"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,574 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: சிபி சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு ...)
 
சிபி சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாறு [[தாமப்பல் கண்ணனார்]] பாடிய [[புறநானூறு 43]]ஆம் பாடலில் உள்ளது.
===சோழன் சிபி வரலாறு===
'கூர் உகிர்ப் பருந்தின் எறுஏறு குறித்து ஒரீஇத், தன் அகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி அஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை உரவோன்' என்று [[சிபி(சிபி சக்கரவர்த்தி)|சோழன் சிபியின்]] வரலாற்றை இப் புலவர் குறிப்பிடுகிறார்.
 
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது.
 
(சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.)
 
புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613100" இருந்து மீள்விக்கப்பட்டது