விடுதலைப் பயணம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விடுதலைப் பயணம் - யாத்திராகமம் இணைத்தல்
சி விடுதலைப் பயணம் - சேர்க்கை
வரிசை 6:
ஒடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் [[எகிப்து]] நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை '''விடுதலைப் பயணம்''' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sh'moth" அதாவது "பெயர்கள்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "exodos" (ἔξοδος, = புறப்படுகை) என்பதாகும் <ref>[http://en.wikipedia.org/wiki/Book_of_Exodus விடுதலைப் பயணம் - நூல்]</ref>.

'''விடுதலைப் பயணம்''' யூத சமய நூல் தொகுப்பான [[தோரா|தோராவில்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Torah தோரா]</ref> இரண்டாம் நூலாக உள்ளது. எபிரேய விவிலியத்திலும் அது இரண்டாவது அமைந்த நூல் ஆகும். அது முதல் நூலாகிய [[தொடக்க நூல்|தொடக்க நூலின்]] தொடர்ச்சியாக வருகிறது

== நூலின் உள்ளடக்கம் ==

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இசுரயேல் மக்களைப் பேராற்றலோடு [[மோசே]]யின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு [[உடன்படிக்கை]] செய்து, [[பத்துக் கட்டளைகள்|பத்துக் கட்டளைகளை]] வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.
வரி 34 ⟶ 36:
#கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார் (விப 32-34).
#உடன்படிக்கைப் பேழை செய்யப்படுகிறது. சந்திப்புக் கூடாரம் எழுப்பப்படுகிறது. குருக்களுக்கான உடைகள் பற்றிய சட்டங்கள் வழங்கப்படுகின்றன் (விப 35-40).

==விடுதலைப் பயணம் நிகழ்ந்த காலம் யாது?

இப்பொருள் பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டை ஆண்ட பார்வோன்கள் முதலாம் சேத்தி (Seti I), இரண்டாம் ராம்செசு (Ramses II) என்போர் ஆவர். இருவருமே பெரிய கட்டடங்களைக் கட்டி எழுப்பினர்; அடிமைகளை வேலைக்கு அமர்த்தினர். அவர்கள் காலத்தின்போது இசுரயலர் எகிப்தில் அடிமைகளாக இருந்திருக்கலாம். எனவே, விடுதலைப் பயணம் கி.மு. 1280ஆம் ஆண்டளவில் நடந்திருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்கள் கணிப்பு.

==இசுரயேலின் விடுதலைப் பயணம் விடுதலை போராட்டங்களுக்கு முன்னோடி==

இசுரயேலர் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று கானான் நாட்டில் சென்று குடியேறிய நிகழ்ச்சி பிற்காலத்தில் பல விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னோடி ஆகியது. அடிமைத் தளைகளை அறுத்தெறுந்து, விடுதலை நோக்கிப் பயணம் செய்யும் குழுக்கள் இசுரயேலரின் அனுபவத்திலிருந்து பாடம் பயின்றனர்.

==விடுதலைப் பயணம் நூலிலிருந்து ஒரு பகுதி==
'''விடுதலைப் பயணம் 15:1-2, 4-5, 9-10, 11-13)'''

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.

அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.

அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்...

பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்;

அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்;

ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன...

எதிரி சொன்னான்: 'துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்;

கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்;

என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்.'

நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது;

ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.

ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்?

தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர்,

அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?

நீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்;

உம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்..."

== விடுதலைப் பயணம் ==
வரி 78 ⟶ 113:
| 122 - 151

==ஆதாரங்கள்==
<references/>

[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைப்_பயணம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது