வேட்டையாடு விளையாடு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விமர்சனங்கள்: விமர்சனங்கள் -> திறனாய்வு
வரிசை 28:
[[படிமம்:VV 001.jpg|right|thumb|ராகவனும் ஆராதனாவும்]]
 
கதை நாயகன் கமலஹாசனையும் திரைப்படத்தையும் ஒயிலாக படம் பிடித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களுக்கு புதிய வரவான நாயகி கமலினி முகர்ஜியின் நடிப்புத் திறனும் மெச்சப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக சிலரும் முந்தைய திரைப்படங்களின் இசையமைப்பு அளவுக்கு இல்லையென்று சிலரும் கருதுகின்றனர். கதை நகர்த்தும் விதம், கதை மாந்தர் படைப்பு, பெயர்கள் ஆகியவை இயக்குனரின் முந்தைய திரைப்படமான ''[[காக்க காக்க]]''-வை ஒத்திருப்பதாக குறைகாணப்படுகிறது. கொலை வழக்கை துப்பறியும் கதைக்கு இன்னும் ஆர்வமூட்டும் திரைக்கதையமைப்பும் மர்ம முடிச்சும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. அமெரிக்க மற்றும் தமிழ்நாட்டு காவல்துறையினரை திறன் குறைந்தவர்களாக காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ந்துள்ளதுஎழுந்துள்ளது. நாயகன் - வில்லன், அவர்களுக்கு இடையில் தனிப்பட்ட பகை, நாயகன் - நாயகி, அவர்களுக்கு இடையில் என்ற வழக்கமான கதையும் தேவையற்ற இடங்களில் வணிகக் கட்டாயங்களுக்காக பாடல்கள் புகுத்தப்பட்டிருப்பதும் சலிப்பூட்டுவனவாக உள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டையாடு_விளையாடு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது