நீதிமொழிகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சி சேர்க்கை
வரிசை 24:
நூல் முழுவதிலும் ஞானமுள்ளோருக்கும் அறிவிலிகளுக்கும் ("மூடர்") இடையே உள்ள வேறுபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. ஞானமுள்ளோர் ''நேர்மையானவர்கள்'' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 
இந்நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள் தீமையினின்றும் குறிப்பாகக் காமத்தினின்றும் விலகும்படி எச்சரிக்கின்றன. அவை பிறரைக் கொன்று பொருளைக் கவரும் திருடர் கூட்டத்தில் சேராமலும் விலைமகளிரை நாடி செல்வத்தையும் பிறரின் நன்மதிப்பையும் இழக்காமலும், தீமையைவிட்டு விலகித் தீயோரின் உறவை விட்டு நன்னெறியில் செல்லுமாறுசெல்லுமாறும் கற்பிக்கின்றன. பெற்றோரின் அறிவுரைக்குச் செவிமடுத்து வாழ்தல், சோம்பலை விலக்குதல், எறும்பு போல ஊக்கத்தோடு உழைத்து உண்ணுதல் போன்ற அறிவுரைகள் இப்பகுதியில் உள்ளன. ஞானம் இங்கே ஒரு பெண்ணாக உருவகிக்கப்படுகிறது.
 
பத்தாம் அதிகாரத்திலிருந்து 29ஆம் அதிகாரம் முடிய உள்ள பகுதி "சாலமோனின் நீதிமொழிகள்" என்னும் தலைப்பின் கீழ் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நீதிமொழிகள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது