நீதிமொழிகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மீளமை
சி நீதிமொழிகள் - மீளமை
வரிசை 33:
நூலின் இறுதி இரண்டு அதிகாரங்களிலும் ஆகூர், இலமுவேல் ஆகியோர் தந்த அறிவுரைத் தொகுப்பு உள்ளது.
 
==திருக்குறளும் நீதிமொழிகள் நூலும்: ஓர் ஒப்பீடு==
 
திருக்குறளுக்கும் நீதிமொழிகள் நூலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ''ஞானம்'' என்பது நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை ''அறிவு'' என்பார். ''அறிவுடைமை'' என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் ''அறிவு'' என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:
 
; 1) எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோ(டு)<br>
;அவ்வ(து) உறைவ தறிவு <small>(குறள் 426)</small>
 
(பொருள்: உலகில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை எவ்வகையில் உள்ளதோ, அவ்வகையில் மக்களோடு இணைந்து ஒன்றுபட வாழ்வதே உண்மை அறிவாகும்).
 
மேலும்,
; 2) சென்ற இடத்தால் செலவிடா தீதொரீ<br>
;நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு <small>(குறள் 422)</small>
 
(பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே உண்மை அறிவாகும்).
 
திருக்குறளுக்கு உரைவகுத்த பரிமேலழகர் அறத்துப்பாலின் இறுதியில் வருகின்ற "நிலையாமை", "துறவு", "மெய்யுணர்தல்", "அவாவறுத்தல்" என்னும் நான்கு அதிகாரங்களின் உள்ளடக்கத்தையும் '''ஞானம்''' என்று குறிப்பிட்டார். "ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு" என்பது பரிமேலழகர் கூற்று. நீதிமொழிகள் நூலும் திருக்குறளும் '''ஞானம்''' (அறிவு, மெய்யறிவு, மெய்யுணர்வு) பற்றிக் கூறுவனவற்றில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கீழ்வரும் அடைவு தெளிவாகக் காட்டுகிறது.
 
{| class="wikitable"
|-
! விவிலியம்: நீதிமொழிகள் நூல் பாடம்
! இணையான திருக்குறள் எடுத்துக்காட்டு
|-
| "தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது" (10:2அ)
| சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீயி யற்று <small>(660)</small>
|-
|"வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்;
விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்" (10:4)
| மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் <small>(617)</small>
|-
|"ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்;
குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்" (11:25)
| காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள <small>(527)</small>
|-
|"ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்;
சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்" (12:24)
|மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும் <small>(608)</small>
|-
|"ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவார்;
மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்" (13:20)
|நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு <small>(452)</small>
|-
|"ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானர் எனக் கருதுவர்;
செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்" (14:20)
|இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு <small>(752)</small>
|-
|"மேன்மை அடையத் தாழ்மையே வழி" (14:33ஆ)
|பணியுமாம் என்றும் பெருமை... <small>(978)</small>
|-
|"பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்;
வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல் (16:16)
|கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற பிற <small>(400)</small>
|-
|"வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்" (17:20ஆ)
|யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு <small>(127)</small>
|-
|"கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு;
உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு" (18:24)
|முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு <small>(786)</small>
|-
|"நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்;
ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன்<br>
அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.
நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக;<br>
உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக"(23:24-25)
|ஈன்ற பொழுதின் பெருதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்எனக் கேட்ட தாய் <small>(69)</small>
|-
|"முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட,
மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்" (28:6)
|நல்லார்கண் பட்ட வறுமையும் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு <small>(408)</small>
|}
==நீதிமொழிகள் நூலின் உட்பிரிவுகள்==
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/நீதிமொழிகள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது