குடிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==பெயர்==
'''குடிசை''' என்னும் சொல்லாட்சி [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்பட்டவிட்டாலும், ஒத்த [[வேர்ச் சொல்|வேர்ச் சொற்களில்]] இருந்து பிறந்த ''குடில்'' என்னும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில், மக்கள் வாழ்ந்த குடிசைகளை ஒத்த இருப்பிடங்கள் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்பட்டன. இவை பல்வேறு வகையான குடிசைகளைக் குறித்தன எனலாம். குடில், குரம்பை, குறும்பு போன்றவை சங்க காலத்தில் குடிசை வகைகளைக் குறித்த சொற்களாகும். குடங்கர், குடிசல், குடிஞை, குடீரம், கைநிலை, சாளை, சிறகுகுடில், தொக்கடி, படலிடம், பண்ணை, புல்வீடு, மயடம், மாடம், குடிசில், என்னும் சொற்களும் குடிசையோடு ஒத்த பொருள் கொண்ட சொற்களாக, மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் காணக்கிடக்கின்றன. இவற்றுட் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கிழந்துவிட்டன. ஆனால், குடிசை என்னும் சொல் ஒரு பொதுவான சொல்லாகத் தற்காலத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
 
==அமைப்பு==
குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குடிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது