நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
நீல உத்தமன் (சாங் நீல உத்தமன்) என்பவர் ஒரு சிற்றசரர். தென் சுமத்திராவின் பலேம்பாங்கைச் சேர்ந்த ஸ்ரீ விஜயா பேரரசின் பரம்பரை வாரிசுகளில் ஒருவர். சின்ன வயதில் இருந்தே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆசை அவரிடம் இருந்தது. பலேம்பாங் கடல் கரையோரத் தீவுகளுக்குச் சென்று பொருத்தமான ஓர் இடத்தைத் தேடினார். நீல உத்தமன் பல கப்பல் பயணங்களை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் பந்தான் தீவுக்குப் போக வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. பந்தான் தீவு ரியாவ் தீவுக் கூட்டத்தில் இருக்கிறது. பந்தான் தீவு ஓர் இராணியாரின் பார்வையில் இருந்தது. ஒரு நாள் பந்தான் தீவுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு தீவுக்கு வேட்டையாடச் சென்றார்.
 
===துமாசிக்===
===கண்ணில் பட்ட கலை மான்===
 
வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு கலை மான் கண்ணில் பட்டது. அதை விரட்டிக் கொண்டு ஒரு குன்றின் மீது ஏறினார். குன்றின் உச்சியை அடைந்ததும் அந்தக் கலைமான் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. அது மறைந்த இடத்தில் ஒரு பெரிய கல் பாறை இருந்த்து. நீல உத்தமன் அந்தக் கல் பாறையில் ஏறினான். கல் பாறையின் மேலே ஏறிப் பார்க்கும் போது ஒரு தீவு தெரிந்தது. வெள்ளை மணல் பரவிய கடல் கரை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல காட்சி அளித்தது. அந்த இயற்கையின் எழில் காட்சி அவரை மிகவும் கவர்ந்து விட்டது.
வரிசை 11:
 
இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.
===அதிசய விலங்கு===
 
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார். சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது