கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 88:
 
 
*கி.பி. சுமார் 180: இரனேயசு என்னும் ஆயர் "வேற்றுக் கொள்கையினருக்கு எதிராக" என்னும் நூலை எழுதுகிறார். அக்கால உரோமைப் பேரரசின் கீழ் அமைந்த, இன்றைய பிரான்சு நாட்டின் லியோன் நகர, ஆயராகப் பணியாற்றிய இவர் மெய்யறிவுக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/On_the_Detection_and_Overthrow_of_the_So-Called_Gnosis லியோன் நகர இரனேயசு]</ref>
 
 
*கி.பி. சுமார் 195: போப்பாண்டவர் முதலாம் விக்டர் இயேசுவின் உயிர்த்தெழுதல் திருவிழா யூதரின் நிசான் மாதத்தின் 14ஆம் நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்று வாதாடியவர்களைச் சபை நீக்கம் செய்கின்றார் <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Victor_I போப்பாண்டவர் முதலாம் விக்டர்]</ref>. திருச்சபை முறைப்படி, நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வரும் ஞாயிறு உயிர்த்தெழுதல் திருவிழா ஆகும். ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த முதல் போப்பாண்டவர் விக்டர் ஆவர். அவர் காலத்தில் திருப்பலி கிரேக்க மொழியிலிருந்து மாறி, இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது.
 
 
*கி.பி. சுமார் 200ஆம் ஆண்டு: தெர்த்தூல்லியன் (கி.பி. 160-220) என்னும் முதல் மாபெரும் இலத்தீன் இறையியல் வல்லுநர் கிறித்தவ இறையியல் கருத்துகளை எடுத்துரைக்க கீழே வருவதுபோன்ற பல இலத்தீன் சொற்களைப் புதிதாக ஆக்குகிறார்: ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கின்றார் என்பதைக் குறிக்க ''Trinitas'' (திரித்துவம், மூவொரு கடவுள்); தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ''ஆள்கள்'' (Personae) ''ஒரே பொருளாய்'' (consubstantialis/-es) இருக்கின்றார்கள். இச்சொற்கள் இறையியல் கோட்பாடுகளைத் துல்லியமாக வரையறுக்க இன்றுவரை பயன்படுகின்றன<ref>[http://en.wikipedia.org/wiki/Tertullian தெர்த்தூல்லியன்]</ref>.