பிரேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Birendra nepáli király
சி தானியங்கிமாற்றல்: sv:Birendra av Nepal; cosmetic changes
வரிசை 1:
{{Infobox_Monarch
| name =பிரேந்திரா<br />वीरेन्द्र वीर विक्रम शाहदेव<br />Bīrendra Bīr Bikram Śāh Dev
| title =[[நேபாளம்|நேபாள]] மன்னர்
| image =<!-- Image with unknown copyright status removed: [[Image:Birendra.jpg|{{deletable image-caption|1=Sunday, 11 November 2007}}]] -->
வரிசை 24:
'''பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ்''' (''Birendra Bir Bikram Shah Dev'', वीरेन्द्र वीर विक्रम शाहदेव) ([[டிசம்பர் 28]], [[1945]] – [[ஜூன் 1]], [[2001]]) என்பவர் [[1972]] முதல் [[2001]] இல் இறக்கும் வரை [[நேபாளம்|நேபாள]]த்தின் மன்னராக இருந்தவர். இவருக்கும் முதல் இவரது தந்தையார் [[மகேந்திரா]] மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [[ஜூன் 1]], [[2001]] இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் [[தீபேந்திரா]] சுட்டுக் கொன்றார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இளவரசர் {[[1955]] இல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். [[இந்தியா]]வில் [[டார்ஜீலிங்]], புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் [[ஈட்டன் கல்லூரி]] ([[1959]]-[[1964|64]]), [[டோக்கியோ பல்கலைக்கழகம்]] (1967), மற்றும் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1967]]-[[1968|68]]) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார்.
 
பிரேந்திரா [[ராணா குடும்பம்|ராணா குடும்பத்தை]]ச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை [[பெப்ரவரி 27]] [[1970]] இல் [[திருமணம்]] புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
 
* இளவரசர் [[தீபேந்திரா]] ([[ஜூன் 27]], [[1971]] – [[ஜூன் 4]], [[2001]])
* இளவரசி சுருதி ([[அக்டோபர் 15]], [[1976]] - [[ஜூன் 1]], [[2001]])
* இளவரசர் நிரஞ்சன் ([[நவம்பர் 6]] [[1977]]&ndash;[[ஜூன் 1]] [[2001]])
 
== மன்னர் பதவி ==
தந்தை மகேந்திரா [[1960]] இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். [[சோவியத் ஒன்றியம்]], [[சீனா]] ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.
 
பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். [[1990]] இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து [[ஏப்ரல் 8]] இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். [[நவம்பர் 9]] இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். [[மனித உரிமை]]க்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் [[நேபாள மக்கள் புரட்சி|உள்நாட்டுப் போருக்கு]] வழிவகுத்தன. [[1996]] முதல் [[2006]] வரையில் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்டு]]களுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.
 
== படுகொலைகள் ==
{{Main|நேபாள அரசுப் படுகொலைகள்}}
[[ஜூன் 1]], [[2001]] இல் அரச விருந்து ஒன்றின் போது பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் [[தீபேந்திரா]]வினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் டீபேந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இப்படுகொலைகளுக்கு பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் [[ஞானேந்திரா]]வே காரணம் என நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர்<ref> [http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=/arts/2001/06/23/tlnap23.xml Death of a dynasty]</ref>,<ref> [http://edition.cnn.com/2001/WORLD/asiapcf/south/06/08/nepal.royal.probe/index.html Nepal massacre inquiry begins, at long last] </ref>,<ref> [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1387953.stm Prince blamed for Nepal massacre] </ref>. இக்கொலைக்கான முழுக்காரணமும் இதுவரையில் அறியப்படவில்லை என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது. அத்துடன் தீபேந்திரா மதுவுக்கு அடிமையாகியிருதார் எனவும் அதனால் [[மன அழுத்தம்]] அதிகம் கொண்டவராகவும் இருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன<ref> [http://www.gjpsy.uni-goettingen.de/gjp-madnessofpsychiatry-part1.pdf Madness of psychiatry] </ref>. பிரேந்திராவின் இறப்புக்குப் பின்னர் தீபேந்திரா நேபாள மன்னராக அறிவிக்கப்பட்டாலும் இவரும் 4 நாட்களின் பின்னர் [[ஜூன் 4]], [[2001]] இல் தன்னைத்தானே சுட்டதினால் ஏஎற்பட்ட காயங்களின் பின்னர் இறந்தார். பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திரா மன்னரானார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
வரிசை 63:
[[pt:Birendra Bir Bikram Shah Dev]]
[[ru:Бирендра]]
[[sv:Birendra av Nepal]]
[[zh:畢蘭德拉]]
"https://ta.wikipedia.org/wiki/பிரேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது