யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
===யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்===
 
இதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 19611561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு, தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.
 
===யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி===
 
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.
 
 
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]