காயல்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,672 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். காயல்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காயல்பட்டினம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வீடு கட்டமைப்பு==
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், இனத்திலும், சமுதாயத்திலும் அவர்களுக்கென்று தனித் தனி கலாச்சாரம், அமைப்புகள் இருக்கின்றன. அதே போல் அவர்களின் கட்டிடங்களும் அவர்கள் வாழும் வீடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகின்றன. காயல்பட்டணத்திற்கென்று தனியாக வீட்டின் அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையான வீடுகள் இதே மாதிரியே கட்டப்படுகின்றன.
சாதாரணமாக வீடுகள் 20 அடி அகலம் 40 அடி நீளமும் உயரம் குறைந்தபட்சம் 10 அடி கொண்டதாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் ஜான்ஸ் என்னும் வரவேற்பறை, ஊட்டாங்கரை என்னும் படுக்கை அறை, திண்ணை என்னும் ஹால் அதன்பின் முற்றம் அதன் ஒரு பகுதியில் கழிவறை, குளியலறை மற்றும் மறுபக்கத்தில் அடுப்பாங்கரை என்னும் சமையலறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.ஆண்களுக்கு மாடிக்கு செல்ல ஏணிபடிகள் ஜான்ஸிலிருந்தும் பெண்களுக்கு திண்ணையிலிருந்து மாடிக்கு செல்ல ஏணிப் படிகள் தனியாக அமைக்கப்படுகின்றன. இரண்டு வீடுகளுக்கு அடுத்தாற்போல் முடுக்கு எனப்படும் ஓடை அமைக்கப்படுகிறது. அது குறைந்த பட்சம் 3 அடி கொண்டதாக இருக்கும். அதன்பிறகு அடுத்த வீடு இருக்கும். ரோட்டிலிருந்து உள்பக்கம் உள்ள வீட்டினர் வெளியே செல்வதற்கு பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முடுக்கில் அந்த முடுக்குக்கு பாத்தியப்பட்ட ஆண்களும், எல்லாப் பெண்களும் பாதையாக பயன்படுத்துவார்கள்.
வீட்டின் அமைப்பு கிழமேலாக இருந்தால் தென்பாகத்து முடுக்கிற்கு பாத்தியம் பெறுவார்கள்.
வடகிழக்காக இருப்பின் கிழக்குப் பக்கம் முடுக்குக்கு பாத்தியம் கொண்டாடுவார்கள். இந்த முடுக்கில் அவர்கள் கழிவறைக்கு காண் தொட்டி என்னும் கழிவறைத் தொட்டி அமைக்கவும் செய்வார்கள். மின்சார வயர்கள். குடிநீர் பைப்புகள் மற்றும் வீட்டிற்குது; தேவையான அனைத்தும் இந்த முடுக்கின் மூலமே எடுத்து செல்வார்கள்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காயல்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது