பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
==சண்டையின் போக்கு==
[[File:Bundesarchiv Bild 183-J28589, Kriegsgefangene amerikanische Soldaten.jpg|right|thumb|250px|அமெரிக்க [[போர்க்கைதி]]கள்]]
பல்ஜ் தாக்குதலுக்கு முன் ஏற்பாடாக ஜெர்மானிய அதிரடிப்படையினர் இரு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஓட்டோ ஸ்கொர்செனியின் தலைமையில் ஒரு குழுவினர் நெசநாட்டுப் படைவீரர்களைப் போல் வேடமிட்டு அமெரிக்கப் படைநிலைகளுக்குப் பின் பெரும் குழப்பத்தை விழைவித்தனர். அமெரிக்க மற்றும் பிரிட்டானிய வீரர்களின் சீருடைகளை அணிந்து கொண்டு அமெரிக்க படைநிலைகளை ஊடுருவிப் சாலை வழிகாட்டிகளை மாற்றிவிடுதல், போக்குவரத்து நெரிசல்களை உண்டாக்குதல், முக்கியமான பாலங்களைக் கைப்பற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். இன்னொரு நடவடிக்கையில் மால்மெடியிலுள்ள முக்கிய பாலமொன்றை ஜெர்மானிய [[வான்குடை]] வீரர்கள் முயன்றனர்.
 
[[File:German soldier Ardennes 1944.jpeg|right|thumb|200px|ஜெர்மானிய எந்திரத் துப்பாக்கி வீரர்]]
டிசம்பர் 16, காலை 5.30 மணியளவில் பெரும் பீரங்கித் தாக்குதலுடன் பல்ஜ் சண்டை ஆரம்பமாகியது. களத்தின் வடபகுதியில் ஜெனரல் செப்ப் டைட்ரிக் தலைமையிலான 6வது [[எஸ். எஸ்]] பான்சர் (கவச) ஆர்மி [[லீஜ்]] நகரை நோக்கி முன்னேறத்தொடங்கியது. மத்தியில் வான் மாண்ட்டூஃபலின் தலைமையிலான 5வது பான்சர் ஆர்மி [[பாஸ்டோன்]] நகரை நோக்கியும் தெற்கில் எரிக் பிராண்டன்பெர்கரின் 7வது ஆர்மி [[லக்சம்பர்க்|லம்சம்பர்கை]] நோக்கியும் முன்னேறத் தொடங்கின. ஆரம்பத்தில் கடுமையான வானிலையும், அமெரிக்கபப்டைகளில் நிலவிய குழப்பமும் ஜெர்மானியருக்கு சாதகமாக அமைந்தன. இரு நாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அமெரிக்க எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட நேச்நாட்டு தளபதிகள் பல்ஜ் போர்முனைக்கு புதிய இருப்புப் படைபிரிவுகளை அனுப்பத்தொடங்கினர். வடக்கில் டைட்ரிக்கின் படைகள் விரைவில் முடக்கப்பட்டன. மத்தியப் பகுதியில் மாண்டூஃபலின் படைகள் டிசம்பர் 21ல் சென். வித் நகரைக் கைப்பற்றின. அதே நாள் பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டன. பெல்ஜியத்தின் மேற்குப்பகுதிக்குச் செல்லும் சாலைகளின் சங்கமத்தில் பாஸ்டோன் இருந்ததால், பல்ஜ் தாக்குதலின் வெற்றிக்கு அதனைக் கைப்பற்றுவது மிக அவசியமாக இருந்தது. ஆனால் பாஸ்டோன் நகரில் இருந்த அமெரிக்க 101வது வான்குடை டிவிசனின் படைவீரர்கள் நகரம் ஜெர்மானியர் வசமாகாமல் காபாற்றிவிட்டனர். வடக்கிலும் மத்தியிலும் போலல்லாமல் தெற்கு களத்தில் ஜெர்மானியப்படைகள் சிறு தூரம் மட்டுமே முன்னேற முடிந்தது.
[[File:DeadBelgiumcivilians1944.jpg|thumb|left|250px|[[எஸ். எஸ்]] படையினரால் கொல்லப்பட்ட பெல்ஜியப் பொதுமக்கள்]]
 
டிசம்பர் 23ம் தேதி நேசநாட்டு எதிர்த்தாக்குதல் ஆரம்பமாகியது. வானிலை சீராகத்தொடங்கியதால், தரையில் முடங்கியிருந்த நேசநாட்டு வான்படைகள் ஜெர்மானியப் படைகளைத் தாக்கத் தொடங்கின. டிசம்பர் 24ம் தேதி ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் அறவே தடைபட்டது. திட்டமிட்டபடி மியூசே ஆற்றை அவைகளால் அடையமுடியவில்லை. ஜனவரி 1ம் தேதி இழந்த வேகத்தை மீண்டும் பெற ஜெர்மானியப் படைகள் மீண்டுமொரு ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃவே பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து நாடுகளிலுள்ள நேசநாட்டு வான்படைத் தளங்களைத் தாக்கியது. தரைப்படைகளும், புதிய தாக்குதலின் மூலம் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் இத்தாக்குதல்கள் நேசநாட்டுப் படைகளால் முறியடிக்கப்பட்டன. அடுத்த சில வாரங்களில் ஜெர்மானியர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் நேசநாட்டுப்படைகளால் மீட்கப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது