சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''சிறுகதை''' என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை [[உரைநடை]] இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக [[குறுநாவல்]] மற்றும் [[நாவல்|நாவலை]] விடச் சுருக்கமானதாகும்.
=அறிமுகம்=
 
[[தமிழ்]] இலக்கியம் தொன்மையான [[இலக்கியம்]] என்றாலும், இச்சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி் மட்டுமே, உலகதரம் அல்லது உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கிய வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக [[ஒப்பியல்]] இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், தமிழின் சிறுகதை வளர்ச்சியைக் கண்டு, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.
 
தமிழில் சிறுகதைவடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும்
 
தமிழ்ச்சிறுகதைகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி எஸ் சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி எஸ் ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி,மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.
 
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்] சி சு செல்லப்பா [சரர்சாவின் பொம்மை] லா.ச.ராமாமிருந்தம் [பாற்கடல்] ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ] சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்] கு அழகிரிசாமி[ராஜா வந்திருக்கிறார்] தி ஜானகிராமன் [பாயசம்] கி.ராஜநாராயணன் [பேதை] போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
 
=தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்=
"https://ta.wikipedia.org/wiki/சிறுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது