வேட்டையாடு விளையாடு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதை மற்றும் வார்ப்புரு தமிழாக்கம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +ext link
வரிசை 25:
ராகவன் ([[கமலஹாசன்]]), தமிழக காவல்துறை இணை ஆணையர் ஆவார். இவருடைய நண்பரும் சக அதிகாரியுமான ஆரோக்கியராஜின் (பிரகாஷ்ராஜ்) மகள் ராணி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் அவர், அப்பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளை இழந்த சோகத்தை கரைக்க [[நியூயார்க்]] செல்லும் ஆரோக்கியராஜும் அவரது மனைவியும் தொடர்ந்து திட்டமிட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க அமெரிக்கா விரையும் ராகவன், அமெரிக்காவில் நிகழ்ந்த சில கொலைகளுக்கும் ராணியின் கொலைக்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டறிகிறார். இதற்கிடையே கணவரைப் பிரிந்து இருக்கும் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான ஆராதனாவைச் ([[ஜோதிகா]]) சந்தித்துப் பழகுகிறார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்க வந்திருக்கும் இளமாறன், அமுதன் ஆகியோரே கொலைகாரர்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் வீடு வரை செல்லும் ராகவனை காயப்படுத்திவிட்டு, கொலைகாரர்கள் இந்தியாவுக்கு தப்புகின்றனர். கொலைகாரர்களை பிடிக்க இந்தியா திரும்பும் ராகவனுடன் ஆராதனாவும் திரும்புகிறார். தன் மனைவியை தன் பணியின் காரணமாக எழுந்த பகைக்கு பலி கொடுத்த துயரில் இருக்கும் ராகவன், ஆராதனாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். சிறிய தயக்கத்திற்குப் பின் ஆராதனாவும் இதை ஏற்றுக் கொள்கிறார். கொலைகாரர்களை சிக்க வைக்க ராகவன் எடுக்கும் கெடுபிடிகளால் கடுப்படையும் அவர்கள், ராகவனை தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் வகையில் ஆராதனாவை கடத்திச் செல்கின்றனர். இறுதியில் இளமாறன், அமுதன் ஆகியோரை கொன்று ஆராதனாவை ராகவன் மீட்கிறார்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamiloviam.com/unicode/08240612.asp தமிழோவியம் டாட் காம்-இல் பட விமர்சனம்] {{த}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேட்டையாடு_விளையாடு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது