பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முடிந்தது
சிNo edit summary
வரிசை 33:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
 
'''பல்ஜ் சண்டை''' (''Battle of the Bulge'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. இது '''ஆர்டென் தாக்குதல்''' (''Ardennes Offensive'') மற்றும் '''வான் ரன்ட்ஸ்டெட் தாக்குதல்''' (''Von Rundstedt Offensive'') என்றும் அறியப்படுகிறது. டிசம்பர் 16, 1944 - ஜனவரி 25, 1945 காலகட்டத்தில் நடந்த இத்தாக்குதல் மேற்குப் போர்முனையில் [[நாசி ஜெர்மனி]] மேற்கொண்டு இறுதி முக்கிய தாக்குதல் முயற்சியாகும். இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகள் [[ஆண்ட்வெர்ப்]] துறைமுகத்தைக் கைப்பற்றி நேச நாட்டுப்படைகளை இரு பிளவுகளாகப் பிரிக்க முயன்று தோற்றன.
 
1944ன் இறுதியில் [[மேற்கு ஐரோப்பா]]வின் பெரும் பகுதிகளை நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துவிட்டன. அடுத்து ஜெர்மனியின் பிரதேசங்களைத் தாக்கும் முயற்சி தொடங்கியது. [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையிலும்]] [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த [[ஹிட்லர்]] மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்கு போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது