையில் தரும்போது பெயர், பதவி, நிறுவனம், வீட்டு எண், தெரு போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''முனைவர் இளங்குமரன், தமிழ்த் துறை, கலைவாணர் கல்லூரி, கன்னியாகுமரி.''
 
:21) தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வரதராசனார், மு.''
 
:22) பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''முனைவர் க. இளங்கோவன், எம்.ஏ., டி.லிட்.''
 
:23) மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும் ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நவம்பர் 14, 1958.''
 
 
:'''கால்புள்ளி தேவை இல்லாத இடங்கள்:'''
 
:1) தேதியைப் பின்வரும் முறைகளில் குறிப்பிடும்போது கால்புள்ளி தேவை இல்லை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''25 மார்ச்சு 1978''
:''1978 மார்ச்சு 25''
 
:2) முகவரியைப் பின்வரும் முறையில் எழுதும்போது கால்புள்ளி தேவை இல்லை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''உமா அச்சகம்''
:''22 காளையார் கோவில் தெரு''
:''திருநெல்வேலி 627 006''
 
==2) அரைப்புள்ளி (;)==
 
எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது '''கால்புள்ளி''' குறிக்கின்ற இடைவெளியைவிட சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க '''அரைப்புள்ளி''' பயன்படுகிறது. அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''புயற்காற்று வீசியதும் மரங்கள் சாய்ந்தன; ஒலைக் கூரைகள் பறந்தன; மண்சுவர்கள் இடிந்து விழுந்தன.''
 
:2) காரணத்தையும் விளைவுகளையும் குறித்து வரும் முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''காந்தி சொன்னார்; கதர் அணிந்தோம்.''
 
:3) ''ஒப்புமைப்படுத்துதல்,'' ''மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்'' என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள்.''
 
:4) ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டவர்கள்: செல்வி, மதுரை; அமுதன், குளத்தூர்; அறவாணன், திருவையாறு; கண்ணகி, பூம்புகார்.''
 
==3) முக்கால்புள்ளி (:)==
 
எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது '''அரைப்புள்ளி''' குறிக்கின்ற இடைவெளியைவிட மேலும் சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க '''முக்கால்புள்ளி''' பயன்படுகிறது. ஒரு வாக்கியத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேறுபடுத்திக் காட்ட அரைப்புள்ளி பயன்படுகிறது என்றால், முக்கால்புள்ளி ஒரு சொற்றொடரைத் தொடர்ந்து வரும் பகுதி அச்சொற்றொடரின் கருத்தை மேலும் விரிவாக்கி, தெளிவுபடுத்தி, விளக்கியுரைப்பதைக் குறிக்கிறது.
 
முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) செய்தியை அறிமுகப்படுத்தும் ''என்னவென்றால்'' போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தலைவரைச் சந்தித்ததும் எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த கூட்டம் எப்போது?''
 
:2) தலைப்புபோல் பொதுவாகக் கூறப்பட்டதற்கும் அதன் விரிவாகக் கூறப்பட்ட விவரங்களுக்கும் இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."
 
:3) வரையறையை அல்லது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் ''என்பது,'' ''என்றால்'' போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''சான்றோர்: அறிவில் சிறந்தோர்.''
 
:4)கூற்றை அறிமுகப்படுத்தும் ''கூறியதாவது'' போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுதல் முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''ஆசிரியர்: மூவேந்தர் யார்?''
:''மாணவர்: சேர சோழ பாண்டியர்.''
 
:5) விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''பெயர்: வைரமுத்து''
:''ஊர்: திருவண்ணாமலை''
 
:6) ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''இயக்கம்: மணியன்''
:''இசை: பாணன்''
 
:7) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் தலைப்பை முதன்மைப்படுத்திக் கூறும்போது அந்தத் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றுக்கும் இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வரலாறு காணா நிலநடுக்கம்: ஈரானில் பத்தாயிரம் பேர் பலி''
 
:8) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் இடத்தையும் நிகழ்ச்சியையும் தொடர்புபடுத்தும்போது அவற்றுக்கு இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''சென்னை: தமிழ்ப் புத்தகக் கண்காட்சி''
 
:9) விவிலிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது அல்லது அவற்றை அடிக்குறிப்பில் இடும்போது அதிகாரம் வசனம் எனப் பிரிப்பதற்கு முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''"இயேசு, 'விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த வாழ்வு தரும் உணவு நானே' என்றார்" (யோவான் 6:51)''
 
:''"இயேசு, 'உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனை வேண்டுங்கள்' என்றார்"'' (மத்தேயு 5:44)''
 
:10) நேரம் குறிப்பிடும்போது இத்தனை மணிக்கு என்று கூற மணிக்கும் மணித்துளிக்கும் இடையே முக்கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''காலை 10:30க்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.''
 
:''பேருந்து மாலை 6:45க்குப் புறப்படவிருக்கின்றது.''
 
==4) முற்றுப்புள்ளி (.)==
 
ஒரு சொற்றொடர் அல்லது வாக்கியம் முடிவுற்றது என்பதைக் குறிக்க முற்றுப்புள்ளி பயன்படுகிறது.
 
முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) கூற்று வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தமிழ் இலக்கியம் கடந்த இரு நூற்றாண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்தது.''
 
:2) ஏவல் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''விளக்கம் அறிய இருபதாம் பக்கம் புரட்டுக.''
 
:3) மேற்கோள் பெற்றுவரும் வாக்கியத்தின் இறுதியில் மேற்கோள்குறிக்கு முன் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''"செய்வன திருந்தச் செய்க."''
 
:4) கிடக்கை வரிசையில் அமைக்கும் பட்டியலின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
: எடுத்துக்காட்டு:
 
:''திருக்குறளில் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.''
 
:5) கிடக்கை வரிசையில் அமைக்கும் முகவரியின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வ. எழில், கதவு எண் 24, வடக்குத் தெரு, பூந்துறை, கன்னியாகுமரி மாவட்டம்.''
 
:6) ஒரு வாக்கியம் முழுவதும் பிறை அடைப்பிற்குள் வந்தால் முடிவில் வரும் பிறை அடைப்பிற்கு முன்னால் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு: ''நாட்டுக்கு நற்பணியாற்ற மாணவர் முன்வர வேண்டும். (பிறருக்கும் அக்கடமை உண்டு.)''
 
:7) ஒரு வாக்கியத்தின் முடிவில் கூடுதல் தகவல் பிறை அடைப்பிற்குள் தரப்பட்டிருந்தால் பிறை அடைப்பிற்கு வெளியே முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''சில ஆங்கிலச் சொற்கள் பெருவழக்காக உள்ளன (பேப்பர் போன்றவை).''
 
==5) புள்ளி (.)==
 
வாக்கியத்தின் முடிவில் பயன்படுத்தப்படுவது '''முற்றுப்புள்ளி'''. ஏனைய இடங்களில் பயன்படுத்தப்படுவது '''புள்ளி'''. ஆனால் குறியீடு
இரண்டிற்கும் ஒன்றுதான்.
 
முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) சுருக்கக் குறியீடாக உள்ள எழுத்தை அடுத்து புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''பி.கு.'' (பின்குறிப்பு)
:''எ.கா.'' (எடுத்துக்காட்டு)
:''த.நா.'' (தமிழ்நாடு)
 
:2) சுருக்கக் குறியீடாக உள்ள எழுத்துக்களை அடுத்து விகுதிகள் சேர்க்கப்படும்போதும் புள்ளி இருக்க வேண்டும்.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐ.நா.வின் முடிவுகள்''
 
:3) ஒருவரின் பெயருக்கு முன்னோ பின்னோ வரும் தலைப்பு எழுத்துக்களை அடுத்து புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''வ.உ. சிதம்பரனார்''
:''சி.வி.இராமன்''
:''சுந்தரம், இராம.''
 
:4) வரிசைக்குப் பயன்படுத்தும் எண் அல்லது எழுத்தை அடுத்தும் வரிசை எண்ணின் உட்பிரிவாக வரும் எண்களின் இடையிலும் புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
<br>''(அ) தென்னிந்திய மொழிகள்:''
:''1. தமிழ்''
:''2. தெலுங்கு''
:''3. கன்னடம்''
:''4. மலையாளம்''
 
<br>''(ஆ) மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகள்:''
:''அ. உண்பதற்கு உணவு''
:''ஆ. உடுப்பதற்கு ஆடை''
:''இ. வசிப்பதற்கு இடம்''
 
<br>''(இ) 1.1 முன்னுரை''
:''1.2 தமிழ் இலக்கியங்கள்''
:''1.2.1 சங்க இலக்கியம்'''
:''1.2.2 இடைக்கால இலக்கியம்''
:''1.2.3 இக்கால இலக்கியம்''
 
:5) எண்ணால் குறிக்கப்படும் தேதியின் பின்னும் மாதத்தின் பின்னும் புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்
 
:''17.05.99''
:''25.03.1989''
 
:'''புள்ளி தேவை இல்லாத இடங்கள்:'''
 
:1) ஒருவரின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் அடைமொழியை அடுத்தும் அடைமொழிகளுக்கு இடையிலும் புள்ளி தேவையில்லை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''திருமதி எழிலரசி''
:''திரு மு. கண்ணப்பன்''
:''அறிஞர் அண்ணா''
:''முனைவர் பா. முருகன்''
 
:2) எண்ணின் உட்பிரிவாக எழுத்து வரும்போது எண்ணுக்கும் எழுத்துக்கும் இடையில் புள்ளி தேவையில்லை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''9 அ''
:''8 d''
 
==6) முப்புள்ளி (...)==
 
மூன்று புள்ளிகளாலாகிய '''முப்புள்ளி''' விடுபட்ட சொல்/சொற்றொடர் குறிக்கவும் சில உணர்வுகளைப் பகிரவும் பயன்படுகிறது.
 
முப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) வாக்கியத்தில் விடப்பட்ட பகுதியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அறையில் குடும்பமே கூடிவிட்டது. அம்மா, அப்பா, அக்கா...''
 
:2) வாக்கியத்தின் இறுதியில் சிந்தனைத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''சிலவேளை அங்கே மும்பையில்கூட அவன் இருக்கலாம்...''
 
:3) சொற்களின் ஒலிப்புத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அம்மா, கத்தரிக்காய், கத்தரிக்காய்...''
 
==7) கேள்விக்குறி (?)==
 
ஒரு பொருள் குறித்து மேலும் அறியவோ ஐயம், வியப்பு போன்ற உணர்வுகளைத் தயக்கத்தோடு வெளிப்படுத்தவோ '''கேள்விக்குறி''' பயன்படுகிறது.
 
கேள்விக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''மதுரைக்குப் போய் வந்துவிட்டீர்களா?''
 
:2) ஐயம், நம்பிக்கையின்மை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இன்னும் இரு நாட்களில் பருவமழை பெய்யும்?''
 
:3) வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக்குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
 
:எடுத்துக்காட்டு:
 
:''உங்களால் இவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடிந்தது?!''
 
 
:'''கேள்விக்குறி தேவை இல்லாத இடங்கள்:'''
 
:1) அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் கேள்விக்குறி இடுவதில்லை. இறுதி வினாவில் மட்டும் இட்டால் போதும்.
 
:எடுத்துக்காட்டு:
 
:''மும்பைக்கு எப்படிப் போவீர்கள், விமானத்திலா, பேருந்திலா?''
 
:2) ''என, என்று, என்ற, என்பது'' ஆகிய சொற்களுக்கு முன் மேற்கோள்குறி இல்லாமல் வரும் வினாவை அடுத்து கேள்விக்குறி இடுவதில்லை.
 
:எடுத்துக்காட்டு:
 
''இதைச் செய்யலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமே இல்லை.''
 
==8) உணர்ச்சிக்குறி (!)==
 
வியப்பு, மகிழ்ச்சி, அச்சம் போன்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தவும் விளித்துப் பேசவும் ''''உணர்ச்சிக்குறி''' பயன்படுகிறது.
 
உணர்ச்சிக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1)வியப்பு, மகிழ்ச்சி, அதிர்ச்சி, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''எவ்வளவு பெரிய மலை!'' (வியப்பு)
 
:''நாம் எதிர்பார்த்தபடியே திருமணமும் நன்றாக நடந்து முடிந்தது!'' (மகிழ்ச்சி)
 
:''சித்தன் விமான விபத்தில் இறந்துவிட்டான்!'' (அதிர்ச்சி)
 
:''பல்லாயிரக் கணக்கான மக்களை ஆழிப்பேரலை விழுங்கிவிட்டது!'' (இரக்கம்)
 
:''பொருளாதாரத் தேக்கம் காரணமாக முருகனின் வேலை போய்விடுமோ!''' (அச்சம்)
 
:''ஊழல் பேர்வழிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வேறா!'' (வெறுப்பு)
 
:2) உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''ஓகோ! இன்றைய திருமணத்திற்கு நேற்றே வந்துவிட்டீர்களா?''
 
:''ஆ!''
 
:''அட!''
 
:''சே!''
 
:''சீ!''
 
:''ஐயோ!''
 
:''அப்படியா!''
 
:''ஆகா!''
 
:''என்னே!''
 
:''அந்தோ!''
 
:''ஐயகோ!''
 
:3) உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐயோ ஐயோ!''
 
:4) கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''தீ! தீ!''
 
:''பாம்பு! பாம்பு!''
 
:5) விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''பெரியோர்களே! தாய்மார்களே!''
 
:''அன்பர்களே!''
 
:''என் இனிய எந்திரா!''
 
:6) வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''மணமக்கள் வாழ்க!''
 
:''புரட்சி ஓங்குக!''
 
:''எங்கேயாவது போய்த்தொலை!''
 
:7) வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வருக வருக!''
 
:8) முழக்கமிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது தொடர்கள் அடுத்தடுத்து வரும்போது ஒவ்வொன்றின் இறுதியிலும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''கோழைகள்! துரோகிகள்!''
 
:''உண்மை! முற்றிலும் உண்மை!''
 
==9) இரட்டை மேற்கோள்குறி (" ")==
 
ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்டவும் நூல்களிலிருந்து ஏதாவது பகுதியை ஆதாரமாகக் காட்டவும் '''இரட்டை மேற்கோள்குறி''' பயன்படுகிறது.
வரி 590 ⟶ 42:
:''"யாகாவாராயினும் நாகாக்க" (குறள் 127) என்னும் வள்ளுவர் கூற்று இன்றும் பொருளுடைத்ததே.''
 
==10) ஒற்றை மேற்கோள்குறி (' ')==
 
ஒரு மேற்கோளுக்குள் இன்னொரு மேற்கள் வரும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ தொடரையோ தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி பயன்படுகிறது.
வரி 632 ⟶ 84:
:''வள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' (குறள் 621)என்று கூறியுள்ளார்.''
 
==11) தனி மேற்கோள்குறி (')==
 
எண் அல்லது எழுத்து விடுபடுவதைக் குறிக்கத் '''தனி மேற்கோள்குறி''' பயன்படுகிறது.
வரி 642 ⟶ 94:
:(பேச்சு வழக்கில்): ''ஆமாம்'பா'' (ஆமாம் அப்பா)
 
==12) மேற்படிக்குறி (")==
 
''மேலே குறிப்பிட்டதுபோல'' என்னும் பொருளில் '''மேற்படிக்குறி''' பயன்படுகிறது.
வரி 651 ⟶ 103:
:''அரிசி " ரூ. 40''
 
==13) பிறை அடைப்பு ( )==
 
கூறப்படும் கருத்திற்கு மேலாகக் கூடுதல் தகவல் தரும்போது பிறை அடைப்பு இடலாம்.
வரி 713 ⟶ 165:
:''அ)''; ''ஆ''; ''இ)''
 
==14) [[சதுர அடைப்பு [ ]]]==
 
பிறை அடைப்புக்குள் தரப்படும் செய்திக்கு மேலாக அச்செய்திக்கு மெருகூட்டும் தகவல் தர வேண்டுமாயின் சதுர அடைப்பு பயன்படுகிறது.
வரி 730 ⟶ 182:
:''தொற்று நோய்கள் (காதுத் தொற்று நோய்கள் [ பக். 31], மணல்வாரி [பக். 50]) வயிற்றுப்போக்குக்குக் காரணமாக அமையலாம்.''
 
==15) இணைப்புக்கோடு (--)]]/ [[இணைப்புச் சிறுகோடு (-)==
 
இணைப்புக்கோடு (dash) இணைப்புச் சிறுகோடு (hyphen) ஆகிய இரண்டு நிறுத்தக்குறிகளையும் வேறுபடுத்திக் காண்பது முறை.
வரி 872 ⟶ 324:
(குறிப்பு: ''நாகர்கோவில்-629 001'', ''திருச்சிராப்பள்ளி-620 001'' என்பதைத் தவிர்க்கலாம்).
 
==16) சாய்கோடு:(/)==
 
'''முன்சாய்கோடு''' (forward slash) (/) மட்டுமே நிறுத்தக்குறியாகப் பயன்படுகிறது. '''பின்சாய்கோடு''' (back slash) (\) கணினி மொழி வழக்கில் மட்டுமே உள்ளது; நிறுத்தக்குறியாகப் பயன்படுவதில்லை.
வரி 923 ⟶ 375:
(விடுதி/பேருந்து என்று எழுதுவதைத் தவிர்க்கலாம்.)
 
==17) அடிக்கோடு (_)==
 
சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய வாக்கியத்தையோ வாக்கியங்களையோ குறிக்க அடிக்கோடு பயன்படுத்தப்படுகிறது. கையெழுத்தில் அடிக்கோடு இடுதல் வழக்கம். தட்டச்சு செய்வதிலும் கணினி முறையிலும் அவ்வழக்கம் உள்ளது. ஆயினும் அடிக்கோடு இடுவதற்குப் பதிலாக ''சாய்வெழுத்து'' அல்லது '''தடித்த எழுத்து''' முறை இன்று கணினி உலகில் பரவலாகக் கையாளப்படுகிறது.
வரி 931 ⟶ 383:
:புகைபிடித்தல் உடல்நலக் கேடு விளைவிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புகைபிடித்தலால் ஏற்படுகின்ற மற்றொரு தீய விளைவு ''பணம் பாழடிக்கப்படுதல்'' ('''பணம் பாழடிக்கப்படுதல்''') என்பதைப் பலரும் கருத்தில் கொள்வதில்லை.
 
==18) உடுக்குறி (*)==
 
பக்கத்தின் அடியில் சிறப்புத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட உடுக்குறி பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது