உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:La Boqueria.JPG|thumb|350px|[[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]களில் பெருமளவு உயிர்ச்சத்துகள் உள்ளன.]]
'''உயிர்ச்சத்து''' (''vitamin'') என்பது பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களின்]] இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத [[கரிமம்|கரிம]] நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான [[கனிமம்|கனிமங்கள்]], கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. <ref>Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.</ref> <ref>Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref>.
 
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.
வரிசை 11:
 
உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தொழில் குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை எடுத்துக்கொண்டால் அதற்கு சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெதயில்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.
 
உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு இரசாயனத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது