அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அழகி (azhagi.com) - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு . முற்றிலும் இலவச தமிழ் மென்பொருள்...
 
சி அழகி (azhagi.com) - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள். முற்றிலும் இலவசம்
வரிசை 5:
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது. விவரங்களுக்கு, http://www.azhagi.com/multi.html பக்கம் பார்க்கவும்.
 
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration). இது போன்ற உதாரணங்கள் இன்னும் பல. அவற்றை, அழகியை உபயோகிக்கையில் நீங்களே அறிந்துணர்வீர்கள். தேவை இருப்பின், இது தொடர்பாக மழலைகள்.காம் ஆசிரியர் எழுதியுள்ள விளக்கமான உரைகளை இங்கே காணலாம்.
 
மேற்கூறியவை குறித்தும், அழகியின் மற்ற சில பயன்பாடுகள் குறித்தும், tamilsoftwares.blogspot.com என்ற தனது வலைப்பூவில் பல தகவல்களையும்/விளக்கங்களையும் தந்துள்ள வலைப்பதிவாளர் திரு. அந்தோணி அவர்களுக்கு நன்றி. இது போலவே, தனது வலைத்தளத்தில், அழகி மென்பொருளுக்கென பல விளக்கப் பக்கங்கள் அமைத்துள்ள மழலைகள்.காம் ஆசிரியர் திரு. ஆ.கி. இராஜகோபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
"https://ta.wikipedia.org/wiki/அழகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது