பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
வரிசை 43:
 
==பின்புலம்==
1944 ஜூன் மாதம் [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் மூலம் நேசநாட்டுப் படைகள் நான்கு ஆண்டுகளாக ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பாவைத் தாக்கின. அடுத்த சில மாதங்களில் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் பெரும் பகுதிகள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன. நேச நாட்டுத் தளபதிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அவர்களது படைகள் முன்னேறியதால் அவற்றுக்கு தளவாடங்களை அனுப்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] பல துறைமுகங்கள் ஜெர்மானியர் வசமிருந்ததால் சரக்குப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. [[ஆண்ட்வெர்ப்]] மற்றும் [[மார்சே]] துறைமுகங்கள் [[ஷெல்ட் சண்டை|கைப்பற்றப்பட்ட]] [[டிராகூன் நடவடிக்கை|கூட]] தளவாடப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. இதனால் 1944ன் இறுதியில் மேற்குப் போர்முனையில் [[கீழ்நிலை உத்தி]]யளவில் இழுபறி நிலை உருவானது. நெச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் உள்பிரதேசங்களைத் [[ஆஹன் சண்டை|தாக்கத் தொடங்கியிருந்தாலும்]] அடுத்த பெரும் தாக்குதல் எங்கு நிகழ்ம் என்பது முடிவாகாமல் இருந்தது.
 
ஜெர்மானியத் தரப்பில் நிலை மோசமாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்குப் போர்முனைகளில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், ஜெர்மானிய போர் எந்திரம் வெகுவாகப் பழுதுபட்டிருந்தது. இன்னும் வெகு காலம் இருமுனைப் போரில் தாக்குப்பிடிக்க முடியாது என்பது ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் தெளிவானது. இதனால் ஏதேனும் ஒரு முனையில் போரை உடனே முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமானது. ஹிட்லர் தனது விரோதிகளில் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினை]] முக்கியமானவராகக் கருதியதால், [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] போரைத் தொடர்வதென்றும், மேற்கத்திய நேச நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவேண்டுமென்றும் முடிவானது. ஆனால் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில் மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு ஒரு பெரும் தோல்வியை அளித்த்தால் பேச்சு வார்த்தைக்கு இணங்குவார்கள் என்று ஹிட்லர் கணக்கிட்டார்.
 
==சண்டையின் போக்கு==
==தாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது