லக்சம்பர்க் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 24:
 
 
'''லக்சம்பர்க் படையெடுப்பு''' (''Invasion of Luxemburg '') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. மே 10, [[1940]]ல் [[நாசி ஜெர்மனி]] [[லக்சம்பர்க்]] நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.
 
செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் [[போலந்து|போலந்தைத்]] [[போலந்து படையெடுப்பு|தாக்கியதால்]] இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து [[நேச நாடுகள்]] பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் [[போலிப் போர்|தயார் நிலையில்]] இருந்தது. பிரான்சின் மீதான ஜெர்மானியத்ட் தாக்குதல் மே 10, 1940ல் தொடங்கியது. பிரான்சின் மீது நேரடியாகவும் [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியம்]], [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்து]], லக்சம்பர்க் வழியாகவும் இருமுனைகளில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. லக்சம்பர்கின் பெரிய டச்சி என்ற அதிகாரப்பூர்வ பெயருடைய லக்சம்பர்க் நாடு மிகச் சிறியது. லக்சம்பர்க் நகரமும் அதனை சுற்றியிருந்த சில பகுதிகள் மட்டுமே இதில் உள்ளன. 1867 முதல் லக்சம்பர்க் எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] போர்களிலும் ஈடுபடாமல் [[நடுநிலை]] வகித்து வந்தது. இரண்டாம் உலகப்போர் மூளும் என்று எதிரிபார்ர்க்கப் பட்டதால், இரு தரப்பினரையும் கோபப்படுத்தாமல் இருக்க கவனத்துடன் செயல்பட்டது. ஆனால் ஜெர்மனி லக்சம்பரிகின் நடுநிலையை பொருட்படுத்தாமல் அதனைத் தாக்கக்கூடுமென்ற அச்சத்தால் ஜெர்மானிய எல்லையில் சாலைகளின் குறுக்கே இரும்புக் கதவுகளுடனான கான்கிரீட் தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஜெர்மானியப் படைபலத்துடன் ஒப்பிடுகையில் லக்சம்பர்கின் பாதுகாவல் படைகள் சொற்பமானவையே. ஜெர்மனி லக்சம்பர்கை தாக்கினால் அவற்றால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அனைவரும் உணர்ந்திருந்த்னர்.
"https://ta.wikipedia.org/wiki/லக்சம்பர்க்_படையெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது