அணுக்கரு தொடர்வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+de:
சிNo edit summary
வரிசை 8:
[[1936]] இல் [[பெரிலியம்]] மற்றும் [[இண்டியம்]] ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு [[அணுக்கரு]] தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. [[1939]] இல் சிலார்டும் [[என்ரிக்கோ பெர்மி]]யும் (Enrico Fermi) [[யுரேனியம்]] அணுவினைகளில் [[நொதுமி]]கள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர்.
 
முதன் முதலாக [[என்ரிக்கோ பெர்மி]] [[டிசம்பர் 2]] [[1942]]இல் [[சிக்காகோ பல்கலைகழகம்பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைகழகத்தில்]] செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் [[ஆர்தர் காம்ப்டன்]] அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது [[மான்ஹாட்டன் திட்டம்]] என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
[[1956]] இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [[பால் குரோடா]] (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே [[1972]] இல் நடு [[ஆப்பிரிக்கா]]வில் [[காபோன்]] என்னும் நாட்டில் [[ஓக்லோ]] என்னும் இடத்தில் இயற்கை [[அணு உலை]]கள் கண்டுபிடிக்கப்பட்டன <ref>[http://www.ocrwm.doe.gov/factsheets/doeymp0010.shtml Oklo: Natural Nuclear Reactors - Fact Sheet<!-- Bot generated title -->]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_தொடர்வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது