"செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "தமிழக நாடக நடிகர்கள்" (using HotCat)
சி (Quick-adding category "தமிழக நாடக நடிகர்கள்" (using HotCat))
 
கிட்டப்பா [[செங்கோட்டை]]யில் பிறந்தவர். அப்பொழுது செங்கோட்டை [[திருவாங்கூர்]] சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். இரு சகோதரர்களின் பெயர்கள் செல்லப்பா மற்றும் சுப்பையா. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் [[சங்கரதாஸ் சுவாமிகள்]] ஆதரவால் சங்கீதத்திலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறியவயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 5 வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8வது வயதில் [[சிலோன்|சிலோனில்]] நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டி தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. [[திருவாரூர்|திருவாரூரில்]] நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்.
 
[[பகுப்பு:தமிழக நாடக நடிகர்கள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/620749" இருந்து மீள்விக்கப்பட்டது