சொட்டு நீர்ப்பாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைப்போட்டி கட்டுரை பதிவேற்றம்
கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை இங்கே வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.
வரிசை 1:
[[படிமம்:Dripirrigation.gif|thumb|right|380px|சொட்டுநீர்ப் பாசன முறையின் வடிவமைப்பு. நீரேற்றி, முதன்மைக்குழாய், விடுகுழாய் அல்லது உமிழி, வடிகட்டிகள், ஒருபோக்கி (valve) முதலிய அமைப்புகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[படிமம்:Dripperwithdrop.gif|thumb|right|280px|சொட்டுநீர் உமிழி]]
'''சொட்டுநீர் பாசன முறை''' அல்லது '''நுண்ணீர் பாசனம்''' (Drip irrigation system) என்பது முதன்மை [[குழாய்]], துணை குழாய்
மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான [[நீர்|நீரை]], அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும்
ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. ஓவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர்,
[[ஊட்டச்சத்து]] மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, [[பயிர்]]களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது.
நீராதாரம் குறைந்து வந்தாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் (உற்பத்தித்)
திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைக்கும் நீரைக்
கொண்டு [[வேளாண்மை]]யை நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் பயிர்த்தொழிலாளர்கள் (உழவர்கள்) உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே
நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் (சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்). உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது,
வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் [[நுண்புழை]] ஆற்றல் மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும்
ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான
வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.
==உழவர்களுக்கு மானியம் (இந்தியா)==
 
சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திட ஆகும் மொத்தச் செலவு தொகையில் 65% என அரசு மானியமாக
வழங்குகிறது. பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு ஆகிய பயிர்களில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க
மானியம் வழங்கப்படுகிறது. ஓர் உழவர் குடும்பத்துக்கு அதிக அளவ்வாக 5 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு
நகல், மண், நீர் பரிசோதனை முடிவறிக்கை மற்றும் நிறுவன விலைப்புள்ளியுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி
இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
==சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்==
 
* குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்யலாம்.
* 75% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம்.
* சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்.
* பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
* தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம்.
* களை எடுக்க வேண்டியதில்லை.
* ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.
* தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.
[[பகுப்பு:வேளாண்மை]]
 
சொட்டு நீர்ப்பாசனம் ஓர் விளக்கம்
(A Briefing on Drip Irrigation)
வரி 135 ⟶ 171:
• பாசனம் பல்வேறு வகைகளில் நடக்கலாம் என்றாலும் தகுந்த இடங்களுக்கு ஏற்ற பாசன முறைகளை தெளிவாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே முழுமையான நன்மையைப் பெற முடியும்.
• இதன் மூலம் சொட்டு நீர்ப் பாசனம் எப்படிப்பட்ட முறைகளில் மேற்கொள்ளப்படலாம் என்பதைப் பற்றி ஓர் தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
 
 
===நூற்பட்டியல்===
* Drip and Micro Irrigation Design and Management for Trees, Vines, and Field Crops, 3rd Edition, by Charles M. Burt and Stuart W. Styles, published by the Irrigation Training and Research Center, 2007
* Irrigation, 5th Edition,Engr Muhammad Irfan Khan Yousafzai, Claude H. Pair, editor, published by the Irrigation Association, 1983
* Trickle Irrigation for Crop Production, F.S. Nakayama and D.A. Bucks, editors, published by Elsevier, 1986, ISBN 0-444-42615-9
* S. Blass, Water in Strife and Action (Hebrew), published by Massada limited, Israel, 1973
* Maintenance Manual, published by Jain Irrigation, 1989
 
[[ar:إرواء بالتنقيط]]
[[ca:Regatge gota a gota]]
[[cs:Kapková závlaha]]
[[de:Tröpfchenbewässerung]]
[[en:Drip irrigation]]
[[eo:Gutiga irigacio]]
[[es:Riego por goteo]]
[[fi:Tihkukastelu]]
[[fr:Micro-irrigation]]
[[he:השקיה בטפטוף]]
[[id:Irigasi tetes]]
[[it:Irrigazione a goccia]]
[[ja:点滴灌漑]]
[[mn:Дуслын усалгаа]]
[[nl:Druppelirrigatie]]
[[no:Dryppvanning]]
[[ru:Капельное орошение]]
[[te:బిందు సేద్యం]]
[[uk:Крапельне зрошування]]
[[zh:滴灌]]
"https://ta.wikipedia.org/wiki/சொட்டு_நீர்ப்பாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது