குடிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
==வரலாறு==
தொல்பழங்கால மனிதன் இயற்கையான குகைகளிலிருந்து வெளியேறித் தாங்களாகவே தமது வாழிடங்களை அமைக்க முற்பட்ட தொடக்க காலங்களில் இவ்வாழிடங்கள் விரைவில் அழியக்கூடிய பொருட்களால் ஆனவையாகவே இருந்திருக்கும். அக்கால மனிதர் இன்னும் வேட்டையாடுபவர்களாகவும், உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்பவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் இடத்துக்கிடம் அலைந்து திரிந்தனர். அதனால் முறையான வாழிடங்களை அமைத்து இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு. வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர் மனிதர் ஓரிடத்தில் தொடர்ந்து வாழத் தலைப்பட்டபோது, தங்களுக்கான வாழிடங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இத்தொடக்ககால வாழிடங்கள் குடிசைகளே. முதலில் இவை ஏற்கெனவே அறிமுகமானவையும் விரைவில் அழியக்கூடியனவுமான பொருட்களினால் ஆனவையாக இருந்தன. இதனால் இவற்றின் எச்சங்கள் எதுவும் தொல்லியல் சான்றுகளாகக் கிடைக்கவில்லை.
 
 
அண்மைக்கிழக்குப் பகுதிகளில் நத்தூபியப் பண்பாட்டு மக்கள் உலர்கற்கட்டுமான முறையில் அமைக்கப்பட்டவையும் ஒரு பகுதி நிலத்துக்குக் கீழ் அமைந்தவையுமான குழிவீடுகள் எனப்படும் குடிசைகளைக் கட்டி வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. வட்டவடிவம் கொண்ட இவை கிமு 9000 க்கு முற்பட்டவை. இப்பகுதியில் கிமு 9000 க்கும் கிமு 7000 க்கும் இடைப்பட்ட காலத்தில் குழைத்த மண்ணாலான கற்களைக் கொண்டு குடிசைகள் அமைக்கப்பட்டன. இக்காலத்திலேயே குடிசைகள் செவ்வகத் தள அமைப்பைக் கொண்டவையாகவும் மாற்றம் பெற்றன. இப்பகுதியில் காணப்படும் குடிசைகள் தொடர்பான தொல்லியல் எச்சங்களே தற்போது அறியப்பட்டவற்றுள் மிகப் பழையன. எனினும், இது போன்ற குசை அமைப்புக்களும் படிவளர்ச்சியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கால கட்டங்களில் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளன.
 
 
தமிழ்நாட்டிலும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்விடத் தடயங்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தில் மக்கள் வட்டவடிவமான அல்லது நீள்வட்ட வடிவம் கொண்ட குடிசைகளை அமைத்து வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகளின்படி சங்ககாலத்துக்கு முந்திய தமிழ் நாட்டில், மரம் மற்றும் இலை தளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குடிசைகளும், குழி தோண்டிக் கற்கள் அடுக்கிக் கட்டிய குடிசைகளும் இருந்ததாகத் தெரிகிறது.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/குடிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது