பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
 
==தாக்கம்==
[[File:Bundesarchiv Bild 183-J28619, Ardennenoffensive, gefangene Amerikaner.jpg|right|thumb|225px|அமெரிக்கப் போர்க்கைதி]]
மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. ஜெர்மனியால் இவ்வளவு பெரிய அளவில் ஒரு தாக்குதலை மேற்கொள்ள முடியாது என்று நினைத்திருந்த நேசநாட்டுத் தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்தது. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சியபடைபிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின. இத்தாக்குதலால் ஜெர்மானிய இருப்புப்படைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. லுஃப்ட்வாஃபேவின் இழப்புகளால் பின்வரும் மாதங்களில் நடந்த வான்போர்களில் அதனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. ஜெர்மனியின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் மேற்குப் போர்முனையெங்கும் மேற்கத்திய நேசநாடுகள் ஒரு [[மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு|பெரும் தாக்குதலைத்]] தொடங்கின.
[[File:Mardasson Memorial Bastogne.JPG|left|thumb|250px|பாஸ்டோன் நகரில் அமைந்துள்ள பல்ஜ் சண்டை நினைவுச்சின்னம்]]
 
அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையாக அமைந்தது. இவற்றுள் சுமார் 19,000 பேர் போரில் கொல்லப்பட்டனர். ஜெர்மானியத் தரப்பில் சுமார் 90,000 (அதிகாரப்பூர்வமாக) இழப்புகள் ஏற்பட்டன. 1,500 பிரிட்டானிய வீரர்களும் இதில் கொல்லப்பட்டனர். பல்ஜ் சண்டையில் பிரிட்டானியத் தளபதி ஃபீல்டு மார்ஷல் [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]] நடந்து கொண்ட விதம் பிற நேச நாட்டு தளபதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவர் பலமுறை அமெரிக்க தளபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டிருந்ததால், நேச நாட்டுப் போர்த்தலைமையகத்தில் சிறிது உட்பூசல் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடியும்வரை இந்த நிலை நீடித்தது. பல்ஜ் சண்டையைப் பற்றி பல புத்தகங்களும், திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது