தானே தூய்மையாதல் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தானே தூய்மையாதல் கண்ணாடி''' (self-cleaning glass) என்பது, [[மழை]]யின் போது தானே தூய்மையாகிக் கொள்ளும் வகையைச் சேர்ந்த [[கண்ணாடி]]யைக் குறிக்கும். தற்காலத்தில் [[கட்டிடம்|கட்டிடங்களின்]] பெருமளவு வெளிப்புறப் பரப்புக்கள் கண்ணாடிகளினால் ஆனவையாக இருப்பதால் [[தூசி]] முதலியன அடைந்து தூய்மை கெடுவதும், மழையின் போது மழை நீருடன் கலக்கும் இத் தூசிகள் கண்ணாடி வழியே வழிந்து செல்லும்போது அழகற்ற தன்மையைக் கொடுக்கும் வரிவரியான அடையாளங்கள் ஏற்படுவதும் கட்டிட [[முகப்பு]]க்களைப் பேணுவதை கடினமாக்குகின்றன. இது அதிக செலவில் கட்டிட முகப்புக்களை அடிக்கடி தூய்மைப்படுத்தும் தேவையை உருவாக்குகின்றது. இப்பின்னணியில் தானே தூய்மையாதல் கண்ணாடிகளின் உருவாக்கம் கண்ணாடியிடலில் ஒரு மைல்கல் எனலாம். கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் போதே அதன் மேற்பரப்பில் குறித்த வகைப் பூச்சுக்களைப் பூசுவதனால் இவ்வகைக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன.
 
==பூச்சுக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தானே_தூய்மையாதல்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது