மண்டைக்காடு கலவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==மண்டைக்காடு==
மண்டைக்காடு [[வங்காள விரிகுடா]]அரரபிக்கடல் கடல் பகுதியில் கன்னியாக்குமரி மாவட்டத்தில் அமைதுள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள்.மண்டைக்காட்டில் பிரசித்திப் பெற்ற பெண்களின் [[சபரிமலை]] என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயில் [[மாசி]] கொடை விழா வருடாவருடம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இக் கோவிலின் அருகில் [[புனித கண்ணாம்பாள் ஆலயம்]] ([[Our Lady of Perpetual Help]]) மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது.
 
==கலவரத்திற்கான சூழல்<ref>http://www.ibiblio.org/ahkitj/wscfap/arms1974/Book%20Series/TheImageOfGodIM/IOGIM-hinduchristian.htm இந்து கிறித்தவ மதவாதம்-ஒரு கண்ணோட்டம்</ref>==
[[மாடதட்டுவிளை]] என்னும் இடத்தில் [[1980]] ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு இளைஞர்களுக்கு இடையே நடைப் பெற்ற சிறு சண்டையின் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த [[சிலுவை]] காணாமல் போணதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் [[உலக செப வாரம்]] ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டது. அதன் இறுதி நாளன்று கிறித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள் நகர் வழியாக ஒர் ஊர்வலம் நடத்தினார்கள். அவ் ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிறித்தவ வியாபாரி ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றை திங்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைக்கப்பட்டது. அந்த ஊர்வலம் முடிந்த பிறகு அச் சிலுவை அவ் விடத்திலிருந்து அகற்றப்பட்டது.அதன் தொடற்சியாக இந்து விவசாயி ஒருவர் அவ் இடத்தில் விநாயகர் சிலையை [[விநாயகர்]] சதுர்த்திக்காக அமைத்தார் வழிபாடு நடத்த ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து [[மகா சிவராத்திரி]] அன்று காவல்துறையினர் கிறித்தவர்களின் எதிர்பின் காரணமாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களின் முக்கிய திருவிழாவன்று இச் சிலை அகற்றப்பட்டதால் இந்துக்களின் மத்தியில் கொந்தளிப்பு எற்பட்டது. இந்துக்கள் ஹர்த்தால் மற்றும் ஆர்பாட்டங்களில் இறங்கினர். இதனால் இந்து மக்களிடையே ஒற்றுமையும் எழுச்சியும் ஏற்பட்டது. இந்து கிறித்தவ கலவரம் பக்கத்து கிராமங்களிலும் பரவியது. கிறித்தவர்கள் குமரி கடலில் இருக்கும் [[விவேகாநந்தர்]] பாறையில் [[புனித சவேரியார்]] தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர் (ஆவணங்களின் படி அப் பாறை கன்னியாக்குமரி கோவிலுக்கு சொந்தமானது). இரு முறை விவேகாநந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளைக் அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர். இப்படி கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டே இருந்தது. இதன் உச்ச கட்டமாக நாகர்கோவிலில் இந்துக்கள் ஒன்றினைந்து 1982 பெப்ரவரி 13,14 அன்று நடத்திய இந்துக்கள் எழுச்சி மாநாடு கிறித்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு_கலவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது