முற்றுப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ் நடை" (using HotCat)
redirect
வரிசை 1:
#REDIRECT [[முற்றுப்புள்ளி (தமிழ் நடை)]]
[[Image:Full stop.png|thumb|முற்றுப்புள்ளி]]
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற [[தமிழ் நடை|தமிழ் நடையைக்]] கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ''ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை''யைக் குறிக்கும்.
 
இத்தகைய நெறிமுறையில் [[நிறுத்தக்குறிகள்]] (''punctuation marks'') பெரும் பங்கு வகிக்கின்றன. இவை [[பேச்சு|பேச்சின்]] ஒலிப்பு வேறுபாடுகளை [[உரைநடை]]யில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
 
[[நிறுத்தக்குறிகள்|நிறுத்தக்குறிகளுள்]] புள்ளி என்பது அடிப்படையானது. அது [[கால்புள்ளி]] (comma), [[அரைப்புள்ளி]] (semicolon), [[முக்கால்புள்ளி]] (colon), [[முற்றுப்புள்ளி]] (full stop), [[புள்ளி]] (point), [[முப்புள்ளி]] (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.
 
==முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்கள்==
 
ஒரு சொற்றொடர் அல்லது வாக்கியம் முடிவுற்றது என்பதைக் குறிக்க முற்றுப்புள்ளி பயன்படுகிறது.
 
முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
 
:1) கூற்று வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''தமிழ் இலக்கியம் கடந்த இரு நூற்றாண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்தது.''
 
:2) ஏவல் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''விளக்கம் அறிய இருபதாம் பக்கம் புரட்டுக.''
 
:3) மேற்கோள் பெற்றுவரும் வாக்கியத்தின் இறுதியில் மேற்கோள்குறிக்கு முன் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''"செய்வன திருந்தச் செய்க."''
 
:4) கிடக்கை வரிசையில் அமைக்கும் பட்டியலின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
: எடுத்துக்காட்டு:
 
:''திருக்குறளில் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.''
 
:5) கிடக்கை வரிசையில் அமைக்கும் முகவரியின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''வ. எழில், கதவு எண் 24, வடக்குத் தெரு, பூந்துறை, கன்னியாகுமரி மாவட்டம்.''
 
:6) ஒரு வாக்கியம் முழுவதும் பிறை அடைப்பிற்குள் வந்தால் முடிவில் வரும் பிறை அடைப்பிற்கு முன்னால் முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு: ''நாட்டுக்கு நற்பணியாற்ற மாணவர் முன்வர வேண்டும். (பிறருக்கும் அக்கடமை உண்டு.)''
 
:7) ஒரு வாக்கியத்தின் முடிவில் கூடுதல் தகவல் பிறை அடைப்பிற்குள் தரப்பட்டிருந்தால் பிறை அடைப்பிற்கு வெளியே முற்றுப்புள்ளி இடுவது முறை.
 
:எடுத்துக்காட்டு:
 
:''சில ஆங்கிலச் சொற்கள் பெருவழக்காக உள்ளன (பேப்பர் போன்றவை).''
 
==சான்றுகள்==
 
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), ''தமிழ் நடைக் கையேடு'', சென்னை: அடையாளம், 2004.
 
2) [http://en.wikipedia.org/wiki/Punctuation ஆங்கில விக்கியில்]
 
 
[[பகுப்பு:நிறுத்தக்குறிகள்]]
[[பகுப்பு:தமிழ் உரைநடை]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/முற்றுப்புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது