ஐ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், '''ஐ''' என்பது '''இ''' க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
==சொல்லில் ஏகாரம்ஐகாரம் வரும் இடங்கள்==
தனி '''ஐ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஏ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டை'', ''ரை'', ''லை'' போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டைனோசோர்'', ''ரைன்'', ''லைலா'' என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
ஐகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஐகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
 
=="ஐ" யும் மெய்யெழுத்துக்களும்==
'''ஐ''' யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஐகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. <ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், ஐகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஐகாரத்தைக் குறிக்கும் ''சங்கிலிக் கொம்பு'' குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
 
 
18 மெய்யெழுத்துக்களோடும் ஐகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!colspan='2'|மெய்யெழுத்துக்கள்!!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
|-
|க்||இக்கன்னா||க் + ஐ||கை||கையன்னா
|-
|ங்||இங்ஙன்னா||ங் + ஐ||ஙை||ஙையன்னா
|-
|ச்||இச்சன்னா||ச் + ஐ||சை||சையன்னா
|-
|ஞ்||இஞ்ஞன்னா||ஞ் + ஐ||ஞை||ஞையன்னா
|-
|ட்||இட்டன்னா||ட் + ஐ||டை||டையன்னா
|-
|ண்||இண்ணன்னா||ண் + ஐ||ணை||ணையன்னா
|-
|த்||இத்தன்னா||த் + ஐ||தை||தையன்னா
|-
|ந்||இந்தன்னா||ந் + ஐ||நை||நையன்னா
|-
|ப்||இப்பன்னா||ப் + ஐ||பை||பையன்னா
|-
|ம்||இம்மன்னா||ம் + ஐ||மை||மையன்னா
|-
|ய்||இய்யன்னா||ய் + ஐ||யை||யையன்னா
|-
|ர்||இர்ரன்னா||ர் + ஐ||ரை||ரையன்னா
|-
|ல்||இல்லன்னா||ல் + ஐ||லை||லையன்னா
|-
|வ்||இவ்வன்னா||வ் + ஐ||வை||வையன்னா
|-
|ழ்||இழ்ழன்னா||ழ் + ஐ||ழை||ழையன்னா
|-
|ள்||இள்ளன்னா||ள் + ஐ||ளை||ளையன்னா
|-
|ற்||இற்றன்னா||ற் + ஐ||றை||றையன்னா
|-
|ன்||இன்னன்னா||ன் + ஐ||னை||னையன்னா
|}
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐ" இலிருந்து மீள்விக்கப்பட்டது