அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bs:Upala
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Abszess.jpg|thumb|250px|right|அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த [[கட்டி]]. நடுவில் [[சீழ்]] பிடித்துள்ளப் பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக [[இறந்த திசு]]க்கள்]]
 
'''அழற்சி''' (Inflammation ,[[இலத்தீன்]], ''inflammare'') [[தீநுண்மம்]], அழிபட்ட [[உயிரணு]]க்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு [[இரத்த நாளம்]] ஆற்றுகின்ற ஓர்ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.<ref name="pmid17223962">{{cite journal |author=Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE |title=Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation |journal=Clin. Exp. Immunol. |volume=147 |issue=2 |pages=227–35 |year=2007 |month=February |pmid=17223962 |pmc=1810472 |doi=10.1111/j.1365-2249.2006.03261.x |url=}}</ref> இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் நோய்த்தொற்றும்(infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம்.நோய்தொற்று ஓர்ஒரு புறவழிப் பெருக்க தீநுண்மத்தால் ஏற்படுவது; அழற்சி அந்த தீநுண்மத்திற்கு எதிராக உயிரணு மேற்கொள்ளும் எதிர்வினை.
 
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் நோய்தொற்றுகளும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல் சுரம், தமனித் தடிப்பு, முடக்கு வாதம் போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன.ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிபடுத்த விழைகிறது.
 
அழற்சியை ''கடுமையான'' அல்லது, ''நாட்பட்ட'' என இருவகையாகப் பிரிக்கலாம். ''கடுமையான அழற்சி'' தீ தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு [[குருதித்திரவ விழையம்]](blood plasma) மற்றும் [[இரத்த வெள்ளையணு]]க்களை கூடுதலாக அனுப்புகிறது.படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் உள்ளிட இரத்த நாளங்கள், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
 
''நீடித்த அழற்சி'' அல்லது ''நாட்பட்ட அழற்சி''யில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது