காற்புள்ளி (தமிழ் நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருப்பிவிடப்பட்டது
 
duplicate
வரிசை 1:
#redirect[[Image:Comma.png|thumb|கால்புள்ளி (தமிழ் நடை)]]
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற [[தமிழ் நடை|தமிழ் நடையைக்]] கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ''ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை''யைக் குறிக்கும்.
 
இத்தகைய நெறிமுறையில் [[நிறுத்தக்குறிகள்]] (''punctuation marks'') பெரும் பங்கு வகிக்கின்றன. [[பேச்சு|பேச்சின்]] ஒலிப்பு வேறுபாடுகளை [[உரைநடை]]யில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
 
[[நிறுத்தக்குறிகள்|நிறுத்தக்குறிகளுள்]] புள்ளி என்பது அடிப்படையானது. அது [[கால்புள்ளி]] (comma), [[அரைப்புள்ளி]] (semicolon), [[முக்கால்புள்ளி]] (colon), [[முற்றுப்புள்ளி]] (full stop), [[புள்ளி]] (point), [[முப்புள்ளி]] (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.
 
==கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்==
 
எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு கால இடைவெளியைக் குறிக்க '''கால்புள்ளி''' பயன்படுகிறது. கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நீங்கள் வெளியிட்டிருந்த நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தேன், இரசித்தேன், சிரித்தேன்.''
 
:2) ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இனிமையான, பொருள் பொதிந்த, நெஞ்சை அள்ளும் பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது.''
 
:3) ஒரே வினையைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அந்தப் பாடல் இனிமையாக, உள்ளத்திற்கு நிறைவளிப்பதாக, கடந்த காலத்தை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.''
 
:4) தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் எண்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தந்தை, மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி.''
 
:5) ஒரே சொல் அல்லது (மரபுத் தொடர் அல்லாத) தொடர் இரு முறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவள் வருவாள், வருவாள் என நான் எதிர்பார்த்திருந்தேன்.''
 
 
:6) ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர். ஆனால், அவரால் மேடைகளில் சிறப்பாகப் பேச முடியாது.''
 
 
'''சொற்றொடர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த வரக்கூடிய இடைச்சொற்கள் சில:'''
 
'':அடுத்ததாக, அடுத்து, அதற்கேற்ப, அதன்படி, அதனால், அது போலவே, அது போன்றே, ஆகவே, ஆகையால், ஆயினும், ஆனாலும், இத்துடன், இரண்டாவதாக, இருந்தாலும், இவ்வாறாக, எடுத்துக்காட்டாக, என்றாலும், எனவே, எனினும், ஒருவழியாக, தவிரவும், பிறகு, பின்பு, பின்னால், முடிவாக, முடிவில், முதலாவதாக, முன் கூறியவாறு, மேலும்.''
 
 
:7) வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை.''
 
:8) ''அதாவது,'' ''குறிப்பாக,'' என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், சிறந்த உழைப்பாளிகள்.''
 
:9) அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு: ''அறையில் மண்டிக்கிடந்தது, இருள்.''
 
:10) ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ''இல்லையா'', ''அல்லவா'' போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஆசிரியர் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார், இல்லையா?''
 
:11) ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத்தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''உங்களுக்கு என்ன வேண்டும், இனிப்பா, காரமா?''
 
:12) ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''அவரைத் தடுக்காதே, போகவிடு.''
 
:13) எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தங்கையின் திருமணம், வருகிற 10ஆம் தேதி நடைபெறுகிறது.''
 
:14) விடையளிக்கும்போது விடையின் ஒரு பகுதியாக வரும் வினாவை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இது என்ன?''
:''இதுவா, இது ஒரு புதுமாதிரிப் பேனா.''
 
:15) உணர்ச்சியைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐயோ, வலி தாங்க முடியவில்லையே!''
:16) வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ''ஆமாம்,'' ''இல்லை,'' ''ஓ,'' ''ஓகோ,'' போன்ற சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஆமாம், அவர் நேற்றே வந்துவிட்டார்.''
 
:17) இரு வினாக்களுக்கு இடையில் வரும் ''இல்லை'' என்ற சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''இது படகா, இல்லை, மிதக்கும் வீடா?''
 
:18) விளிக்கும் சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தம்பி, இங்கே வா.''
 
:19) கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''ஐயா,''
:''தாங்கள் வழங்கிய நன்கொடையைப் பெற்றுக்கொண்டோம்.''
 
:''இப்படிக்கு,''
:''ம. கிள்ளிவளவன்.''
 
:20) முகவரியைக் கிடக்கை வரிசையில் தரும்போது பெயர், பதவி, நிறுவனம், வீட்டு எண், தெரு போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''முனைவர் இளங்குமரன், தமிழ்த் துறை, கலைவாணர் கல்லூரி, கன்னியாகுமரி.''
 
:21) தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வரதராசனார், மு.''
 
:22) பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''முனைவர் க. இளங்கோவன், எம்.ஏ., டி.லிட்.''
 
:23) மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும் ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''நவம்பர் 14, 1958.''
 
 
==கால்புள்ளி தேவை இல்லாத இடங்கள்==
 
:1) தேதியைப் பின்வரும் முறைகளில் குறிப்பிடும்போது கால்புள்ளி தேவை இல்லை.
 
:எடுத்துக்காட்டுகள்:
 
:''25 மார்ச்சு 1978''
:''1978 மார்ச்சு 25''
 
:2) முகவரியைப் பின்வரும் முறையில் எழுதும்போது கால்புள்ளி தேவை இல்லை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''உமா அச்சகம்''
:''22 காளையார் கோவில் தெரு''
:''திருநெல்வேலி 627 006''
 
==சான்றுகள்==
 
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), ''தமிழ் நடைக் கையேடு'', சென்னை: அடையாளம், 2004.
 
2) [http://en.wikipedia.org/wiki/Punctuation ஆங்கில விக்கியில்]
 
[[பகுப்பு:தமிழ் நடை]]
[[பகுப்பு:நிறுத்தக்குறிகள்]]
[[பகுப்பு:தமிழ் உரைநடை]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/காற்புள்ளி_(தமிழ்_நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது