எட்கர் தர்ஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எட்கர் தர்ஸ்டன்''' 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் [[சென்னை அருங்காட்சியகம்|சென்னை அருங்காட்சியகத்தின்]] பொறுப்பாளராக இருந்தார். [[பிரித்தானியா|பிரித்தானியரான]] இவர் [[சென்னை]]யில் இருந்த காலத்தில் [[தென்னிந்தியா]]வின் [[சாதி]]கள், [[பழங்குடி]]கள் என்பன தொடர்பில் [[மானிடவியல்]] ஆய்வில் ஈடுபட்டுத் "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலொன்றை எழுதியுள்ளார். இத்துறையில் முன்னோடியாக அமைந்துள்ள இந் நூல் தென்னிந்திய மானிடவியலின் ஒரு அடிப்படை நூலாக உள்ளது. மானிடவியலில் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், பழங்கால [[நாணயம்|நாணயங்கள்]] பற்றியும் இவருக்கு ஆர்வம் இருந்தது. நாணயங்களைச் சேகரிப்பதிலும் அவற்றை ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டிருந்த தர்ஸ்டன் அது குறித்தும் நூல்களை எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கை==
எட்கர் தர்ஸ்டன் இங்கிலாந்தில் உள்ள [[கீவ்]] (Kew) என்னுமிடத்தில் 1855 ஆம் ஆண்டு அவரது பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சார்லசு பாசுவர்த் தர்ஸ்டன். இவர் எட்டனிலும் (Eton), பின்னர் [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள கிங்சு கல்லூரியின் மருத்துவப் பள்ளியிலும் கல்வி பயின்றார். 1877 ஆம் ஆண்டில் பட்டம் பெற்று வெளியேறினார். சில காலம் கிங்சு கல்லூரியின் அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். பின்னர் [[இந்தியா]]வுக்கு வந்த இவர் 1885 ஆம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் இப் பொறுப்பில் இருந்த தர்ஸ்டன், ஓய்வு பெற்ற பின்னர் [[இங்கிலாந்து]]க்குத் திரும்பினார். அங்கே அவர் [[தாவரம்|தாவரங்கள்]] பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டில் "கார்ண்வாலின் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுத் மரங்களும் செடிகளும்" என்னும் தலைப்பிலான நூலையும் வெளியிட்டார். 1935 ஆம் ஆண்டு தமது எண்பதாவது வாதில் பென்சான்சு என்னும் இடத்தில் தர்ஸ்டன் காலமானார்.
 
 
 
[[பகுப்பு:மானிடவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எட்கர்_தர்ஸ்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது