பயனர்:Rexani/கண் (சூறாவளி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
Rexani (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Eye_%28cyclone%29 (revision: 391916552) using http://translate.google.com/toolkit with about 96% human translations.
வரிசை 1:
{{Tropicalcyclone}}
'''கண்''' என்பது பலமான [[புயல்|வெப்ப மண்டல சூறாவளி]]களின் மையத்தில் காணப்படும் பெரும்பாலும் அமைதியான [[வானிலை|வானிலை]]யுள்ள பிரதேசமாகும். ஒரு புயலின் கண் அநேகமாக வட்டமான பகுதியாகும். பொதுவாக 30–65&nbsp;கி.மீ (20–40 மைல்கள்) [[விட்டம்|விட்டம்]] உள்ளது. இது '''கண்சுவரா''' ல் சூழப்பட்டிருக்கும். கண் சுவர் என்பது மிகவும் கடுமையான சூறாவளியுடனான வானிலை நிலவுகின்ற, கடும் இடியுடன் கூடிய புயல்களின் ஒர் வளையப் பகுதியாகும். கண்ணில் சூறாவளியின் மிகக்குறைந்த பாரமானி அழுத்தம் நிலவும். மேலும், இது புயலுக்கு வெளியேயுள்ள வளிமண்டல அழுத்தத்தைவிட 15 வீதமளவுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.<ref name="FAQ eye">{{cite web | author=[[Chris Landsea|Landsea, Chris]] and Sim Aberson. | title=What is the "eye"? | date=August 13, 2004 | publisher=[[Atlantic Oceanographic and Meteorological Laboratory]] | accessdate=2006-06-14 | url = http://www.aoml.noaa.gov/hrd/tcfaq/A11.html}}</ref>
 
பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளில்,மெதுவான காற்றுகளால் மற்றும் கடுமையான, சமச்சீரான கண்சுவரால் அனைத்துப் பக்கங்களும் சூழப்பட்ட தெளிவான வானங்களால் கண் குறித்துக்காட்டப்படும். பலம்குறைந்த வெப்ப மண்டல சூறாவளிகளில், கண் குறைந்தளவே நன்கு வரையறுக்கப்படும். மேலும், ''மத்திய அடர்ந்த மேகம் சூழ்ந்த வானத்'' தால் மூடப்பட்டிருக்கலாம். இது உயர்ந்த, தடிமனான [[முகில்|மேகங்]]கள் கொண்ட பகுதியாகும். செயற்கைக்கோள் புகைப்படத்தில் இது தெளிவாகத் தெரியும். பலம்குறைந்த அல்லது கலைந்துவிட்ட புயல்களும் கூட ஒரு கண்சுவரைக் காட்டலாம். இது முற்றுமுழுதாக கண்ணைச் சுற்றி இருக்காது அல்லது கடும் மழையை உருவகப்படுத்தும் கண்ணைக் கொண்டிருக்காது. எனினும், அனைத்து புயல்களிலும், கண் என்பது புயலின் பாரமானி அழுத்தம் குறைந்தபட்சமாக இருக்கும் இடமாகும்: அதாவது கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கின்ற பகுதி.<ref name="FAQ eye"></ref><ref name="FAQ CDO">{{cite web | author=Landsea, Chris. | title=What is a "CDO"? | date=October 19, 2005 | publisher=[[Atlantic Oceanographic and Meteorological Laboratory]] | accessdate=2006-06-14 | url = http://www.aoml.noaa.gov/hrd/tcfaq/tcfaqHED.html}}</ref>
 
==கட்டமைப்பு==
[[File:Eye structure.jpg|left|thumb|250px|முதிர்ந்த வெப்ப மண்டல சூறாவளியின் குறுக்கு வெட்டுமுக வரைபடம். அம்புக்குறிகள் கண்ணுக்கு உள்ளேயும் சுற்றியும் ஓடும் காற்றைச் சுட்டிக்காட்டுகின்றன]]
ஒரு பொதுவான வெப்ப மண்டல சூறாவளி தோராயமாக 30-65 கி.மீ (20-40 மைல்) குறுக்களவான கண்ணை உடையது. வழக்கமாக புயலின் வடிவியல் சார்ந்த மையத்தில் அமைந்திருக்கும். கண் தெளிவாக இருக்கலாம் அல்லது பல புள்ளிகள் கொண்ட தாழ்ந்த மேகங்களை (ஒரு ''தெளிவான கண்'' ) கொண்டிருக்கலாம். இதை தாழ்ந்த- மற்றும் நடுத்தர-மட்ட மேகங்கள் (ஒரு ''நிரப்பிய கண்'' ) நிரப்பலாம் அல்லது மத்திய அடர்ந்த மேகம் சூழ்ந்த வானம் இதை மறைக்கலாம். எனினும் அங்கு, குறிப்பாக மையத்துக்கு அருகில், மிகக் குறைந்த காற்று மற்றும் மழை, இருக்கும். புயலின் மிகப் பலத்த காற்றுக்களைக் கொண்டுள்ள கண்சுவரிலுள்ள நிலைமைகளில் அளவுகடந்த பேதமுள்ளது.<ref name="JetStream structure">{{cite web | url = http://www.srh.noaa.gov/jetstream/tropics/tc_structure.htm | author = [[National Weather Service]] | publisher = [[National Oceanic & Atmospheric Administration]] | title = Tropical Cyclone Structure | accessdate = 2006-12-14 | work = JetStream—An Online School for Weather | date = October 19, 2005}}</ref> வெப்ப மண்டல சூறாவளியின் இயக்கவியல் காரணமாக, கண் மற்றும் இதற்கு நேர் மேலேயுள்ள காற்று ஆகியவை அவற்றின் சுற்றுச்சூழலைவிட வெப்பமானவை.<ref name="AOML FAQ A7">{{cite web | author = [[Atlantic Oceanographic and Meteorological Laboratory]], Hurricane Research Division | title = Frequently Asked Questions: What is an extra-tropical cyclone? | publisher = [[National Oceanic and Atmospheric Administration]] | accessdate = 2007-03-23 | url = http://www.aoml.noaa.gov/hrd/tcfaq/A7.html}}</ref>
 
வழக்கமாக கண்கள் முழுவதும் சமச்சீராக இருக்கின்ற அதேசமயம், சிலவேளைகளில் குறிப்பாக பலவீனமாகின்ற புயல்களில், இது நீள்வட்டமாக, ஒழுங்கற்றதாகவும் இருக்கலாம். பெரிய ''கிழிந்த கண்'' ஒரு வட்டவடிவமற்ற கண் ஆகும். இது பிளவுபட்டுக் காணப்படும். மேலும், ஒரு பலவீனமான அல்லது பலவீனமாகின்ற வெப்ப மண்டல சூறாவளியின் குறிகாட்டியாகவும் இருக்கிறது. ''திறந்த கண்'' வட்டமாக இருக்கக்கூடிய கண் ஆகும். ஆனால் கண்சுவர் முற்றுமுழுதாக கண்ணைச் சூழ்ந்திருக்காது. அதோடு, இது பலவீனமாகின்ற, ஈரப்பதன் அகற்றப்பட்ட சூறாவளியைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த இரு அவதானங்களும் ட்வோரக் பகுப்பாய்வு (Dvorak analysis) முறையில் வெப்ப மண்டல சூறாவளிகளின் தீவிரத்தை மதிப்பிடப் பயன்படுகின்றன.<ref name="ODT">{{cite web|title=Objective Dvorak Technique|url=http://cimss.ssec.wisc.edu/tropic/research/products/dvorak/odt.html|publisher=University of Wisconsin|accessdate=2006-05-29}}</ref> கண்சுவர்கள் பொதுவாக வட்டமானவை. எனினும், முக்கோணங்கள் முதல் [[அறுகோணம்|அறுகோணங்]]கள் வரை வேறுபடுகின்ற பல்கோண வடிவங்களிலும் அவ்வப்போது ஏற்படலாம்.<ref name="polygonal eyewalls">{{cite journal |last=Schubert |first=Wayne H. |authorlink=Wayne H. Schubert |coauthors=Michael T. Montgomery, Richard K. Taft, Thomas A. Guinn, Scott R. Fulton, James P. Kossin, and James P. Edwards |title=Polygonal Eyewalls, Asymmetric Eye Contraction, and Potential Vorticity Mixing in Hurricanes |journal=[[Journal of the Atmospheric Sciences]] |volume=59 |issue=9 |pages=1197–1223 |publisher=[[American Meteorological Society]] |month=May | url=http://ams.allenpress.com/perlserv/?request=get-abstract&issn=1520-0469&volume=056&issue=09&page=1197 |doi=10.1175/1520-0469(1999)056<1197:PEAECA>2.0.CO;2 |year=1999 }}</ref>
 
குறிப்பிடத்தக்க முதிர்ந்த புயல்களில் சில பன்னிரண்டு மைல்கள் குறுக்களவான கண்கள் உள்ள வேளையில், துரிதமாக கடுமையாகின்ற புயல்கள் மிகவும் சிறிய, தெளிவான மற்றும் வட்டமான கண்ணை உருவாக்கலாம். இது சில வேளைகளில் ''குண்டூசித் துளைக் கண்'' எனப்படுகிறது. குண்டூசித் துளைக் கண்களுடனான புயல்கள் தீவிரத்தில் பெரியளவான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகக் கூடியவை. மேலும், வானிலை ஆய்வாளர்களுக்கு கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் கொடுக்கின்றன.<ref>{{cite web | author=National Hurricane Center | title=Hurricane Wilma Discussion No. 14, 11:00 p.m. EDT | date=2005-10-08 | publisher=[[National Oceanic and Atmospheric Administration]] | accessdate=2006-06-12 | url = http://www.nhc.noaa.gov/archive/2005/dis/al242005.discus.014.shtml?}}</ref>
 
சிறிய கண்கள்—10&nbsp;[[கடல் மைல்|நா.மை]] (19&nbsp;கி.மீ, 12&nbsp;மை) குறுக்களவைவிடக் குறைந்தவை—உண்மையான கண்சுவருக்கு வெளியே ஒரு புதிய கண்சுவர் உருவாகத் தொடங்குகின்ற கண்சுவர் இடமாற்ற வட்டங்களைப் பெரும்பாலும் தூண்டுகின்றன. உட்புற கண்ணிற்கு வெளியே பத்து முதல் ஒருசில நூறு மைல்கள் வரையிலும் (15 முதல் 100 கிலோமீட்டர்கள்) உள்ள எந்த இடத்திலாவது இது நடக்கலாம். புயலானது பின்னர் இரண்டு ''ஒரே மையமுள்ள கண்சுவர்கள்'' அல்லது ஒரு "ஒரு கண்ணுக்குள் இன்னொரு கண்"ணை உருவாக்கும். அநேகமான சந்தர்ப்பங்களில், வெளிப்புற கண்சுவர் அதன் உருவாக்கத்தின் பின்னர் விரைவில் சுருங்கத் தொடங்கும். இது உட்புறக் கண்ணை அடக்கிவைத்து, மிகவும் பெரிய ஆனால் கூடுதல் நிலையான கண்ணை விட்டுச்செல்லும். இடமாற்ற வட்டமானது நிகழுகின்றபோது அது புயல்களை பலவீனப்படுத்துகின்ற அதேவேளையில், பழைய கண்சுவர் மறைந்த பின்னர், புதிய கண்சுவரானது மிகவும் விரைவாக சுருங்கும். இதனால் புயல் மீண்டும் பலமடைகிறது. இது கண்சுவர் இடமாற்றத்தின் இன்னொரு வட்டத்தைத் தூண்டலாம்.<ref name="AOML FAQ D8"></ref>
 
கண்கள் குறுக்களவில் 320 கி.மீ (200 மைல்கள்) (கார்மன் சூறாவளி) முதல் வெறும் 3&nbsp;கி.மீ (2&nbsp;மை) (வில்மா புயல்) வரை வேறுபடலாம்.<ref name="Very Large Eye">{{cite web | author=Lander, Mark A. | title=A Tropical Cyclone with a Very Large Eye | year= 1998 | publisher=Monthly Weather Review: Vol. 127, pp. 137–142 | accessdate=2006-06-14 | url = http://ams.allenpress.com/amsonline/?request=get-document&doi=10.1175%2F1520-0493(1999)127%3C0137:ATCWAV%3E2.0.CO%3B2}}</ref> பெரிய கண்களுடைய புயல்கள் மிகவும் கடுமையாக மாறுவது அரிதாக இருக்கின்ற போதிலும், இது, குறிப்பாக வளைய வடிவான புயல்களில் நிகழத்தான் செய்கிறது. இசபெல் புயல் என்பது பதிவாகியுள்ள வரலாற்றில், பதினோராவது மிகவும் சக்திவாய்ந்த அட்லாந்திக் புயல் ஆகும். இது பெரிய, 65–80&nbsp;கி.மீ (40–50&nbsp;மைல்)-அகலமான கண்ணை பல நாட்களுக்குக் கொண்டிருந்தது.<ref name="Isabel TCR">{{cite web|author=Beven, Jack and Hugh Cobb|year=2003|title=Hurricane Isabel Tropical Cyclone Report|publisher=[[National Hurricane Center]]|accessdate=2006-03-26|url=http://www.nhc.noaa.gov/2003isabel.shtml?}}</ref>
 
== உருவாக்கமும் கண்டுபிடித்தலும்==
{{See also|Tropical cyclogenesis}}
[[File:Hurricane-profile-en.svg|thumb|250px|உயரச் செல்கின்ற வளியிலுள்ள ஈரப்பதன் ஒடுக்கமடைவதால் விடுவிக்கப்படும் சக்தியானது, வெப்பம் கொண்ட கடல் நீர்களின் மேலாக ஒருநேர்மறை பின்னூட்ட சுழற்சியை ஏற்படுத்தும்போது வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகின்றன.]]
[[File:HurricaneAndrewFLRADAR.png|thumb|250px|பொதுவாக, வானிலை ராடர்களைப் பயன்படுத்தி கண்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.ஆண்ட்ரூ புயலின் இந்த ராடர் படமானது தென் ஃபுளோரிடாவுக்கு மேலுள்ள கண்ணைத் தெளிவாகக் காண்பிக்கிறது.]]
வெப்ப மண்டல சூறாவளிகள் பொதுவாக [[வெப்பமண்டலம்|வெப்ப மண்டல பிரதேசங்களி]]ல் குழம்பிய வானிலையுள்ள பெரிய, உருக்குலைந்த பகுதிகளில் உருவாகும். கூடுதலான இடியுடன் கூடிய புயல்கள் உருவாகி ஒன்றுசேர, புயலானது மழைப்பட்டிகளை உருவாக்கும். இவை பொதுவான ஒரு மையத்தைச் சுற்றி வட்டமிட ஆரம்பிக்கின்றன. புயலானது பலமடைய அடைய, உருவாகிவரும் புயலின் சுழற்சி மையத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் பலமான வெப்பச்சலன வளையம் உருவாகும். பலமான இடியுடன் கூடிய புயல்களும் கடுமையான மழையும் பலத்த காற்றின் மேல் நோக்கிய வீச்சுகளுள்ள பகுதிகளைக் குறிப்பிடுவதால், மேற்பரப்பிலுள்ள பாரமானி அழுத்தம் குறையத் தொடங்கி, சூறாவளியின் மேல் மட்டங்களில் காற்று சேரத் தொடங்கும்.<ref name="eye formation"></ref> இது மேல் மட்ட எதிர்ச்சூறாவளியின் உருவாக்கத்தை அல்லது மத்திய அடர்ந்த மேகம் சூழ்ந்த வானத்தின் மேல் உயர் வளிமண்டல அழுத்தப் பகுதியை ஏற்படுத்தும். இறுதியாக, இவ்வாறு சேர்ந்த காற்றின் பெரும்பகுதியானது வெப்ப மண்டல சூறாவளிக்கு மேலாக எதிர்ச்சூறாவளியாக வெளிநோக்கி வீசும். உருவாகும் கண்ணுக்கு வெளியாக, வளிமண்டலத்தின் மேல் மட்டங்களிலுள்ள எதிர்ச்சூறாவளியானது சூறாவளியின் மையத்தை நோக்கிய காற்றோட்டத்தை அதிகரிக்கும். ஆகவே இது கண்சுவரை நோக்கி காற்றைத் தள்ளுகிறது மற்றும் சாதகமான பின்விளைவு வளையத்தை உருவாக்குகிறது.<ref name="eye formation"></ref>
 
எனினும், சேர்ந்த காற்றின் சிறு பாகமானது வெளிநோக்கி வீசுவதற்குப் பதிலாக உள்நோக்கி, புயலின் மையத்தை நோக்கி வீசும். இது புயலின் மையத்தில், காற்றின் மேல் நோக்கிய வீச்சுகளின் பலத்தை காற்றின் எடையானது நடுநிலையாக்குகின்ற புள்ளியில் காற்று அழுத்தத்தை மேலும் சேர்க்கச் செய்யும். புயலின் மையத்தில் காற்று குறையத் தொடங்கும், எனவே இது பெரும்பாலும் மழை இல்லாத பகுதிகளை உருவாக்குகின்றது - புதிதாக உருவாக்கப்பட்ட கண்.<ref name="eye formation">{{cite web | author = Vigh, Jonathan | year = 2006 | url = http://ams.confex.com/ams/pdfpapers/108319.pdf | title = Formation of the Hurricane Eye | publisher = Department of Atmospheric Science, [[Colorado State University]] | location = Fort Collins, Colorado | accessdate = 2006-03-26 | format = PDF}}</ref>
 
இப்போதும் புதிராக இருக்கின்ற இந்த செயற்பாட்டின் பல நோக்குகள் உள்ளன. சுற்றோட்டத்தின் மேற்புறத்தில் அல்லாமல் அதன் மையத்தில் வெப்பச்சலன வளையம் ஏன் தோன்றுகிறது அல்லது மேல் மட்ட எதிர்ச்சூறாவளியானது புயலின் மேலாகவுள்ள மேலதிக காற்றின் ஒரு பகுதியை மட்டும் ஏன் வெளியேற்றுகிறது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. கண் உருவாகின்ற சரியான செயற்பாட்டைப் போல பல கொள்கைகள் உள்ளன: உறுதியாகத் தெரிந்துள்ளதெல்லாம் என்னவென்றால், வெப்ப மண்டல சூறாவளிகள் உயர் காற்று வேகங்களை அடைவதற்கு கண் அவசியம் என்பதாகும்.<ref name="eye formation"></ref>
 
கண் உருவாக்கமானது அநேகமாக எப்பொழுதும், அதிகரித்துவரும் வெப்ப மண்டல சூறாவளி ஒழுங்காக்கலினதும் பலத்தினதும் குறிகாட்டி ஆகும். இதன் காரணமாக, வானிலை ஆய்வாளர்கள் கண் உருவாக்கத்துக்கான அறிகுறிகள் உள்ளனவா என்று புயல்களை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.
 
தெளிவான கண்ணுள்ள புயல்களில் கண்ணைக் கண்டுபிடித்தல் என்பது வானிலை செயற்கைக்கோளிலிருந்து கிடைக்கும் படங்களைப் பார்ப்பது போல எளிதானதாகும். எனினும், நிரப்பிய கண்ணுடைய புயல்களில் அல்லது மத்திய அடர்ந்த மேகம் சூழ்ந்த வானத்தால் முற்றுமுழுதாக மூடப்பட்ட கண்ணில், பிற கண்டுபிடித்தல் முறைகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. கப்பல்கள் மற்றும் ஹரிக்கேன் ஹண்டர்ஸ் (Hurricane Hunters) ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் அவதானங்கள், காற்று வேகத்திலுள்ள ஒரு வீழ்ச்சியை அல்லது புயலின் மையத்தில் மழைவீழ்ச்சி இல்லாமையை எதிர்நோக்குவதன் மூலம் பார்வை மூலமாக ஒரு கண்ணைக் குறிப்பிட்டுக் காட்டலாம். அமெரிக்க ஒன்றியம், தென்கொரியா மற்றும் வேறு சில நாடுகளில் NEXRAD டாப்ளர் வானிலை ராடர் நிலையங்களின் வலையமைப்பானது கடற்கரைக்கு அண்மையிலுள்ள கண்களைக் கண்டுபிடிக்கக் கூடியவை. வானிலை செயற்கைக்கோள்களும் கண் உருவாகுவதைக் சுட்டிக்காட்டக்கூடிய, வளிமண்டல நீராவி மற்றும் மேக வெப்பநிலைகள் ஆகியவற்றை அளப்பதற்கான கருவிகளைக் கொண்டுதிரிகின்றன. மேலும், ஓசோன் அதிகமாகவுள்ள அடுக்குமண்டலத்திலிருந்து காற்று வீழ்ச்சியுறுவதால், கண்ணிலுள்ள [[ஓசோன்|ஓசோன்]] அளவு கண்சுவரிலுள்ள ஓசோன் அளவைவிட மிகவும் அதிகமானது என்பதை விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். ஓசோனுக்கு உணர்திறனுள்ள கருவிகள் அளவீடுகளை எடுக்கின்றன. இக்கருவிகள் காற்றின் உயர்ச்சி மற்றும் வீழ்ச்சி நிரல்களை அவதானிக்கப் பயன்படுகின்றன. மேலும், கண் உருவாக்கத்தை செயற்கைக்கோள் புகைப்படம் தீர்மானிக்க முன்னரேகூட, இவை கண் உருவாக்கத்துக்கான குறிப்பை வழங்குகின்றன.<ref>{{cite news | url = http://www1.nasa.gov/vision/earth/environment/ozone_drop.html | date = June 8, 2005 | title = Ozone Levels Drop When Hurricanes Are Strengthening | publisher = [[NASA]] | accessdate = 2006-05-09}}</ref>
 
== இணைந்த நிகழ்வுகள் ==
[[File:Typhoon amber concentric eyewalls.gif|thumb|left|250px|1997 ஆம் ஆண்டு பசுபிக் சூறாவளி பருவத்தின்போதான அம்பர் சூறாவளியின் செயற்கைக்கோள் புகைப்படம். கண்சுவர் இடமாற்ற வட்டத்துக்கு உட்படுகின்றபோது, ஒரு வெளிப்புற மற்றும் உட்புற கண்சுவரைக் காண்பிக்கிறது.]]
=== கண்சுவர் இடமாற்ற வட்டங்கள் ===
{{Main|Eyewall replacement cycle}}
''கண்சுவர் இடமாற்ற வட்டங்கள்'' , ''ஒரே மையமுள்ள கண்சுவர் வட்டங்கள்'' என்றும் அழைக்கப்படும். இவை பொதுவாக 185&nbsp;கி.மீ/ம (115&nbsp;மை/ம) இலும் அதிகமான காற்றுடன் அல்லது பிரதான புயல்களுடன் (வகை 3 அல்லது அதிலும் கூடியது) உருவாகும் கடுமையான [[புயல்|வெப்ப மண்டல சூறாவளி]]களில் இயற்கையாகவே நிகழ்கின்றன. வெப்ப மண்டல சூறாவளிகள் இந்தத் தீவிரத்தை அடையும்போது, மற்றும் கண்சுவர் சுருங்கும்போது அல்லது போதியளவுக்கு இது ஏற்கனவே சிறிதாக இருக்கும்போது (மேலே பார்க்கவும்), வெளிப்புற மழைப்பட்டிகள் சில பலப்பட்டு, இடியுடன் கூடிய புயல்களின் வளையத்துள்—வெளிப்புற கண்சுவர்—ஒழுங்குபடுத்தலாம். இது மெதுவாக உள்நோக்கி அசைந்து, இதற்குத் தேவைப்படும் ஈரப்பதன் மற்றும் [[வளைவுந்தம்|சுழல் உந்தத்]]தின் உட்புற கண்சுவரை எடுத்துக்கொள்ளும். சூறாவளியின் கண்சுவரில் பலமான காற்றுகள் உள்ளதால், உட்புறச் சுவர் வெளிப்புறச் சுவரினால் "தடைப்படுத்தப்படும்" போது, இந்தக் கட்டத்தின்போது வெப்ப மண்டல சூறாவளியானது வழக்கமாக பலவீனமாகிறது. இறுதியாக வெளிப்புற கண்சுவர் முற்றுமுழுதாக உட்புறச் சுவரை இடமாற்றுகிறது. எனவே புயல் மீண்டும் தீவிரமாகலாம்.
 
இந்த செயற்பாட்டின் கண்டுபிடிப்பானது அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்தின் புராஜெக்ட் ஸ்டோர்ம்ஃபரி என்ற புயல் மாறுபாட்டு பரிசோதனையின் முடிவுக்கு பகுதியாகக் காரணமாகியது. இந்தத் திட்டமானது, கண்சுவருக்கு வெளியே [[செயற்கை மழை|மேகங்களைத் தோன்றச்செய்]]வதற்கு முயற்சி செய்தது. இது புதிய கண்சுவர் ஒன்றைத் உண்டாக்கி புயலை பலவீனமாக்குகின்றது. இது புயல் இயக்கவியல் காரணமாக நிகழுகின்ற ஒரு இயற்கையான செயற்பாடு என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, திட்டம் விரைவாகக் கைவிடப்பட்டது.<ref name="AOML FAQ D8">{{cite web | author = [[Atlantic Oceanographic and Meteorological Laboratory]], Hurricane Research Division | title = Frequently Asked Questions: What are "concentric eyewall cycles" (or "eyewall replacement cycles") and why do they cause a hurricane's maximum winds to weaken? | publisher = [[NOAA]] | accessdate = 2006-12-14 | url = http://www.aoml.noaa.gov/hrd/tcfaq/D8.html}}</ref>
 
பெரும்பாலும் ஒவ்வொரு கடுமையான புயலும் அது இருக்கின்ற காலகட்டத்தில் இந்த வட்டங்களில் குறைந்தது ஒன்றிற்காவது உள்ளாகும். 1980 ஆம் ஆண்டில் அலென் புயல் சாஃபீர்-சிம்ப்ஸன் ஸ்கேலில் பல தடவைகளாக வகை 5 க்கும் வகை 3 க்கும் இடைப்பட்ட நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த, மீண்டும் மீண்டும் நடந்த கண்சுவர் இடமாற்ற வட்டங்களுக்கு உள்ளாகியது. ஜூலியட் புயல் என்பது அரிதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மும்மடி கண்சுவர்கள் உள்ள சந்தர்ப்பம் ஆகும்.<ref name="Triple Eyewalls">{{cite web | author=McNoldy, Brian D. | title=Triple Eyewall in Hurricane Juliette | year= 2004 | publisher=Bulletin of the American Meteorological Society: Vol. 85, pp. 1663–1666 | url = http://journals.ametsoc.org/doi/pdf/10.1175/BAMS-85-11-1663|format=PDF}}</ref>
 
=== அகழிகள் (மோட்டுகள்) ===
வெப்ப மண்டல சூறாவளியிலுள்ள ''அகழி'' என்பது கண்சுவருக்கு வெளியேயுள்ள அல்லது ஒரே மையமுள்ள கண்சுவர்களுக்கு இடைப்பட்ட தெளிவான வளையம் ஆகும். இது மெதுவாக வீழ்ச்சியுறும் காற்று, சிறிதளவு மழை அல்லது மழையில்லாமை மற்றும் இழுவை-ஆதிக்கமுள்ள ஓட்டம் ஆகிய குணவியல்புகளைக் குறித்துக்காட்டுகிறது.<ref name="Rapid Filamentation">{{cite web | author=Rozoff, C. M., W. H. Schubert, B. D. McNoldy, and J. P. Kossin | title=Rapid filamentation zones in intense tropical cyclones | year= 2006 | publisher=Journal of the Atmospheric Sciences: Vol. 63, pp. 325–340 | url = http://www.ssec.wisc.edu/~kossin/articles/Rozoffetal2006.pdf | format = PDF | accessdate = 2007-11-16}}</ref> கண்சுவர்களுக்கு இடையிலான அகழி என்பது ஒரு ''துரித இழையவளர்ச்சி (filamentation) வலயத்'' துக்கான அல்லது காற்றின் சுழற்சிமுறை வேகமானது புயலின் மையத்திலிருந்தான தூரத்துக்கு விகிதாச்சாரமாக மாறுகின்ற புயலிலுள்ள ஒரு பகுதிக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதுபோன்ற இழுவை-ஆதிக்கமுள்ள பிரதேசங்கள் ஏதேனும் போதுமான வலிமையான நீர்ச்சுழலுக்கு அருகில் காணப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலானவை பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளிலேயே இருப்பதாகக் கூறப்படுகின்றன.
 
=== கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள் (mesovortices) ===
''கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள்'' சிறிய அளவிலான சுழற்சிமுறை அம்சங்கள் ஆகும். இவை கடுமையான வெப்ப மண்டல சூறாவளிகளின் கண்சுவர்களில் காணப்படும். கொள்கையில் இவை, பெரும்பாலும் பல்-நீர்ச்சுழல் புயல் காற்றுகளில் அவதானிக்கப்படும் "உறிஞ்சல் பெருநீர்ச்சுழல்களை" ஒத்தவை. இந்த பெருநீர்ச்சுழல்களில், காற்று வேகமானது கண்சுவரின் மீதிப்பாகத்தைவிட 10% வரை உயர்வாகக் காணப்படலாம். கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள் வெப்ப மண்டல சூறாவளிகளில் வலுவடையும் காலப்பகுதிகளில் மிகவும் சாதாரணமாக இருக்கின்றன.
 
கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள் வெப்ப மண்டல சூறாவளிகளில் பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான நடத்தையை வெளிக்காட்டும். அவை பொதுவாக தாழ் அழுத்த மையத்தைச் சுற்றி சுழலும். ஆனால் சில வேளைகளில் அவை அசையாமல் நிலைத்திருக்கும். கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள் புயலின் கண்ணைக் கடப்பதாகவும்கூட ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அவதான ரீதியான,<ref name="Vortical Swirls">{{cite web | author=Kossin, J. P., B. D. McNoldy, and W. H. Schubert | title=Vortical swirls in hurricane eye clouds | year= 2002 | publisher=Monthly Weather Review: Vol. 130, pp. 3144–3149 | url = http://www.ssec.wisc.edu/~kossin/articles/kossin_etal_2002.pdf | format=PDF | accessdate=2007-11-16}}</ref> பரிசோதனை ரீதியாக,<ref name="Experimental Study">{{cite web | author=Montgomery, M. T., V. A. Vladimirov, and P. V. Denissenko | title=An experimental study on hurricane mesovortices | year= 2002 | publisher=Journal of Fluid Mechanics: Vol. 471, pp. 1–32 | url = http://journals.cambridge.org/action/displayFulltext?type=1&fid=128928&jid=FLM&volumeId=471&issueId=-1&aid=128927}}</ref> மற்றும் கொள்கை ரீதியாக<ref name="Mesovortices">{{cite web | author=Kossin, J. P., and W. H. Schubert | title=Mesovortices, polygonal flow patterns, and rapid pressure falls in hurricane-like vortices | year= 2001 | publisher=Journal of the Atmospheric Sciences: Vol. 58, pp. 2196–2209 | url = http://www.ssec.wisc.edu/~kossin/articles/kos_sch2001.pdf | format = PDF | accessdate = 2007-11-16}}</ref> ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
வெப்ப மண்டல சூறாவளி கரையை அடைந்த பின்னர், [[குழல் காற்று|புயல் காற்று]]கள் உருவாக்கத்தில் கண்சுவர் இடைபெருநீர்ச்சுழல்கள் ஒரு முக்கியமான காரணியாகும். புயல்காற்று ஏற்படக்கூடிய செயல்களுக்கு வழிவகுக்கும் தனித்த இடியுடன் கூடிய புயல்களில் (ஒரு இடைசூறாவளி) இடைபெருநீர்ச்சுழல்கள் சுழற்சியை உற்பத்தி செய்யக்கூடியவை. கரையில், வெப்ப மண்டல சூறாவளிச் சுற்றோட்டத்துக்கும் நிலத்துக்கும் இடையே உராய்வு உருவாகின்றது. இது இடைபெருநீர்ச்சுழல்கள் மேற்பரப்புக்கு இறங்க அனுமதிக்கும். எனவே பெரிய புயல்காற்றுகளின் வெறியாட்டங்களை ஏற்படுத்துகின்றன.
 
=== அரங்க விளைவு ===
[[File:Hurricane Wilma eye.jpg|thumb|250px|சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த குழுவினரால் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி 08:22 CDT (13:22 UTC) மணிக்கு எடுத்த வில்மா புயலின் கண்ணின் படம். குறைந்தபட்ச மத்திய அழுத்தமாக 882&nbsp;mbar (26.06&nbsp;inHg) மட்டுமே கொண்டிருந்த அந்த நேரத்தில் வில்மா புயல் தீவிரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகவும் பலமான அட்லாண்டிக் புயல் என்றாகியது.<ref name="Wilma TCR">[42]</ref> குண்டூசித்துளைக் கண்ணுக்கான உன்னதமான எடுத்துக்காட்டாக மட்டும் இல்லாமல், கண்சுவர் வெளிநோக்கி மேல்நோக்கிச் சாய்கின்ற அரங்க விளைவுக்கும் எடுத்துக்காட்டாகியது.]]
''அரங்க விளைவு'' என்பது பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளில் அவதானிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். இது கிட்டத்தட்ட சாதாரணமான ஒரு நிகழ்வு. இங்கு கண்சுவரின் மேகங்கள் உயரத்துடன் மேற்பரப்பிலிருந்து வெளிநோக்கி வளைகின்றன. இது விளையாட்டு அரங்கத்தை ஒத்ததாக, வானிலிருந்து திறந்த குவிமாடம் போன்ற ஒரு தோற்றத்தை கண்ணுக்கு வழங்கும். கண்ணானது எப்போதும் புயலின் மேற்பகுதியில் பெரிதாகவும், புயலின் அடியில் மிகச்சிறிதாகவும் இருக்கும். ஏனெனில் கண்சுவரில் எழுகின்ற காற்று சமமான [[வளைவுந்தம்|சுழல் உந்தத்]]தின் ஒரே பெறுமதிக்கோடுகளைப் பின்பற்றும். இதுவும்கூட உயரத்துடன் வெளிநோக்கிச் சாயும்.<ref name="ang_mom_0">{{cite web | author=Hawkins, H. F., and D. T. Rubsam | title=Hurricane Hilda, 1964: II. Structure and budgets of the hurricane on October 1, 1964 | year= 1968 | publisher=Monthly Weather Review: Vol. 96, pp. 617–636 | url = http://docs.lib.noaa.gov/rescue/mwr/096/mwr-096-09-0617.pdf|format=PDF}}</ref><ref name="ang_mom_1">{{cite web | author=Gray, W. M., and D. J. Shea | title=The hurricane's inner core region: II. Thermal stability and dynamic characteristics | year= 1973 | publisher=Journal of the Atmospheric Sciences: Vol. 30, pp. 1565–1576 | url = http://ams.allenpress.com/perlserv/?request=get-document&doi=10.1175%2F1520-0469(1973)030%3C1565%3ATHICRI%3E2.0.CO%3B2}}</ref><ref name="ang_mom_2">{{cite web | author=Hawkins, H. F., and S. M. Imbembo | title=The structure of a small, intense hurricane—Inez 1966 | year= 1976 | publisher=Monthly Weather Review: Vol. 104, pp. 418–442 | url = http://ams.allenpress.com/archive/1520-0493/104/4/pdf/i1520-0493-104-4-418.pdf | format = PDF }}</ref> சாய்கின்ற சம்பவமானது மிகக்கூடுதலாகக் குறிப்பிடப்படுகின்ற, மிகச் சிறிய கண்களுடைய வெப்ப மண்டல சூறாவளிகளின் இயல்புகளை இந்த நிகழ்வு குறிக்கிறது.
 
=== கண்-போன்ற அமைப்புகள் ===
 
பலமடைகின்ற வெப்ப மண்டல சூறாவளிகளில் கண் போன்ற அமைப்பு பெரும்பாலும் காணப்படும். இது புயல்களில் அல்லது சூறாவளிகளில் காணப்படும் கண்ணை ஒத்ததாக, வெப்பச்சலனம் இருக்காத புயலின் சுற்றோட்ட மையத்திலுள்ள வட்டமான பகுதியாகும். இந்தக் கண்-போன்ற அமைப்புகள் பலமடைகின்ற வெப்ப மண்டல புயல்கள் மற்றும் வகை&nbsp;1 வலிமையான புயல்கள் ஆகியவற்றில் சாசாஃபீர்-சிம்ப்சன் ஸ்கேல் மீது மிகவும் பொதுவாகக் காணப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு கண்-போன்ற அமைப்பானது, அதிகபட்ச காற்று வேகங்கள் 50 மீ/ம ஆக இருந்தபோது பீட்டா புயலில் காணப்பட்டது.<ref>John L. Beven. [http://www.nhc.noaa.gov/archive/2005/dis/al262005.discus.003.shtml? TROPICAL STORM BETA DISCUSSION NUMBER 3.] Retrieved on 2008-01-08.</ref> இந்த கண்-போன்ற அமைப்புகள் விண்வெளியிலிருந்தான தென்படக்கூடிய அலைநீளங்கள் அல்லது புற ஊதா அலைநீளங்கள் ஆகியவற்றில் பொதுவாகக் கண்ணுக்குத் தெரியாது. எனினும் அவற்றை நுண்ணலை செயற்கைக்கோள் புகைப்படத்தில் எளிதாகப் பார்க்கலாம்.<ref name="TRMM">Frank Marks and Stacy Stewart. [http://sciencepolicy.colorado.edu/about_us/meet_us/roger_pielke/workshops/trmm/presentations/marks.pdf TRMM Satellite Data - Applications to Tropical Cyclone Analysis and Forecasting.] Retrieved on 2008-01-10.</ref> வளிமண்டலத்தின் மத்திய மட்டங்களில் இந்த அமைப்பின் உருவாக்கமானது முழுமையான கண்ணின் உருவாக்கத்தை ஒத்தது. ஆனால் இதன் இருப்பிடம் செங்குத்தான காற்று வெட்டுக் காரணமாக கிடைநிலையில் இடம்பெயர்க்கப்படலாம்.<ref>{{Cite web
|author=Jacksonville Weather Forecast Office
|title=STORM project
|url=http://www.srh.noaa.gov/jax/storm/storm.shtml
|accessdate=2008-03-12
|publisher=[[NOAA]]}}</ref><ref>{{Cite web
|author=Daniel Brown and Lt. Dave Roberts
|work=[[National Hurricane Center]]
|title=Interpretation of passive microwave imagery
|url=http://www.srh.noaa.gov/jax/storm/presentations/displayable/2007_NHC_microwave/player.html
|accessdate=2008-03-12
|publisher=[[NOAA]]}}</ref>
 
== தீங்குகள் ==
கண்ணானது மையத்தில் காற்று இல்லாமல், புயலின் மிகவும் அமைதியான பகுதியாகவும், கடலின் மேலாக பொதுவாக தெளிவான வானங்களாகவும் பெருமளவில் இருக்கின்ற போதிலும், இது அதிகளவின் தீங்கான பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது. கண்சுவரில், காற்று-இயக்கும் அலைகள் அதே திசையில் செல்கின்றன. எனினும் கண்ணின் மையத்தில், அனைத்து திசைகளில் இருந்துவரும் அலைகளும் ஒருங்கிணைந்து ஒன்றையொன்று சார்ந்திருக்கக்கூடிய ஒழுங்கற்ற உச்சிகளை உருவாக்குகின்றன. இவை முரட்டு அலைகளை உருவாக்குகின்றன. புயல் அலைகளின் அதிகபட்ச உயரம் அறியப்படவில்லை. ஆனால் வகை நான்கு புயலாக இவான் புயல் இருந்தபோது எடுக்கப்பட்ட அதன் அளவீடுகள், கண்சுவருக்கு அருகான அலைகள் உச்சத்திலிருந்து பள்ளம் வரையிலும் 40 மீட்டர்களைவிட (130 அடிகள்) கூடுதல் என மதிப்பிட்டன.<ref>{{cite journal
| author= David W. Wang, Douglas A. Mitchell, William J. Teague, Ewa Jarosz, Mark S. Hulbert
| title= Extreme Waves Under Hurricane Ivan
| journal = Science
| url = http://www.sciencemag.org/cgi/content/full/309/5736/896
| volume = 309
| issue = 5736
| pages = 896
| pmid= 16081728
| doi= 10.1126/science.1112509
| year= 2005
}}</ref>
 
குறிப்பாக புயல்கள் அரிதாக உள்ள பகுதிகளில் பொதுவாக ஏற்படும் தவறு என்னவென்றால், கண் கடந்துகொண்டிருக்கும்போது, புயல் ஓய்ந்துவிட்டதாக தவறாக நினைத்துக்கொண்டு, சேதங்களைப் பார்வையிடுவதற்காக குடியிருப்பாளர்கள் வெளியில் திரிவதாகும். பின்னர் அவர்கள் உக்கிரமான காற்றுக்களால் எதிர்பார்க்காத விதமாக எதிரான கண்சுவரில் முற்றுமுழுதாகப் பிடிக்கப்படுவார்கள். கண் கடந்துகொண்டிருக்கும் நிலையில், வீடுகளை விட்டு வெளியே வருவதை தேசிய வானிலை சேவை கடுமையாக எச்சரிக்கிறது.<ref>{{cite web | author=National Weather Service Southern Region Headquarters | title=Tropical Cyclone Safety | date=January 6, 2005 | publisher=[[National Weather Service]] | accessdate=2006-08-06 | url = http://www.srh.noaa.gov/srh/jetstream/tropics/tc_safety.htm}}</ref>
 
== பிற புயல்கள் ==
{{Main|Cyclone}}
அதிகாரபூர்வமாக "கண்கள்" என அழைக்கப்படுகின்ற அமைப்புகள் வெப்ப மண்டல சூறாவளிகளில் மட்டுமே உள்ளன என்றபோதிலும்,<ref name="FAQ eye"></ref><ref name="AMS glossary">[19] ^ Glossary of Meteorology. American Meteorological Society. Accessed 2008-10-10.</ref> கண்-போன்ற அமைப்புகளைக் காண்பிக்கக்கூடிய பிற புயல்களும் உள்ளன:
 
=== துருவ மண்டல தாழமுக்கங்கள் (போலார் லோ) ===
துருவ மண்டல தாழமுக்கங்கள் துருவங்களுக்கு அருகில் காணப்படுகின்ற நடுத்தர அளவு வானிலை முறைகளாகும் (பொதுவாக 1,000&nbsp;கி.மீ அல்லது {{convert|600|mi|km}} குறுக்களவு). ஒப்பீட்டளவில் சூடான நீருக்கு மேலே உருவாகும் வெப்ப மண்டல சூறாவளிகள் போல, ஆழமான வெப்பச்சலனம் (இடியுடன் கூடிய புயல்கள்) மற்றும் கடுங்காற்று (51&nbsp;கி.மீ/ம, 32&nbsp;மை/ம அல்லது அதிகமான) ஆகிய அம்சங்களை உள்ளதாகவிருக்கலாம். எனினும் வெப்ப மண்டல இயல்பான புயல்களைப் போலன்றி, அவை மிகுந்த குளிரான வெப்பநிலைகளிலும், மிகவும் உயரமான [[நிலநேர்க்கோடு|அட்சரேகை]]களிலும் விருத்தியடையும். அவை சிறியவையாகவும், குறைந்த காலங்களே (சில ஒரு நாளைவிட அதிகமாக அல்லது ஒருநாளே நீடிக்கும்)நீடித்தும் இருக்கும். இந்த வேறுபாடுகள் தவிர, அவை அமைப்பில் வெப்ப மண்டல சூறாவளிகளை மிகவும் ஒத்ததாக இருக்கலாம். கண்சுவர் மற்றும் மழை/உறைபனி பட்டிகளால் சூழப்பட்ட தெளிவான கண்ணைக் கொண்டிருக்கலாம்.<ref>{{cite web| url = http://nsidc.org/arcticmet/patterns/polar_low.html| title = Polar Lows| accessdate = 2007-01-24 | author = [[National Snow and Ice Data Center]]}}</ref>
 
=== மிதவெப்ப மண்டல புயல்கள் ===
[[File:GreatBlizzardof2006.jpg|thumb|250px|2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு மிதவெப்ப மண்டல புயலான வட அமெரிக்க பனிப்புயலானது அதன் உச்சக்கட்ட தீவிரத்தில் கண் போன்ற ஒரு அமைப்பைக் காண்பித்தது (இங்கு டெல்மார்வ குடாநாட்டின் கிழக்காகக் காணப்படுகிறது)]]
[[File:PIA08333 Saturn storm.jpg|thumb|பல பத்துக் கிலோமீட்டர்கள் உயரமான ஒரு கண்சுவரைக் காண்பிக்கின்ற சனிக்கிரகத்தின் தென் துருவத்திலுள்ள புயலை ஒத்த சூறாவளி]]
மிதவெப்ப மண்டல புயல்கள் தாழ் அழுத்தமுடைய பகுதிகளாகும். இவை வேறுபட்ட வளிப்பகுதிகளின் எல்லையில் இருக்கும். பெரும்பாலும் நடு-அட்சரேகைகளில் காணப்படுகின்ற உன்னதமான வட அமெரிக்க நார்'ஈஸ்டர்கள் மற்றும் ஐரோப்பியன் காற்றுபுயல்கள் உள்ளடங்கலாக அனைத்து புயல்களும் இயல்பில் மிதவெப்ப மண்டல புயல்களே. பொதுவாக தாழ்ந்த, வெப்பச்சலனமற்ற மேகங்களால் சூழப்படுகின்ற போதிலும், இவற்றில் மிகவும் தீவிரமானது மிகக்குறைந்த பாரமானி அழுத்தப் பகுதியில் ஒரு தெளிவான "கண்" இருக்கலாம். மேலும், புயல் போய்ச்சேருகின்ற கரைக்கு அருகில் காணப்படும்.<ref name="WarmSeclusionCycMet">{{cite web
| title = Warm seclusion cyclone climatology | author = Maue, Ryan N. | publisher = [http://ams.confex.com/ American Meteorological Society Conference] | date = 2006-04-25 | url = http://ams.confex.com/ams/27Hurricanes/techprogram/paper_108776.htm | accessdate = 2006-10-06 }}</ref>
 
=== துணைவெப்ப மண்டல புயல்கள் ===
துணைவெப்ப மண்டல புயல்கள் சில மிதவெப்ப மண்டல இயல்புகளையும், சில வெப்ப மண்டல இயல்புகளையும் கொண்டுள்ள சூறாவளிகளாகும். இதே முறையில், அவற்றில் ஒரு கண் இருக்கலாம். ஆனால் அவை உண்மையான வெப்ப மண்டல புயல்கள் அல்ல. துணைவெப்ப மண்டல புயல்கள் அதிக காற்றுகள் மற்றும் கடல்களுடன் மிகுந்த தீங்கானவையான இருக்கலாம். மேலும் பெரும்பாலும் உண்மையான வெப்ப மண்டல புயல்களாக வெளிப்படும். இதே முறையில், 2002 ஆம் ஆண்டில் தேசிய புயல் மையம் தமது பெயரிடும் முறையில் துணைவெப்ப மண்டல புயல்களை உள்ளடக்கத் தொடங்கியது.<ref name="subtrop 1">{{cite web| url = http://www.usatoday.com/weather/hurricane/2003-04-22-subtropical-storms_x.htm| title = Weather Basics: Subtropical storms| accessdate = 2006-09-15| last = Cappella| first = Chris| date = April 22, 2003| work = [[USA Today]]}}</ref>
 
=== புயல் காற்றுகள் ===
[[குழல் காற்று|புயல் காற்று]]கள் அழிவுண்டாக்கக்கூடிய, சிறியளவு புயல்கள் ஆகும். இவை பூமியில் மிகவேகமான காற்றுகளை உருவாக்கும். இரு பிரதான வகைகள் உள்ளன—காற்றின் தனித்த சுழற்சியுறுகின்ற நிரலைக் கொண்டுள்ள தனித்த-நீர்ச்சுழல் புயல் காற்றுகள் மற்றும் சிறிய ''உறிஞ்சல் பெருநீர்ச்சுழல்களை'' க் கொண்டுள்ள பல்-நீர்ச்சுழல் புயல் காற்றுகள். இவை சிறிய-புயல் காற்றுகளை ஒத்தவை. அனைத்தும் ஒரு பொது மையத்தைச் சுற்றிச் சுழல்கின்றன. இந்த இரு வகை புயல் காற்றுகளும் "கண்கள்" எனக் குறிப்பிடப்படுகின்ற அமைதியான மையங்களைக் கொண்டிருக்குமென சில வானிலை ஆய்வாளர்களால் கோட்பாடு உருவாக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளை வானிலை ராடர்கள்<ref name="tornado 1">{{cite web| url = http://www.sciencenews.org/pages/sn_arc99/5_15_99/fob1.htm| title = Oklahoma Tornado Sets Wind Record| accessdate = 2006-09-15| last = Monastersky| first = R.| date = May 15, 1999| work = [[Science News]]}}</ref> மற்றும் சாட்சித் தகவல்களால் எடுக்கப்படும் டாப்ளர் வேக அவதானங்கள் ஆதரிக்கின்றன.<ref name="tornado 2">{{cite web| url = http://docs.lib.noaa.gov/rescue/mwr/058/mwr-058-05-0205.pdf| title = Seeing the Inside of a Tornado| accessdate = 2006-09-15| author = Justice, Alonzo A.| year = 1930| month = May| format = [[Portable Document Format|PDF]]| work = [[Monthly Weather Review]]| pages = 205–206}}</ref>
 
===புவிக்கப்பாலான புயல்கள்===
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தெளிவாக வரையறுக்கப்பட்ட கண்சுவரைக் கொண்டிருந்த ஒரு '[[புயல்|புயலை]]-ஒத்த சூறாவளியானது [[சனி (கோள்)|சனி]]க் கிரகத்தின் தென் துருவத்தில் பிணைக்கப்பட்டிருந்ததை காஸினி விண்வெளிக்கலம் அவதானித்ததாக [[நாசா|நாசா]] தெரிவித்தது. இந்த அவதானம் சிறப்பாக அவதானிக்கக்கூடியது. ஏனெனில், புவி தவிர வேறு எந்தவொரு கிரகத்திலும் கண்சுவர் மேகங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை ([[கலிலியோ விண்கலம்|கலீலியோ]] விண்கலத்தால் வியாழனின் பெரிய செந்நிற இடத்தில் ஒரு கண்சுவரை அவதானிக்கத் தவறியமை உள்ளடங்கலாக).<ref>{{cite web|url=http://saturn.jpl.nasa.gov/news/press-release-details.cfm?newsID=703|title=NASA Sees into the Eye of a Monster Storm on Saturn|publisher=[[NASA]]|date=2006-11-09|accessdate=November 10, 2006}}</ref> 2007 ஆம் ஆண்டில், [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கிரகத்தின் இரு துருவங்களிலும் மிகவும் பெரிய பெருநீர்ச்சுழல்கள் [http://www.esa.int/esa-mmg/mmg.pl?b=b&amp;type=I&amp;mission=Venus%20Express&amp;single=y&amp;start=5 ] ஒரு இருதுருவ கண் அமைப்பைக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வீனஸ் எக்சுபிரசு குழுவினர் அவதானித்தனர்.<ref name="Venus Express">{{cite journal |last=Piccioni |first=G. |coauthors=et al. |title=South-polar features on Venus similar to those near the north pole |journal=[[Nature (journal)|Nature]] |volume= 450|issue=450 |pages=637–40 |date=2007-11-29 |url=http://www.nature.com/nature/journal/v450/n7170/abs/nature06209.html |doi=10.1038/nature06209 |pmid=18046395 }}</ref>
 
== மேலும் பார்க்கவும் ==
{{Portal|Tropical cyclones}}
* வெப்ப மண்டல சூறாவளிகளின் பட்டியல்
* அதிகபட்ச காற்றின் ஆரம்
* புயல் பேரலை
* [[புயல்|வெப்பமண்டல சூறாவளி]]
 
==குறிப்புதவிகள்==
{{Reflist|colwidth=30em}}
 
==புற இணைப்புகள்==
* [http://www.aoml.noaa.gov/hrd/tcfaq/tcfaqHED.html Atlantic Oceanographic and Meteorological Laboratory]
* [http://www.atl.ec.gc.ca/weather/hurricane/hurricanes9.html#eye Canadian Hurricane Centre: Glossary of Hurricane Terms]
 
{{Featured article}}
 
{{DEFAULTSORT:Eye (Cyclone)}}
[[Category:வெப்ப மண்டல சூறாவளி வானவியல்]]
[[Category:பெருநீர்ச்சுழல்கள்]]
 
{{link FA|pt}}
 
[[af:Oog (meteorologie)]]
[[de:Auge (Meteorologie)]]
 
[[en:Eye (cyclone)]]
[[es:Ojo (ciclón)]]
[[fa:چشم توفان]]
[[fr:Œil (cyclone)]]
[[ko:태풍의 눈]]
[[it:Occhio del ciclone]]
[[ja:台風の目]]
[[pl:Oko cyklonu]]
[[pt:Olho (ciclone)]]
[[ru:Глаз бури]]
[[simple:Eye (cyclone)]]
[[fi:Myrskyn silmä]]
[[sv:Orkanens öga]]
[[uk:Око циклону]]
[[vi:Mắt bão]]
[[zh:風眼]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Rexani/கண்_(சூறாவளி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது