தானே தூய்மையாதல் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
 
இரண்டாம் வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகள் தூய்மையாவதற்கு முதல் வகையிலும் வேறான முறையொன்றைப் பயன்படுத்துகின்றன. இவ்வகையின் பெயர் குறித்துக் காட்டுவதுபோல் நீர் மூலக்கூறுகளைக் கவர்வதன் மூலம் கண்ணாடியில் விழும் நீர் கண்ணாடியில் பரவிச் செல்ல உதவுகின்றன. தூசி கலந்த நீர் கண்ணாடி முழுவதும் சீராகப் பரவாமல் குறித்த வழிகளில் வழிந்தோடுவதாலேயே காயும்போது அழுக்குக் கோடுகள் உருவாகின்றன. இவ்வகைப் பூச்சுக்கள் நீரைச் சீராகப் பரவச் செய்வதால் கண்ணாடி மேற்பரப்பில் உருவாகும் மெல்லிய நீர்ப்படலம் அழுக்கு அடையாளங்களை உருவாக்காமல் விரைவில் காய்ந்து விடுகிறது. நீர்கவர் பூச்சுக்கள் முதல்வகைப் பூச்சுக்களிலும் கூடிய நிலையான தன்மை கொண்டவை. எனினும் மழைநீருடன்மழை நீருடன் கலந்திருக்கும் உலோக அயன்கள் இவற்றின் செயல்திறனைப் படிப்படியாகக் குறைத்துவிடுவது இப்பூச்சுக்களின் ஒரு குறைபாடு ஆகும்.
 
 
==குறைபாடுகள்==
இவ்வகைக் கண்ணாடிகளின் தூய்மையாதல் தன்மை மழையில் தங்கியிருப்பதால். அடிக்கடி மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே இவை முறையாகப் பயன்படக்கூடும். மிக அரிதாக மழை பெறும் மையக் கிழக்குப் போன்ற பகுதிகளில் இக்கண்ணாடிகளினால் அதிக பயன் விளையும் சாத்தியம் இல்லை. எனினும் கண்ணாடி உற்பத்தியாளர்கள் இவ்வகைக் கண்ணாடிகளை மையக்கிழக்கு நாடுகளிலும் விற்பனை செய்கின்றனர்.
 
[[பகுப்பு:கட்டுமானத் தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/தானே_தூய்மையாதல்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது