நிறுத்தக்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி திருத்தம்
வரிசை 25:
 
 
==பிறை அடைப்பு ( )==
 
கூறப்படும் கருத்திற்கு மேலாகக் கூடுதல் தகவல் தரும்போது பிறை அடைப்பு இடலாம்.
 
:1) விரித்துக் கூறுதல், விளக்கிக் கூறுதல், கூடுதல் தகவல் போன்றவற்றைக் குறிக்க வாக்கியத்துக்குள் பிறை அடைப்பு இடலாம்.
 
:எடுத்துக்காட்டு:
 
:''கல்லூரியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக இரு மாணவர்கள் (வயது 22, 23) கைதுசெய்யப்பட்டார்கள்.''
 
:''செவ்வாய்க்கிழமை (மார்ச்சு 22) மாலை இசை விருந்து நிகழ்ந்தது.''
 
:''பத்துவயதுக்குட்பட்ட சிறுவர் அனைவரும் (25 பேர்) நலமே போய்ச் சேர்ந்தார்கள்.''
 
:2) ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைத் தமிழ் முறையில் எழுதும்போது அவற்றிற்கு இணையான ஆங்கிலத் தேதியை உள்ளடக்கிக் காட்ட பிறை அடைப்பு இடலாம்.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நிகழும் பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் 28ஆம் நாள் (11.6.1999) வெள்ளிக்கிழமை''
 
:3) தமிழ்ச் சொல்லை அடுத்துப் பிறமொழிச் சொல் தரப்படும்போது பிறமொழிச் சொல்லைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துகாட்டுகள்:
 
:''உயிர்வளி (oxygen)''
 
:''நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic)''
 
:4) தமிழில் எழுத்துப் பெயர்ப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் மூலமான பிறமொழிச் சொல்லைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அமெரிக்க அதிபர் ரானல்ட் ரேகன் (Ronald Reagan) குடியரசுக்கட்சியைச் சார்ந்தவர்.''
 
:5) மேற்கோளின் ஆதார நூல் மற்றும் அதன் விவரங்களைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இமயமலையை வருணிக்கும் பாரதியார் 'விண்ணை இடிக்கும் மலை இமயம்' (பாரதி பாடல்கள், செந்தமிழ் நாடு, 9) என்று கூறுவார்.''
 
:6) நாடகம், திரைப்படம் முதலியவற்றின் உரையாடல் பகுதிகளில் காட்சி அமைப்பு, பாத்திர வருணனை, நடிப்பு முறை முதலியவற்றுக்கான குறிப்புகளைக் காட்ட பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துக்காட்டு:
 
:''கண்ணன்: (ஏளனச் சிரிப்போடு) யார் வீரன் என்பது விரைவில் தெரிந்துவிடும்!''
 
:7) தொடர் முறையில் வரும் கதையின் அல்லது கட்டுரையின் இறுதியில் அது முடிவுபெற்றது அல்லது தொடர்கிறது என்பதைக் காட்டும் சொற்களை உள்ளடக்க பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''(தொடரும்)''
 
:''(முற்றும்)''
 
:8) வரிசையாகக் காட்டப்படுபவற்றுக்குத் தரப்படும் எண் அல்லது எழுத்தை உள்ளடக்க ஒரு புறத்தில் அல்லது இரு புறங்களிலும் பிறை அடைப்பு பயன்படுகிறது.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''1)''; ''2)''; ''3)''
 
:''அ)''; ''ஆ''; ''இ)''
 
==சதுர அடைப்பு [ ]==
"https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது