நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மீளமை
சி மீளமை
வரிசை 25:
 
 
==ஒற்றை மேற்கோள்குறி (' ')==
 
ஒரு மேற்கோளுக்குள் இன்னொரு மேற்கள் வரும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ தொடரையோ தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி பயன்படுகிறது.
 
ஒற்றை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''"திருக்குறள் தோன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்னும் கருத்தை ஏற்கும் அவர், அது 'உறுதியாக நிலைநாட்டப்படவில்லை' என்றும் கூறுவது புதிராகவே உள்ளது."''
 
:2) ஒருவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் கூற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''பூங்காவை அடைந்ததும் 'இங்கே இளைப்பாறலாம்' என்று முடிவுசெய்துவிட்டான் கண்ணன்.''
 
:3) எழுதுபவர் தம் நோக்கில் ஒரு சொல்லையோ தொடரையோ தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''காந்தியை 'மகாத்மா' என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.''
 
:4) கட்டுரை முதலியவற்றில் சொல்லுக்கான வரையறை, கலைச்சொல்லைக் குறிக்கும் பகுதி, மொழிபெயர்க்கப்பட்ட பகுதி போன்றவற்றைக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வள்ளுவர் 'வான் சிறப்பு' என்னும் அதிகாரத்தில் மழையின் பெருமையைப் போற்றுகிறார்.''
 
:5) சந்திப்பின்போது தெரிவிக்கும் சொற்கள், தலைப்பு, பழமொழி, இலக்கிய மேற்கோள் ஆகியவற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''அவர் யாரைப் பார்த்தாலும் 'நலம் தானே!' என்று விசாரிக்காமல் உரையாடலைத் தொடங்கமாட்டார்.''
 
:''காதலின் மேன்மையைக் 'குயில் பாட்டு' என்னும் கவிதையில் பாரதியார் பாடியுள்ளார்.''
 
:''செல்வன் 'செய்வன திருந்தச் செய்' என்னும் கொள்கையில் மிகவும் பிடிப்புடையவன்.''
 
:''வள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' (குறள் 621)என்று கூறியுள்ளார்.''
 
==தனி மேற்கோள்குறி (')==
வரி 387 ⟶ 346:
 
[[பகுப்பு:தமிழ் நடை]]
[[பகுப்பு:நிறுத்தக்குறிகள்]]
[[பகுப்பு:தமிழ் உரைநடை]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது