ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

*'''ஜெர்மனியின் சரணடைவு''': மே 6ம் தேதி மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை நடத்த டோனிட்ஸ் ஜெனரல் [[ஆல்ஃபிரட் யோட்ல்|யோடிலை]] அனுப்பினார். அவர்கள் முதலில் மேற்கத்திய நேச நாடுகளிடம் மட்டும் தான் ஜெர்மனி சரணடையும் என்ற நிலையைக் கொண்டிருந்தனர். [[சோவியத் யூனியன்|சோவியத் படைகளிடம்]] சிக்கும் படைகள் மிகக் கடுமையாக நடத்தப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும், சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்தால், ஜெர்மானிய வீரர்கள் மேற்கத்திய நேசநாட்டுப் படைகளிடம் சரணடைய வாய்ப்புக் கிட்டும் என்றும் எண்ணினர். ஆனால் முன்னரே [[யால்டா மாநாடு|யால்டா மாநாட்டில்]] ஜெர்மனி அனைத்து நேச நாடுகளிடமும் சமமாக சரணடைய வேண்டுமென்று சோவியத் யூனியனும் மேற்கத்திய நேச நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. இதனால் ஐரோப்பாவில் நேசநாட்டுப் படைகளின் தலைமைத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] ஜெர்மனியின் தனிச்சரணடைவை ஏற்க மறுத்து விட்டார். பேச்சு வார்த்தகளை வேண்டுமென்று இழுத்தடித்தால், நேசநாட்டுப் படைகள் ஜெர்மானிய வீரர்களின் சரணை ஏற்க மறுத்துவிடும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
 
:வேறு வழியின்றி மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி [[பிரான்சு|பிரான்சின்]] ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]] சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
*'''ஐரோப்பாவில் வெற்றி''': ஜெர்மனி சரணடைந்த செய்தி பரவி [[அமெரிக்கா]]விலும், [[மேற்கு ஐரோப்பா]]விலும் மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வி. ஈ தினம்“ (VE Day - Victory in Europe Day) என்று கொண்டாடப்படுகிறது. சோவியத் யூனியனிலும், [[கிழக்கு ஐரோப்ப்பா|கிழக்கு ஐரோப்பிய]] நாடுகளிலும் மே 9 ம் தேதி வி. ஈ தினம் என்று கொண்டாடப்படுகிறது. (கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள கால வித்தியாசக் காரணத்தால்)
 
*ஐரோப்பாவில் வெற்றி
*போர் நிறுத்தம்
*டோனிட்சின் அரசு கலைப்பு
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/641520" இருந்து மீள்விக்கப்பட்டது