காயத்திரி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
பெற்றோர் வழியிலும் திருமண உறவின் மூலமாகவும், ராஜபுதனம், பரோடா, ஜோத்பூர், திரிபுரா, தென்னிந்தியாவின் பித்தாபுரம், இஸ்ராடா, பாரியா, லூனாவாடா முதலிய அரசகுடும்பங்களுடன் இவருக்கு நேரடியாகவோ கிளைவழிகளிலோ குடும்ப உறவு இருந்தது.
==மரணம்==
[[File:Maharani_Gayatri-Devi.jpg|130px|right|thumb|காயத்திரி தேவி முதுமையில்]]
இரைப்பை சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் கிங் எட்வர்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அங்கிருந்த தனிமை பிடிக்காமல் ஜெய்ப்பூர் திரும்பிய இவர் ஜூலை 17ஆம் நாள் சந்தோக்பாய் துர்லாபாய் நினைவு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். வேறுபல உபாதைகளும் தாக்க, சிகிச்சைபலன் இன்றி ஜூலை 29-ஆம் நாள் உயிர் நீத்தார்.
இவர் உலகின் பத்து தலைசிறந்த அழகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தபோது இவருடன் அந்தப்பட்டியலில் இருந்த நடிகை லீலா நாயுடுவின் மரணமும் அதற்கு முந்தையநாள் தான் நிகழ்ந்திருந்தது.
ஜெய்ப்பூரில் ஜால்மகால் என்கிற பகுதிக்கு அருகில் அரச குடும்பத்துப் பெண்கள் புதைக்கப்படும் இடத்தில் முந்தைய இரண்டு மகாராணிகளின் கல்லறைகளுக்கு அடுத்து இவருடைய கல்லறையும் அமைக்கப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜஸ்தான் மாநில கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காயத்திரி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது