பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பத்ர் போர், பதுருப் போர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி தானியங்கிமாற்றல்: ml:ബദ്ർ യുദ്ധം; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict=பத்ர் போர்<br />Battle of Badr
|partof=[[முசுலிம்]]-[[குறைசி]] போர்கள்
|caption=
வரிசை 20:
இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் பல சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் சமர் ஆகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரேபியாவின் ஒரு பலம் வாய்ந்ததும், செல்வச் செழிப்பு மிக்கதாகவும் திகந்த நகரமாக மெக்கா விளங்கியது. முசுலிம்களின் படை பலத்தைவிட மூன்று மடங்கு படையினரை மெக்கா குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிகள் பத்ர் போரில் பெற்ற வெற்றி அரேபியாவில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மெதினா]]வில் பிரிந்திருந்த பிரிவினரிடயே முகம்மதின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
 
== போருக்கான காரணம் ==
[[படிமம்:Slide15.JPG‎‎|left|thumb|300px|]]
பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு பல காரணங்கள் அப்போது தொழிற்பட்டிருப்பதாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து வந்தமை எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். இதனால் தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமல் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.
வரிசை 30:
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லா பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் கழ்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் கழ்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.
 
== போர் நிகழ்வு ==
[[Imageபடிமம்:Badr campaign.svg|thumb|left|250px|பதுருப் போர் நிகழ்ந்த இடம்]]
மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தக பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றி செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
 
வரிசை 42:
இப்போராட்டத்தில் முஃகாச்யிர் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை அதிக பலம் வாய்ந்தது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.
 
== உசாத்துணை ==
* [http://www.thinakkural.com/publication_west/content.php?contid=4752&catid=9 இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் "பத்ர்”], [[தினக்குரல்]], ஆகத்து 28, 2010
 
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
வரிசை 68:
[[ja:バドルの戦い]]
[[jv:Perang Badar]]
[[ml:ബദ്‌ർബദ്ർ യുദ്ധം]]
[[ms:Perang Badar]]
[[nl:Slag bij Badr]]
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது